search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ ரூட்
    X
    ஜோ ரூட்

    ஜோ ரூட் இன்னும் டி20 அணியின் திட்டத்தில் உள்ளார்: இங்கிலாந்து கேப்டன் மோர்கன் சொல்கிறார்

    ஜோ ரூட் அணியில் இருந்து நீக்கப்பட்டாலும், இன்னும் டி20 அணிக்கான திட்டத்தில்தான் உள்ளார் என இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
    கிரிக்கெட்டில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் விளையாடும் ஜோ ரூட்டுக்கு டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் டெஸ்ட் போட்டிக்கு என ஒரு அணியையும், ஒயிட்-பால் போட்டிக்கு ஒரு அணி எனவும் தயார்படுத்தியுள்ளது.

    ஜோ ரூட்டுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டி20 போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் இனிமேல் இங்கிலாந்து டி20 அணியில் விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் டி20 அணிக்கான திட்டத்தில்தான் ஜோ ரூட் உள்ளார் என்று இங்கிலாந்து ஒயிட்-பால் அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘நாங்கள் ஜோ ரூட் உடன் பேசினோம். அவருக்கான எதிர்காலம் நிச்சயம் உள்ளது. தற்போதைய நிலையில் அவருக்கு ஆடும் லெவன் அணியில் இடமில்லை என்ற பேச்சு நடைபெற்று கொண்டிருந்தது. நாங்கள் அவரை எல்லாவித கிரிக்கெட் போட்டிக்கும் விளையாட அழைத்துச் செல்ல விரும்பவில்லை.

    ஜோ ரூட் டி20 போட்டியில் விளையாட விரும்புகிறார். அவருக்கு கவுன்ட்டி போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கவில்லை. தற்போது இந்த இடைவெளி அவருக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும்  என நாங்கள் உணர்கிறோம்’’ என்றார்.
    Next Story
    ×