search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் சூப்பர் லீக்
    X
    பாகிஸ்தான் சூப்பர் லீக்

    பாகிஸ்தான் சூப்பர் லீக்: ஒத்திவைக்கப்பட்ட பிளே-ஆஃப்ஸ், இறுதி போட்டிக்கான தேதி அறிவிப்பு

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் மீண்டும் நவம்பரில் நடத்தப்படுகின்றன.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆண்டுதோறும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த வருடத்திற்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் பிப்ரவரி மாதம் தொடங்கியது. மார்ச் மாதம் 17-ந்தேதி வரை நடைபெற்ற நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

    லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் பிளே-ஆஃப்ஸ் மற்றும் இறுதி போட்டி ஆகியவற்றை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

    குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் 1 ஆகியவை நவம்பர் 14-ந்தேதியும், எலிமினேட்டர் 2 நவம்பர் 15-ந்தேதியும், இறுதிப் போட்டி நவம்பர் 17-ந்தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் அனைத்தும் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடத்தப்படும். வீரர்களுக்கான பயோ-செக்யூர் நடைமுறை கடைபிடிக்கப்படும். தற்போதையை திட்டத்தில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க முடிவு எடுக்கவில்லை. அக்டோபர் மாதம் சூழ்நிலையை பார்த்து முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×