search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின்
    X
    அஸ்வின்

    அந்த 6 நாள் எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான நேரம்: அஸ்வின் சொல்கிறார்

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டது எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான நேரம் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகம் சென்ற கிரிக்கெட் வீரர்கள் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

    அப்போது மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும். நெகட்டிவ் முடிவு வந்த பின்னர், பாதுகாப்பு வளைத்திற்குள் வந்து பயிற்சி மேற்கொண்டு, தொடருக்கு தயாராக வேண்டும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர மற்ற ஏழு அணிகளும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துக் கொண்டு பயிற்சியை தொடங்கிவிட்டன.

    இந்நிலையில் தனிமையில் இருந்த அந்த ஆறு நாட்கள் மிகவும் மோசமான நேரம் என்று அஸ்வின்  தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘கடந்த ஐந்து ஆறு மாதங்களாக நான் வீட்டில் இருந்தேன். ஆனால், ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தேன். யூடியூப் சேனல் மூலம் எனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன். இன்ஸ்டாகிராம் லைவ் போன்றவற்றை ஆக்கிரமிக்க முயற்சி செய்தேன்.

    ஆனால் என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த ஆறு நாட்கள் எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான நேரம். ஏனென்றால், முதல்நாளில் நான் வெளியே பார்க்கும்போது, துபாய் ஏரியை பார்க்க முடிந்தது.

    வலது பக்கம் பார்க்கும்போது என்னால் புர்ஜ் கலிபாவை பார்க்கமுடியும், மிகவும் சிறப்புமிக்க இடம். இருந்தாலும் எத்தனை நாட்களுக்கு வெளியில் இருந்தே பார்க்க முடியும்?. மேலும், வெயில் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. நான் பொதுவாக அதிக அளவில் செல்போன் பார்க்க மாட்டேன், அதை நீண்ட நேரம் பயன்படுத்த மாட்டேன். ஆனால் கடந்த வாரத்தில் எனது முழு டேட்டாவும் தீர்ந்து விட்டது. அல்லது ஆறு மணி நேரத்திற்கு மேல் பார்த்துள்ளேன்’’ என்றார்.
    Next Story
    ×