என் மலர்

  செய்திகள்

  சாம் கர்ரன், ஹசில்வுட்
  X
  சாம் கர்ரன், ஹசில்வுட்

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹசில்வுட், சாம் கர்ரன் முதல் 2 ஆட்டத்தில் ஆடவில்லை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  13-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதிமுதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.
  ஐ.பி.எல். போட்டிக்காக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஐ.பி.எல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீரர் தீபக் சாஹர், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் 14 நாட்கள் தனிமை முடிந்த பிறகே அணியோடு இணைந்து கொள்ள முடியும். பரிசோதனைக்கு பிறகே அவர்களது நிலை பற்றி தெரியவரும்.

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர்களில் ஆல்-ரவுண்டர் வாட்சன் (ஆஸ்திரேலியா), பேட்ஸ்மென் டு பிளிஸ்சிஸ், பந்துவீச்சாளர் நிகிடி (தென் ஆப்பிரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்களே தற்போது அணியோடு உள்ளனர்.

  பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்), சான்ட்னெர் (நியூசிலாந்து), இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் கரீபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்) போட்டி முடிந்த பிறகு 13-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வருவார்கள்.

  சி.எஸ்.கே. அணியில் உள்ள வேகப்பந்து வீரர் ஹசில்வுட் (ஆஸ்திரேலியா), ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் (இங்கிலாந்து) ஆகியோர் முதல் 2 ஆட்டத்தில் விளையாட மாட்டார்கள். இருவரும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஒருநாள் தொடர் முடிந்த பிறகே அணியோடு இணைந்து கொள்வார்கள்.

  இருவரும் வருகிற 17-ந்தேதி துபாய் வருவார்கள் என்று சி.எஸ்.கே. அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்தார்.

  சி.எஸ்.கே. அணியோடு இணையும் வெளிநாட்டு வீரர்கள் 6 நாட்கள் தனிமை படுத்தப்படுவார்கள். அப்போது அவர்களுக்கு 2 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸுடன் தொடக்க ஆட்டத்திலும், 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுடனும் (21-ந்தேதி) மோதுகிறது. இந்த 2 ஆட்டத்திலும் ஹசில்வுட்டும், சாம் கர்ரன் விளையாட மாட்டார்கள்.
  Next Story
  ×