என் மலர்
செய்திகள்

10 ஓவர் கிரிக்கெட் லீக்
10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை
டி20 கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்துள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் 10 ஓவர் கிரிக்கெட் லீக்கையும் அறிமுகம் செய்கிறது
இலங்கை கிரிக்கெட் போர்டு நவம்பர் மாதத்தில் டி20 கிரிக்கெட் லீக்கை நடத்துகிறது. ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தலால் வெளிநாட்டு வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை இருந்ததால் நவம்பர் மாத்திற்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் டிசம்பர் மாதம் 10 ஓவர் கிரிக்கெட் லீக்கை நடத்த இருக்கிறது. இந்தத் தொடர் டிசம்பர் மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் போர்டு கூட்டத்தில் நிர்வாக கமிட்டி ஒருமித்த கருத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளது.
எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணிகளும் தலா ஆறு வெளிநாட்டு வீரர்களை ஏலம் எடுக்க அனுமதி வழங்கப்படும். போட்டிகள் அனைத்தும் இரண்டு மைதானங்களில் நடைபெற இருக்கிறது. அணியின் பெயர்கள் மற்றும் நடைபெறும் இடங்கள் இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
இலங்கை கிரிக்கெட் போர்டு நடத்தும் டி20 லீக் நவம்பர் 14-ந்தேதி முதல் டிசம்பர் 6-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் ஐந்து அணிகள் 23 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Next Story