search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார்னே, கங்குலி
    X
    வார்னே, கங்குலி

    ஐபிஎல் போட்டியில் ஒரு பவுலருக்கு ஐந்து ஓவர்: வார்னே ஆலோசனையை கங்குலி ஏற்பாரா?

    ஐபிஎல் லீக்கில் பந்து வீச்சாளர்களுக்கு தலா ஐந்து ஓவர்கள் வழங்க வேண்டும் என ஷேன் வார்னே ஆலோசனை வழங்கிய நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி அதை ஏற்பாரா? எனத் தெரியவில்லை.
    உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 லீக் முதன்மையானதாக விளங்குகிறது. இதில் விளையாடும் வீரர்களுக்கு சம்பளம் அதிக அளவில் வழங்கப்படுகிறது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    ஐபிஎல் தொடரில் ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக நான்கு ஓவர்கள்தான் வீச முடியும். இந்த விதியை மாற்றி ஒரு பவுலர் ஐந்து ஓவர்கள் வீச அனுமதிக்க வேண்டும் என ஷேன் வார்னே ஆலோசனை வழங்கியுள்ளார்.

    மேலும், ஐபிஎல் இதை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வார்னே கங்குலிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து வார்னே தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘டி20 லீக்கில் பந்து வீச்சாளர்கள் தலா ஐந்து ஓவர்கள் வீச வேண்டும் என்று நான் கூறிய ஆலோசனைக்கு ஏராளமான வரவேற்புகள் கிடைத்துள்ளன. இது ஐசிசி-யால் நடைமுறைப்படுத்த வேண்டும். செப்டம்பர் 19-ந்தேதி நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் முயற்சி செய்து பார்க்கலாம்’’ எனப் பதிவிட்டுள்ளார். டுவிட்டரில் கங்குலியை டேக் செய்து நடைமுறைப்படுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    வார்னே ஆலோசனைக்கு ‘‘சூப்பர் ஐடியா, 6 பேட்ஸ்மேன், கீப்பர், 4 பவுலர்கள். போட்டி இன்னும் முன்னேற்றம் அடையும்’’ என்றும், ‘‘இந்த முறையால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு இடையில் சரியான பேலன்ஸ் இருக்கும். குறிப்பாக மேட்ச் கடினமாக செல்லும்போது இது சிறந்ததாக இருக்கும்’’ என்றும் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×