search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகமது ஷமி
    X
    முகமது ஷமி

    கடும் வெப்பம்: வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பது முக்கியமானது என்கிறார் முகமது ஷமி

    ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான வெப்பம் நிலவுவதால், அதற்கேற்ப வீரர்கள் மாறிக்கொள்வது கடினமான சவால் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் முக்கியமான வீரர்களை தொடர்ந்து போட்டியில் விளையாட அனுமதிப்பதில்லை. அவர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்புகள் வழங்கி வருகிறது. இதன் மூலம் வீரர்களின் காயம் தவிர்க்கப்படுகிறது.

    ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணிகளும் 14 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கிடைக்காது. இதனால் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கிறது. அங்கு அதிகமான வெப்பம் நிலவுகிறது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பது முக்கியமானது என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘இந்தியாவை ஒப்பிடும்போது வெப்பநிலை மிகவும் அதிகமாக உள்ளது. நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தசைப்பிடிப்புகள் போன்ற பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த விசயங்களை நாம் நினைப்பில் வைத்திருக்க வேண்டும்.

    ஆடுகளங்கள் மாறுபட்டதால் கடினமானதாகும். ஆகவே, பணிச்சுமையை நிர்வகிப்பது முக்கியமானது. ஆனால் அதை நிர்வகிக்க முடியாது என்பது அவ்வளவு கடினம் அல்ல. நாம் எப்படி நம்முடைய பணிச்சுமையை நிர்வகிக்கிறோம் என்பதை சார்ந்தது.

    வீட்டை விட்டு வெளியேறி துபாய்க்கு வந்ததை சிறப்பானதாக உணர்கிறோம். நமக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டை விளையாட இருப்பதற்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். ஆகவே, உணர்வை  ஒப்பிட இயலாது. ஒவ்வொருவரும் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வது சிறந்த பகுதி. இந்தியாவில், ஐபிஎல் போட்டி அனைவரின் முகத்திலும் சிரிப்பை வரவழைக்கும்’’ என்றார்.
    Next Story
    ×