என் மலர்
செய்திகள்

செரீனா வில்லியம்ஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்- அரையிறுதியில் செரீனாவுடன் அசரென்கா மோதல்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் செரீனாவுடன் அசரென்கா விளையாட உள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. நேற்று மகளிர் ஒற்றைய பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 6 முறை சாம்பியன் பட்டம் பெற்ற செரீனா வில்லியம்ஸ், காலிறுதி ஆட்டத்தில் பல்கேரிய வீராங்கனை ஸ்வெட்டானா பிரான்கோவாவை எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் 4-6, 6-3, 6-2 என்ற செட்கணக்கில் செரீனா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டத்தில் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த செரீனா, இப்போட்டி தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும், தொடர்ந்து விட்டுக் கொடுக்காமல் ஆடியதாகவும் கூறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஷெல்பி ரோஜர்சை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்திய நவோமி ஒசாகா அரையிறுதியை உறுதி செய்தார். இதேபோல் இன்று நடைபெற்ற ஒரு காலிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா 6-1, 6-0 என்ற நேர்செட்களில் எலிஸ் மெர்டன்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், அசரென்கா பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

Next Story