என் மலர்
விளையாட்டு
- முதல் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பந்தாடியது.
- பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனுடன் இன்று மோதுகிறது.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பந்தாடியது. பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனுடன் இன்று மோதுகிறது.
இதையடுத்து, நாளை மறுதினம் துபாயில் அரங்கேறும் முக்கியமான லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இவ்விரு அணிகள் முதல் முறையாக சந்திக்க இருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய வீரர்கள் ஆட்டத்தின் மீது மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இந்தியாவிடம் சிறந்த அணி உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். மற்ற விஷயங்களால் கவனச்சிதறல் ஏற்படாமல், தங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும். களம் இறங்கி வெற்றி பெறுங்கள். அரசாங்கம் தங்களது வேலையை பார்த்துக் கொள்ளும். வீரர்கள் தங்களது வேலையை சரியாக செய்ய வேண்டும். அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா நன்றாக ஆடியது. கோப்பையையும் நமது அணி வெல்லும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தாய்லாந்தின் பக்காபொன் தீரரசாகுல்-சுக்புன் ஜோடி
உடன் மோதியது.
இதில் தாய்லாந்து ஜோடி முதல் செட்டை 21-18 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி அடுத்த இரு செட்களை 21-15, 21-11 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் காலிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி மலேசிய ஜோடியை சந்திக்கிறது.
- முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வங்கதேசம் 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அபுதாபி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் வங்கதேசம், ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. நிசாகத் கான் 42 ரன்னும், ஜீஷன் அலி 30 ரன்னும், யாசிம் முர்தசா 28 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது, ரிஷாத் ஹொசைன், தன்ஷிம் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. பர்வேஸ் ஹொசைன் 19 ரன்னும், தன்சித் ஹசன் 14 ரன்னும் எடுத்தனர்.
3-வது விக்கெட்டுக்கு லிட்டன் தாஸ், தவ்ஹித் ஹிருதோய் ஜோடி இணைந்தது. இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
அதிரடியாக ஆடிய லிட்டன் தாஸ் அரை சதம் கடந்து 59 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், வங்கதேசம் 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தவ்ஹித் ஹிருதோய் 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
- புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக ரோஜர் பின்னி கடந்த இரு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவருக்கு சமீபத்தில் 70 வயது நிறைவடைந்தது.
பி.சி.சி.ஐ. விதிகளின்படி 70 வயது கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்பதால் ரோஜர் பின்னி தனது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்கிடையே, பி.சி.சி.ஐ. புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் எஸ்.ஆர்.டி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேன்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பி.சி.சி.ஐ தலைவர் பதவிக்கு சச்சின் தெண்டுல்கர் பரிசீலிக்கப்படுவதாகவோ அல்லது பரிந்துரைக்கப்படுவதாகவோ சில தகவல்கள், வதந்திகள் பரவி வருவதாக எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். ஆதாரமற்ற ஊகங்களுக்கு நம்பகத்தன்மை அளிப்பதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சக வீரரான எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார்.
இதில் பிரனாய் முதல் செட்டை 21-15 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய லக்ஷயா சென் அடுத்த இரு செட்களை 21-18, 21-10 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-19, 12-21, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரரை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி மோதுகின்றனர்.
- ஹாங்காங் கேப்டன் நிசாகத் கான் 42 ரன்கள் அடித்தார்.
- தொடக்க வீரர் ஜீஷன் அலி 30 ரன்கள் சேர்த்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் வங்கதேசம்- ஹாங்காங் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஹாங்காங் அணி வீரர்கள் நம்பிக்கையுடன் விளையாடினர்.
தொடக்க வீரர் அன்ஷி ராத் 4 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் ஜீஷன் அலி 34 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிசாகத் கான், கேப்டன் யாசிம் முர்தாசா நிலைத்து நின்று விளையாடினர். இதனால் ஹாங்காங் 14.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
நிசாகத் கான் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யாசிம் முர்தசா 28 ரன்னில் வெளியேறினார். இறுதியாக ஹாங்காங் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.
- பாட்னாவுக்கு கடைசி ரெய்டு வாழ்வா? சாவா? ரெய்டாக அமைந்தது.
- ரெய்டர் சைடு கோட்டில் மிதித்து Foul ஆனதால் யு.மும்பைக்கு ஒரு புள்ளி கிடைத்தது.
புரோ கபடி லீக்கின் 27ஆவது போட்டி இன்று இரவு நடைபெற்றது. இதில் யு.மும்பை- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. முதல் பாதி நேர ஆட்டத்தில் 23-15 என யு.மும்பை முன்னிலை பெற்றது.
2ஆவது பாதி நேர ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் வீரர்கள் அபாரமாக விளையாடினர். இதனால் புள்ளிகளை குவித்தனர். கடைசி ரெய்டுக்கு முன்னதாக இரண்டு அணிகளும் 39-39 என சம புள்ளிகளில் இருந்தன. கடைசி ரெய்டு வாய்ப்பு பாட்னாவுக்கு கிடைத்தது.
மேலும் இது வாழ்வா? சாவா? (Do Or Die) ஆகும். ஆகவே புள்ளி எடுக்க வேண்டும். இல்லையெனில் ரெய்டர் ஆட்டமிழக்க நேரிடும். புள்ளி எடுக்கவில்லை என்றால் ரெய்டர் அவுட்டாகி யு.மும்பை வெற்றி பெற்று விடும். யு.மும்பை சைடு 5 வீரர்கள் மட்டுமே இருந்ததால் போன்ஸ் புள்ளியும் கிடைக்காது.
இந்த நிலையில் பாட்னா அணியின் அயன் ரெய்டு செய்தார். அவரால் யாரையும் தொட முடியவில்லை. இறுதியாக முயற்சிக்கும்போது சைடு லைனை மிதித்து பவுல் (Foul) முறையில் ஆட்டமிழந்தார். இதனால் யு.மும்பை 40-39 என த்ரில் வெற்றி பெற்றது.
- முதல் போட்டியில் கொரியாவை 4-2 என இந்தியா வீ்ழ்த்தியிருந்தது.
- கடைசி போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இன்று சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-4 என மோசமான தோல்வியை சந்தித்தது. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் கொரியாவை இந்தியா 4-2 என வீழ்த்தியிருந்தது. குரூப் சுற்றில் இந்தியா 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு டிரா மூலம் முதலிடம் பிடித்தது.
தற்போது சூப்பர் 4 சுற்றில் சீனா முதல் இடத்திலும், இந்தியா 2ஆவது இடத்திலும் உள்ளது. கடைசி போட்டியில் நாளைமறுநாள் ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது. அதேவேளையில் கொரியா சீனாவை எதிர்கொள்கிறது.
கொரியா தோல்வியடைந்து, ஜப்பானுக்கு எதிராக இந்தியா டிரா செய்தாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை சீனாவுக்கு எதிராக கொரிய வெற்றி பெற்றால், ஜப்பானுக்கு எதிராக இந்தியா கட்டாயம் வெற்றி பெற்று கோல் வித்தியாசத்தில் கொரியாவை விட முன்னணியில் பெற வேண்டும்.
- இரு அணிகளும் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளன.
- ஹாங்காங் அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி அபுதாபியில் நடக்கிறது. இதில் வங்கதேசம்- ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்கதேச அணி கேப்டன் லிட்டோன் தாஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இரு அணிகளும் பி பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஹாங்காங் அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்திருந்தது.
- 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது.
- பாகிஸ்தான் போட்டிகள் மட்டும் கொழும்பில் நடத்தப்படுகிறது.
8 அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான 13ஆவது உலகக் கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது. 33 நாட்களாக நடைபெறும் இந்த மெகா தொடரில், 31 போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.
இந்த நிலையில் போட்டிக்கான நடுவர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இடம் பிடித்துள்ள 14 கள நடுவர்கள், நான்கு போட்டி நடுவர்கள் (match referee) என அனைவரும் பெண்கள் ஆவார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக முழுவதும் பெண்கள் கொண்ட நடுவர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது.
கள நடுவர்கள் பட்டியலில் கிளைர் போலாசாக், ஜேக்லின் வில்லியம்ஸ், சுயே ரெட்பெர்ன் உள்ளிட்ட சிறந்த பெண் கள நடுவர்கள் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே இரண்டு உலக கோப்பை தொடரில் நடுவர்களாக பணியாற்றியுள்ளனர். லாரன் அகன்பாக் என்பவர் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராக பணியாற்றியவர்.
மகளிர் கிரிக்கெட்டின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், விளையாட்டின் அனைத்துத் துறைகளிலும் இன்னும் பல வெற்றிக் கதைகளுக்கு வழி வகுக்கும் என்று ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வருகிற 30ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனைத்தும் கொழும்பில் நடைபெற இருக்கிறது.
இதற்கு முன்னதாக பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி, இரண்டு ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் பெண்கள் மட்டுமே நடுவராக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
- 2-வது டி20 போட்டி நாளை நடக்கிறது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி கார்டிப் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
மழை காரணமாக இந்த போட்டி 9 ஓவர்கள் ஆட்டமாக தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நாளை நடக்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக விலகி உள்ளார்.
- இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி டெல்லியாகும்.
- இன்றுடன் விசாகப்பட்டினத்தில் போட்டிகள் முடிகிறது.
விசாகப்பட்டினம்:
12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் 45-37 என்ற புள்ளிக் கணக்கில் மும்பையை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. மும்பை அணிக்கு 2-வது தோல்வி ஏற்பட்டது.
மற்றொரு ஆட்டத்தில் புனே அணி 43-32 என்ற கணக்கில் உ.பி.யோத்தாசை தோற்கடித்தது. புனே 4 வெற்றியுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. உ.பி. அணிக்கு 2-வது தோல்வி ஏற்பட்டது.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட் டியில் மும்பை-பாட்னா அணிகள் மோதுகின்றன. மும்பை அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. பாட்னா அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தபாங் டெல்லி-குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி டெல்லியாகும். அந்த அணி தான் மோதிய 4 ஆட்டத்திலும் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. டெல்லி அணி பெங்களூருவை 41-34 என்ற கணக்கிலும், புனேவை கோல்டன் ரைடிலும், ஜெய்ப்பூரை 36-35 என்ற கணக்கிலும், பெங்களூருவை 45-34 என்ற கணக்கிலும் தோற்கடித்தது.குஜராத்தை வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
குஜராத் அணி 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் உள்ளது.
இன்றுடன் விசாகப்பட்டினத்தில் போட்டிகள் முடிகிறது. நாளை முதல் 2-வது கட்ட போட்டிகள் ஜெய்ப்பூரில் தொடங்குகிறது.






