என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய அணி முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    • இந்திய அணி அடுத்த போட்டியில் பாகிஸ்தானை வரும் 14-ந் தேதி எதிர்கொள்கிறது.

    ஆசிய கோப்பை தொடர் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி அடுத்த போட்டியில் பாகிஸ்தானை வரும் 14-ந் தேதி எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்யக்கோரிய உச்சநீதிமன்றத்தில் சட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

    அந்த மனுவில், நாட்டு நலனை விட கிரிக்கெடை மேலானதாக நினைக்ககூடாது என சட்டக்கல்லூரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர்.

    மேலும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டுடன் கிரிக்கெட் விளையாடுவது எதிர்மறையான கருத்தை பிரதிபலிக்கும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இதனை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெறட்டம் எனவும் தெரிவித்துள்ளது.

    • இந்திய அணி 4.3 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் ஆட்டநாயகானக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

    ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த எமிரேட்ஸ் அணி 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4, வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய வீரர் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் ஆட்டநாயகன் விருதை குல்தீப் தட்டிச் சென்றுள்ளார்.

    டி20 கிரிக்கெட்டில் கடைசியாக அவர் 2018 -ம் ஆண்டு ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.

    மேலும் 7 ரன் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஆசிய கோப்பை டி20 போட்டியில் இது 2-வது சிறந்த பந்துவீச்சாகும். புவனேஷ்வர் குமார் 2022-ம் ஆண்டு துபாயில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 4 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாகும்.

    • ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் சூர்யகுமார் செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமீரகம் அணி 13.1 ஓவரில் 57 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த ஒரு செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    13-வது ஓவரில் ஷிவம் துபே பந்து வீச ஓடி வரும் போது இடுப்பில் வைத்திருந்த சிறிய துண்டு கிழே விழுந்தது. அதை கவனிக்காமல் துபே பந்து வீசுவார். அந்த ஷாட்பிட்ச் பந்தை ஐக்கிய அரபு அமீரக வீரர் ஜூனைத் சித்திக் அடிக்க முயற்சித்த போது, அது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் கைக்கு சென்றது. அப்போது ஜூனைத் சித்திக் துண்டு கிழே விழுந்து விட்டதாக துபேவிடம் கூறுவார். அப்போது அவர் கவனக்குறைவாக கிரீசை விட்டு சற்று வெளியே நின்றார்.

    உடனடியாக சஞ்சு சாம்சன் ஸ்டம்பு மீது பந்தை எறிந்து ஸ்டம்பிங் கேட்டார். ரீப்ளேவுக்கு பிறகு 3-வது நடுவரும் அவுட் என தீர்ப்பளித்தார்.

    இதற்குள் இந்திய கேப்டன் சூர்யகுமார் இது உண்மையான விளையாட்டின் உத்வேகத்துக்கு நல்லதல்ல என கூறி அப்பீலை வாபஸ் பெறுவதாக கள நடுவர்களிடம் கூறினார். அவரது பெருந்தன்மையால் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை பெற்ற ஜூனைத் சித்திக் (0) அதே ஓவரிலேயே கேட்ச் ஆகிப் போனார்.

    • முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 57 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமீரகம் அணி 13.1 ஓவரில் 57 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றி பெற்றது.

    எமிரேட்ஸ் அணியை 57 ரன்னில் முடக்கிய இந்திய அணி அந்த இலக்கை 4.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்தியா அதிவேகமாக விரட்டிப்பிடித்த இலக்கு இது தான். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு இதே இடத்தில் நடந்த ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 6.3 ஓவர்களில் இலக்கை எட்டியதே இந்தியாவின் துரித சேசிங்காக இருந்தது.

    • வெறும் 10 வீராங்கனைகள் மட்டுமே இந்த பிரிவில் களம் கண்டனர்.
    • அரியானாவைச் சேர்ந்த 26 வயதான நுபுர், இந்திய குத்துச்சண்டை ஜாம்பவான் ஹவாசிங்கின் பேத்தி ஆவார்.

    லிவர்பூல்:

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 80 கிலோவுக்கு மேலான பிரிவில் நேரடியாக கால்இறுதியில் கால்பதித்த இந்திய வீராங்கனை நுபுர் ஷியாரன் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஒல்டினோ சோடிம்போவாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

    இதன் மூலம் குறைந்தது வெண்கலப்பதக்கத்தை அவர் உறுதி செய்தார். அரியானாவைச் சேர்ந்த 26 வயதான நுபுர், இந்திய குத்துச்சண்டை ஜாம்பவான் ஹவாசிங்கின் பேத்தி ஆவார்.

    80 கிலோவுக்கு மேல், ஒலிம்பிக்கில் இடம் பெறாத பிரிவாகும். அதனால் வீராங்கனைகள் மத்தியில் வரவேற்பு இல்லை. வெறும் 10 வீராங்கனைகள் மட்டுமே இந்த பிரிவில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு கால்இறுதியில் 2 முறை உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன் 0-5 என்ற கணக்கில் (51 கிலோ) துருக்கியின் ககிரோக்லு புஸ் நாசிடம் தோற்று ஏமாற்றம் அளித்தார்.

    முன்னதாக ஆண்கள் பிரிவில் ஜதுமணி சிங் (48 கிலோ), அபினாஷ் ஜம்வால் (65 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவில் வெற்றி பெற்று கால்இறுதியை எட்டினர்.

    • அபிஷேக் சர்மா 16 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ரன்கள் விளாசினார்.
    • சுப்மன் கில் 9 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ஆகிய இருவரும் இடம் பிடித்தனர்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 57 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார். மொத்தமாக 2.1 ஓவரில் 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஷிவம் துபே 2 ஓவரில் 4 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    யுஏஇ அணி சார்பில் தொடக்க வீரர்கள் ஷரஃபு (22), கேப்டன் முகமது வாசீம் (19) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர்.

    பின்னர் 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே சிக்சர் விளாசினார். அடுத்த பந்தில் பவுண்டரி விளாசினார். அடுத்த நான்கு பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்லை. இதனால் முதல் ஓவரில் இந்தியா 10 ரன்கள் அடித்தது. அடுத்த ஓவரில் சுப்மன் கில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் அடித்தது.

    3ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தன. இதனால் இந்தியா 3 ஓவரில் 38 ரன்கள் சேர்த்தது. 4ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் சிக்ஸ் அடித்த அபிஷேக் சர்மா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்தார்.

    2ஆவது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் சூர்யகமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் யாதவ் 4ஆவது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் இந்தியா 4 ஓவரில் முடிவில் 54 ரன்கள் சேர்த்தது. 5ஆவது ஓவரின் 3வது பந்தை சுப்மன் கில் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 4.3 ஓவரில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சுப்மன் கில் 9 பந்தில் 20 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 2 பந்தில் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • முதல் பாதி நேர ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் 27-11 என முன்னிலை பெற்றது.
    • 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் யு.மும்பை 26-18 புள்ளிகள் பெற்றாலும் தோல்வியை சந்தித்தது.

    புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்- யு.மும்பை அணிகள் மோதின. இதில் தெலுங்கு டைட்டன்ஸ் 45-37 என 8 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதல் பாதி நேர ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் 27-11 என முன்னிலை பெற்றது. 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் யு.மும்பை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 26-18 என 8 புள்ளிகள் முன்னிலை பெற்றனர். ஆனால் முதல்பாதி நேர ஆட்டத்தில் 16 புள்ளிகள் பின் தங்கியதால் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.

    தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பரத் 13 புள்ளிகள் பெற்றார். அடுத்ததாக சேட்டன் சாகு 6 புள்ளிகள் பெற்றார்.

    யு.மும்பை அணி சார்பில் அமிர் மொகமது, சந்தீப் ஆகியோர் தலா 7 புள்ளிகள் பெற்றனர். சதீஷ் கண்ணன் 6 புள்ளிகள் பெற்றார்.

    • குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    • ஷிவம் துபே 2 ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ஆகிய இருவரும் இடம் பிடித்தனர்.

    யுஏஇ அணியின் ஷரஃபு, முகமது வாசீம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் ஷரஃபு 2 பவுண்டரி விளாசினார். அடுத்த ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரிலும் ஷரஃபு ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரை அக்சர் படேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் பறக்க விட்டார். இதனால் யுஏஇ 3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்தது.

    4ஆவது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் ஷரஃபு (17 பந்தில் 22 ரன்) க்ளீன் போல்டானார். அடுத்து ஷோஹைப் களம் இறங்கினார். இவர் வருண் சக்ரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    6ஆவது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் முகமது வாசீம் 3 பவுண்டரிகள் விரட்டினார். இதனால் பவர்பிளேயில் யுஏஇ 41 ரன்கள் சேர்த்தது.

    8ஆவது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார். ராகுல் சோப்ரா 3 ரன்னிலும், முகமது வாசீம் 19 ரன்னிலும், ஹர்ஷித் கவுசிக் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதனால் யுஏஇ 50 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    அதன்பின் 7 ரன்னுக்குள் அடுத்த 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 57 ரன்னில் சுருண்டது.

    குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஷிவம் துபே  3 விக்கெட்டும் வீழ்த்தினர். பும்ரா, அக்சார் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். யுஏஇ 47 ரன்னுக்கு 2 விக்கெட் என்ற நிலையில், அடுத்த 10 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது.

    • இங்கிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் 5 டெஸ்ட் போட்டியிலும் டாஸ் தோற்றார்.
    • சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா அனைத்து போட்டிகளிலும் டாஸ் தோற்றார்.

    இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து டாஸில் தோல்வியடைந்து வந்தது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் தொடர்ந்து 5 முறை டாஸில் தோல்வியடைந்தார்.

    ஐசிசி சாம்பியன்ஷிப்பில் ரோகித் சர்மா தொடர்ந்து டாஸ் தோற்று வந்தார். இந்திய அணி கேப்டன்களுக்கும், டாஸ்க்கும் எட்டாம் பொருத்தமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கெதிராக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் டாஸ் வென்றார். இதன்மூலம் இந்திய அணி தொடர்ந்து 15 முறை டாஸ் தோற்று வந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

    சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் தோற்றது. அதன்பின் தொடர்ந்து தோற்று வந்த நிலையில், தற்போது சூர்யகுமாரே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    • சஞ்சு சாம்சன், சுப்மன் கில், குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளனர்.
    • வேகப்பந்து வீச்சில் பும்ரா மட்டுமே முதன்மை பவுலராக உள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இன்றைய போட்டியில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணி விவரம்:-

    அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

    • ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, தைவானின் சூ லி-யாங் உடன் மோதினார்.

    இதில் தைவான் வீரர் முதல் செட்டை 21-15 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி அடுத்த இரு செட்களை 21-19, 21-13 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 21-16, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதல் காலிபகுதி ஆட்ட நேர முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
    • 3ஆவது கால்பகுதி ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்தது வெற்றிக்கு உதவியது.

    பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியா- கொரியா அணிகள் மோதின. இதில் இந்தியா 4-2 என வெற்றி பெற்றது.

    ஆட்டம் தொடங்கிய 2ஆவது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை பால்கே வைஷ்ணவி வித்தால் முதல் கோல் அடித்தார். இதனால் முதல் கால்பகுதி (முதல் 15 நிமிடம்) ஆட்டத்தில் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2ஆவது கால்பகுதி ஆட்டத்தில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்கவில்லை.

    3ஆவது கால்பகுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் இரண்டு கோல்களும், கொரிய வீராங்கனைகள் ஒரு கோலும் அடித்தனர். ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் குமாரி சங்கீதா கோல் அடித்தார். அதேவேளையில் கொரியா வீராங்கனை கிம் யுஜினும் கோல் (பெனாடில் கார்னர்) அடித்தார். பின்னர் 40ஆவது நிமிடத்தில் லால்ரெம்சியாமி கோல் அடிக்க 3ஆவது கால்பகுதி ஆட்டம் முடிவில் இந்தியா 3-1 என முன்னிலை பெற்றது.

    4ஆவது மற்றும் கடைசி கால்பகுதி ஆட்டத்தில் 53ஆவது நிமிடத்தில் தென்கொரிய வீராங்கனை கிம் யுஜின் பெனால்டி கார்னரை பயன்படுத்தி கோல் அடித்தார். ஆட்டம் முடிவடைவதற்கு முந்தைய நிமிடமான 59ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை பிசால் ருதுஜா தாதாசோ கோல் அடிக்க இந்தியா 4-2 என வெற்றி பெற்றது.

    நாளை இந்தியா சீனாவை எதிர்கொள்கிறது. 13ஆம் தேதி சிங்கப்பூருக்கு எதிராக விளையாடுகிறது. சூப்பர்4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

    ×