என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    Asia Cup 2025 குல்தீப் யாதவ், ஷிவம் துபே அபாரம்: 57 ரன்னில் சுருண்டது UAE
    X

    Asia Cup 2025 குல்தீப் யாதவ், ஷிவம் துபே அபாரம்: 57 ரன்னில் சுருண்டது UAE

    • குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    • ஷிவம் துபே 2 ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ஆகிய இருவரும் இடம் பிடித்தனர்.

    யுஏஇ அணியின் ஷரஃபு, முகமது வாசீம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் ஷரஃபு 2 பவுண்டரி விளாசினார். அடுத்த ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரிலும் ஷரஃபு ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரை அக்சர் படேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் பறக்க விட்டார். இதனால் யுஏஇ 3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்தது.

    4ஆவது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் ஷரஃபு (17 பந்தில் 22 ரன்) க்ளீன் போல்டானார். அடுத்து ஷோஹைப் களம் இறங்கினார். இவர் வருண் சக்ரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    6ஆவது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் முகமது வாசீம் 3 பவுண்டரிகள் விரட்டினார். இதனால் பவர்பிளேயில் யுஏஇ 41 ரன்கள் சேர்த்தது.

    8ஆவது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார். ராகுல் சோப்ரா 3 ரன்னிலும், முகமது வாசீம் 19 ரன்னிலும், ஹர்ஷித் கவுசிக் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதனால் யுஏஇ 50 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    அதன்பின் 7 ரன்னுக்குள் அடுத்த 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 57 ரன்னில் சுருண்டது.

    குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஷிவம் துபே 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பும்ரா, அக்சார் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். யுஏஇ 47 ரன்னுக்கு 2 விக்கெட் என்ற நிலையில், அடுத்த 10 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது.

    Next Story
    ×