என் மலர்
விளையாட்டு





லண்டன்:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது. மே 30-ந் தேதி வரை இந்த போட்டி மும்பை, பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி ஆகிய நகரங்களில் நடக்கிறது.
ஐ.பி.எல். போட்டிக்காக அனைத்து வீரர்களும் தயாராகி வருகின்றனர். ஐ.பி.எல். தொடர் நடைபெறும் அதே நேரத்தில் சில அணிகள் சர்வதேச போட்டிகளில் விளையாடுகின்றன. இதனால் முன்ணனி வீரர்களில் சிலர் ஐ.பி.எல். போட்டியில் பாதியிலேயே விலக நேரிடும்.
இந்த நிலையில் ஐ.பி.எல். நடைபெறும் போது சர்வதேச போட்டிகள் நடத்த வேண்டாம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இருநாடுகள் இடையேயான தொடர் நடைபெறுகிறபோது ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் ஒன்று இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போகும். அல்லது தாய் நாட்டிற்காக விளையாடுவதை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஐ.பி.எல். கிரிக்கெட் மிகப்பெரிய திருவிழா போன்று நடத்தப்படுகிறது. எனவே ஐ.பி.எல். நடைபெறுகிற காலக்கட்டத்தில் சர்வதேச தொடர்கள் எதையும் நடத்தக்கூடாது என்பதை கிரிக்கெட் வாரியங்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.பி.எல். போட்டியில் 14 இங்கிலாந்து வீரர்கள் விளையாடுகிறார்கள். ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இங்கிலாந்து அணி நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதனால் சில வீரர்கள் ஐ.பி.எல்.லில் விளையாடலாமா? வேண்டாமா? என்று தவித்து வருகிறார்கள்.
ஐ.பி.எல்.லில் விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அணிக்காக கட்டாயம் ஆட வேண்டும் என்பதை நிர்பந்திக்க மாட்டோம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மும்பை:
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் கடந்த 27-ந்தேதி தனது டுவிட்டரில் எனக்கு சிறிய அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
இதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். டாக்டர்கள் கூறிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என்று தெரிவித்தார். மேலும் தனது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து தெண்டுல்கர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 6 நாட்களுக்கு பிறகு தெண்டுல்கர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
உங்களின் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவ ஆலோசனையின்படி முன்எச்சரிக்கையாக நான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சில நாட்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் தங்களது நலனில் கவனம் செலுத்தி பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற 10-வது ஆண்டு தினத்தையொட்டி இந்தியர்களுக்கும் மற்றும் எனது அணியினருக்கும் வாழ்த்துக்கள் என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ராய்ப்பூரில் நடந்த சாலை பாதுகாப்பு உலக சீரிஸ் போட்டியில் தெண்டுல்கர் பங்கேற்று விளையாடினார். அதன்பின் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதே போல் அவருடன் இந்திய லெஜன்ட்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த யூசுப் பதான், இர்பான்பதான், பத்ரிநாத் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 10-ந் தேதி டெல்லியுடன் மோதுகிறது. இப்போட்டி மும்பையில் நடக்கிறது.
இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹாசலிவுட் இந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.
ஆஷஸ் தொடர் முந்திய சர்வதேச போட்டிகளை கருத்தில் கொண்டு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக ஹாசலிவுட் தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து உள்ள தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி முதல் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் சி.இ.ஓ. கே.எஸ்.விஸ்வநாதன் கூறும்போது, லுங்கி நிகிடி அவரது சொந்த மண்ணில் (தென் ஆப்பிரிக்கா) நடக்கும் போட்டி தொடரில் பங்கேற்கிறார். அதன்பின் அவர் தனிமைப்படுத்துதலை பின்பற்ற வேண்டும்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 3-வது ஆட்டத்தில் இருந்துதான் அவர் விளையாட முடியும் என்றார்.
ஏற்கனவே ஹாசலிவுட் விலகியுள்ள நிலையில் தற்போது நிகிடியும் முதல் 2 ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
சென்னை:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ்- பெங்களூர் அணியும் மோதுகின்றன.
இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்துள்ளனர். பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி நேற்று சென்னை வந்தார். அவர் ஓட்டலில் தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு பயிற்சியில் ஈடுபடுகிறார்.
ஏற்கனவே வந்த பெங்களூர் அணி வீரர்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை முடிந்த பிறகு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் விராட்கோலி பெங்களூர் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-
நாங்கள் மீண்டும் இந்தியாவில் விளையாடுகிறோம் என்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். வேறுபட்ட அமைப்பில் இருந்தாலும், வேறு வழியில் இருந்தாலும் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஒரு நல்ல உணர்வு இருக்கிறது.
இது ஒரு நீண்ட பயணம்- பெங்களூர் அணிக்கு திரும்பி வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஐ.பி.எல். போட்டியை நேற்றுதான் நாங்கள் முடித்தது போல் உணர்கிறோம். கடந்த போட்டியின் உத்வேகத்தை நாங்கள் பெற்றுள்ளோம்.
அணியில் சில புதிய வீரர்கள் வந்துள்ளனர். பழைய வீரர் பெயர்களும் உள்ளன. அவர்களை நான் பல ஆண்டுகளாக அறிந்து இருக்கிறேன்.
டேனியல் கிறிஸ்டியன் இதற்கு முன்பு பெங்களூர் அணியில் இருந்திருக்கிறார். மேக்ஸ்வெல், முதல் முறையாக இடம் பெற்றுள்ளார். ஆனால் அவரை நாம் அனைவரும் அடிக்கடி ஐ.பி.எல். போட்டியில் பார்த்து இருக்கிறோம்.
நாங்கள் ஒன்றாக இணைந்து நிறயை ஆட்டங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






