search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அக்சார் பட்டேல்
    X
    அக்சார் பட்டேல்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் அக்சார் பட்டேலுக்கு கொரோனா தொற்று

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கியமான ஆறு இடங்களில் நடக்கிறது. இந்தியாவில் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்படும்போது கொரோனா தொற்று குறைவாக இருந்தது.

    தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி கொரோனா தொற்று உறுதியானது. இருந்தாலும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை எடுக்கப்பட்ட முடிவில் நெகட்டிவ் வந்துள்ளது.

    இந்த நிலையில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    ‘‘துரதிருஷ்டவசமாக அக்சார் பட்டேலுக்கு பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது. அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன’’ என டெல்லி அணி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அக்சார்  பட்டேல்

    பிசிசிஐ வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பாசிட்டிவ் முடிவு வந்த வீரர் பயோ-செக்யூருக்கு வெளியே 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 10 நாட்களில் அந்த வீரர் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். எந்த உடற்பயிற்சியும் மேற்கொள்ளக்கூடாது, அணி மருத்துவர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அறிகுறி மோசமாக சென்றால், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படவேண்டும்.

    மும்பை வான்கடே மைதான ஸ்டாப்கள் 8 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×