என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாகிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது.
    ஜோகன்னஸ்பர்க்:

    பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்கில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் போட்டியில் தோற்றதால் தென்ஆப்பிரிக்கா அணி முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை ஆடியது.

    அந்த அணியின் 4 பேட்ஸ்மேன்கள் அரை சதமடித்தனர். டி காக் 80 ரன், கேப்டன் பவுமா 92 ரன், வான் டர் டுசன் 60 ரன், மில்லர் 50 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்தது. மில்லர் 50 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார்.

    இமாம் உல் ஹக்கை அவுட்டாக்கிய நிகிடி

    மற்ற பேட்ஸ்மேன்கள் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.  பாபர் அசாம் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பகர் சமான் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார்.
     
    கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய பகர் சமான் 50வது ஓவரின் முதல் பந்தில் 193 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் 10 சிக்சர், 18 பவுண்டரி அடித்து கடைசி வரை போராடினார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 324 ரன்கள் மட்டுமே எடுத்து, 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகியவை 1-1 என சமனிலையில் உள்ளன.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஆன்ரிச் நூர்ஜே 3 விக்கெட்டும், பெலுகுவாயோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தனி மனிதனாகப் போராடி 193 ரன்கள் குவித்த பாகிஸ்தானின் பகர் சமான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்சூரியன் மைதானத்தில் 7ம் தேதி நடைபெறுகிறது.
    மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மாநிலம் தழுவிய இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டது. வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் வருகிற 9-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது. 10-ந்தேதி சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ், 12-ந்தேதி ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ், 15-ந்தேதி ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ், 16-ந்தேதி பஞ்சாப் கிங்ஸ்- சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.

    இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் வீரர்கள் எப்படி பயணம் செய்ய முடியும்? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.

    கோப்புப்படம்

    இந்த நிலையில் பிசிசிஐ வட்டாரங்கள் ஊரடங்கால் வீரர்கள் பயணம் செய்ய எந்த இடையூறும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளன. வீரர்கள் அனைவரும் பயோ-செக்யூர் பப்பிளில் உள்ளனர். அணி வீரர்கள் மட்டுமல்ல, பஸ் மற்றும் பஸ் டிரைவர்கள் என எல்லாமே பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளன.

    ஆகவே, போட்டி நடைபெறும் நாட்களில் ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு வீரர்கள் செல்வதில் எந்த இடையூறும் ஏற்படாது. வழக்கமான கொரோனா டெஸ்ட் அணிகளுக்குள் நடந்து கொண்டே இருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் எப்படி நடைபெற்றதோ, அதேபோன்று தற்போதும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளன.
    இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த வீரரான புஜாரா, ஏழு வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் புஜாரா. இவருக்கு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் ஐபிஎல் அணிகளும் இவரை ஏலம் எடுப்பதில்லை. கடந்தத ஏழு வருடத்திற்குப் பிறகு முதன்முறையாக 2021 சீசனுக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது.

    சென்னை அணிக்காக வி்ளையாட இருக்கும் புஜாரா, நான் பவர் ஹிட்டர் கிடையாது. ஆனால் ஸ்டிரைட் ரேட்டை அதிகரிக்க விராட் கோலி, ரோகித் சர்மாவிடம் இருந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து புஜாரா கூறுகையில் ‘‘ஸ்டிரைக் ரேட் என்று வரும்போது நான் பவர் ஹிட்டர் கிடையாது என்பதை ஒத்துக்கொள்கிறேன். அதேநேரம் விராட் கோலி, ரோகித் சர்மாவிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும். இருவரும் முழுமையான பவர் ஹிட்டர்கள் கிடையாது. ஆனால், குறுகிய வடிவிலான போட்டியில் பந்தை சரியான கணித்து விரட்டுவதில் சிறந்தவர்.

    கேன் வில்லியம்சன் போன்ற வீரர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். ஸ்டீவ் ஸ்மித்திடம் கூட கற்றுக்கொள்ளலாம். இவர்கள் அனைவரும் கிரிக்கெட் ஷாட்டுகள் மூலம் ரன்கள் அடிக்கிறார்கள்.

    நான் வெற்றி பெற வேண்டுமென்றால், அதனுடன் கொஞ்சம் புதுமையும் தேவை. ஆனால், கிரிக்கெட் ஷாட்டுகள் மூலமும் ரன்கள் அடிக்க முடியும். பவரை உருவாக்குவதில் சிறந்து விளங்க வேண்டும். இதை மறுப்பதற்கில்லை. ஆனால் இறுதியில் கிரிக்கெட் உணர்வுகள்தான் முக்கிய பலமாக இருக்கும் என நினைக்கிறேன்’’ என்றார்.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நெருங்கி நிலையில், வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் போட்டி ஏற்பாட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    ஐபிஎல் போட்டிகளுக்காக வீரர்கள் தயாராகி வரும் நிலையில், வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் போட்டி ஏற்பாட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், போட்டிகள் நடைபெறும் அனைத்து நகரங்களையும் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

    பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா

    இதுபற்றி பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-

    கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே ஐபிஎல் போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பிசிசிஐ எடுத்துள்ளது. போட்டிகள் 6 இடங்களில் மட்டுமே நடத்தப்படுகின்றன. 

    பயோ பபுள் எனப்படும் பாதுகாப்பு விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அணியின் வீரர்களும் அதிகரிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் இன்றி போட்டி நடக்கும். வீரர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். இதுதொடர்பாக சுகாதார அமைச்சகத்துடன் பிசிசிஐ அதிகாரிகள் தொடர்புகொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை விடுவித்ததால், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக நியமித்துள்ளது.
    ஐபிஎல் போட்டி அறிமுகமான ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ். அதன்பின் அந்த அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

    கடந்த சீசனில் அந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் செயல்பட்டார். அவரது பேட்டிங் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    ஐபிஎல் ஏலத்தில் குறைந்த தொகைக்கு ஏலம் போனாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2021 சீசனை எதிர்கொள்கிறது.

    கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில் ‘‘நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவதை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏராளமான மாறுபட்ட சிந்தனை எனது மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதை எளிதாக எடுத்துக் கொள்வேன். இந்த பணியை எடுத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையிலேயே, கடந்த வருடம் வரை நான் கேப்டனாக பணியாற்றுவேன் என்று நினைக்கவில்லை.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டைரக்டராக இலங்கை ஜாம்பவான் சங்கக்கரா நியமிக்கப்பட்டுள்ளார். சங்கக்கரா என்றாலே, என் நினைவுக்கு வருவது அவரது கவர் டிரைவ், அவரது பேட்டிங்கை மிகவும் விரும்புவேன். அவரை போன்ற ஜாம்பவான் உடன் இணைந்து பணியாற்றுவன் மூலம் கனவு நினைவானது போன்றது’’ என்றார்.
    ஐபிஎல் அறிமுக சீசனில் அபாரமாக விளையாடி 473 ரன்கள் விளாசி தேவ்தத் படிக்கல், முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணி வீரர்களும் போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆர்சிபி-யின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த ஐபிஎல் தொடரில் தேவ்தத் படிக்கல் அறிமுகமானார். இடது கை பேட்ஸ்மேனான அவர் 473 ரன்கள் விளாசினார். சராசரி 31.53-ம் ஸ்டிரைக் ரேட் 124.8-ம் வைத்துள்ளார்.

    தனிமைப்படுத்தப்பட்டுள்ள தேவ்தத் படிக்கல் முதல் இரண்டு போட்டிகளில் விளையைாட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆர்சிபி புதிய தொடக்க வீரரை தேட வேண்டியுள்ளது.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த மொயீன் அலியை, சென்னை சூப்பர் கிங்ஸ் 7 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மொயீன் அலி. இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். இந்த சீசனுக்கான (2021) ஏலத்தில் அவரை ஆர்சிபி விடுவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 7 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

    மும்பையில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மொயீன் அலி இணைந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அணியும் ஜெர்சியில் SNJ 10000 என்ற விளம்பர லோகோ இடம் பிடித்துள்ளது. இது ஒரு மதுபான விளம்பரமாகும்.

    சிஎஸ்கே ஜெர்சி

    மொயீன் அலி இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். மதுபானம் அருந்தக்கூடாது, அதைத் தூண்டும் செயலில் ஈடுபடக்கூடாது என்று இஸ்லாம் மதம் போதிக்கிறது. இதன் மீது மொயீன் அலி நம்பிக்கை வைத்துள்ளார்.

    இதனால் ஜெர்சியில் உள்ள SNJ 10000 லோகோவை நீக்க மொயீன் அலி கோரிக்கை விடுத்திருந்தார். அதை சிஎஸ்கே ஏற்றுக்கொண்டு அந்த குறிப்பிட்ட விளம்பரத்தை போட்டிக்கான ஜெர்சியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
    தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.
    ஜோகன்னஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. நேற்று முன்தினம் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்த 274 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமின் சதத்தின் உதவியுடன் கடைசி பந்தில் எட்டிப்பிடித்தது. தென்ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக பாகிஸ்தான் விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச ஸ்கோர் இது தான்.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் தீவிரத்தில் டெம்பா பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க வீரர்கள் உள்ளனர். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த போட்டியுடன் குயின்டான் டி காக் உள்ளிட்ட சில தென்ஆப்பிரிக்க வீரர்கள் ஐ.பி.எல். தொடருக்காக இந்தியாவுக்கு புறப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி யூ டியூப் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியிடம் தற்போதைய இந்திய அணியில் உங்களுக்கு பிடித்தமான வீரர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:

    இந்திய அணியில் சில அற்புதமான வீரர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்ற முறையில் என்னை கவர்ந்த வீரர் யார் என்று குறிப்பிட்டு சொல்லக்கூடாது.

    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அனைவருமே எனக்கு பிடித்தமானவர்கள் தான். ஆனால் விராட் கோலி, ரோகித் சர்மாவின் பேட்டிங்கை ரசித்து பார்க்கிறேன்.

    விராட் கோலி, ரோஹித் சர்மா

    இதேபோல் தனிநபராக ஆட்டத்தில் வெற்றி தேடித்தரக்கூடியவர் என்ற வகையில் ரிஷாப் பண்ட் ஆட்டத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு.

    வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமியும் சிறப்பானவர்கள். ஷர்துல் தாகூரையும் விரும்புகிறேன். அவர் களத்தில் துணிச்சலாக செயல்படக் கூடியவர் என தெரிவித்தார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த ரிங்கி சிங், காயம் காரணமாக இந்த சீசன் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தவர் ரிங்கு சிங். கடந்த 2017-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ளார். வருகிற 9-ந்தேதி தொடங்கும் 2021 சீசனில் விளையாட ஆர்வமாக இருந்தார்.

    ரிங்கு சிங்

    ஆனால் கால்மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக 30 வயதான குர்கீரத் சிங் மான்-ஐ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். அவரை ஆர்சிபி விடுவித்தது. மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை.
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட இந்திய வீரர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பாட்டியாலாவில் கடந்த மாதம் நடந்த 24 வது தேசிய கூட்டமைப்பு கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற 313 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அவர்களில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

    இவர்களில் 5 பேர் ஜப்பானில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இருந்ததாகவும், இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களைப் பற்றிய விபரங்கள் வெளியிடப்படாத நிலையில் தொற்று ஏற்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. 10-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
    ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. 10-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    சென்னை அணி வீரர்கள் மும்பையில் தங்கியுள்ளனர். சில வீரர்கள் அணியுடன் இணைந்து வருகிறார்கள். சிலர் தங்களை பயணம் தொடர்பாக தனிமைப்படுத்தியுள்ளனர். அதன்பின் பயோ-செக்யூர் வளையத்திற்குள் செல்வார்கள்.

    இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டாப் (content team) ஒருவருக்கு இன்று கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளது. இதனால் மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாப்கள் அவர் அருகில் செல்லவில்லை என்பதால், சென்ன சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சென்னை  அணி வீரர்கள்

    டெல்லி அணியைச் சேர்ந்த அக்சார் பட்டேலுக்கும், வான்கடே மைதான ஸ்டாப்கள் 8 பேருக்கும் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து குணமடைந்துள்ளார்.
    ×