search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மகாராஷ்டிரா மாநில ஊரடங்கால் வான்கடே போட்டிகளுக்கு இடையூறு ஏற்படாது: பிசிசிஐ

    மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மாநிலம் தழுவிய இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டது. வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் வருகிற 9-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது. 10-ந்தேதி சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ், 12-ந்தேதி ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ், 15-ந்தேதி ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ், 16-ந்தேதி பஞ்சாப் கிங்ஸ்- சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.

    இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் வீரர்கள் எப்படி பயணம் செய்ய முடியும்? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.

    கோப்புப்படம்

    இந்த நிலையில் பிசிசிஐ வட்டாரங்கள் ஊரடங்கால் வீரர்கள் பயணம் செய்ய எந்த இடையூறும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளன. வீரர்கள் அனைவரும் பயோ-செக்யூர் பப்பிளில் உள்ளனர். அணி வீரர்கள் மட்டுமல்ல, பஸ் மற்றும் பஸ் டிரைவர்கள் என எல்லாமே பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளன.

    ஆகவே, போட்டி நடைபெறும் நாட்களில் ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு வீரர்கள் செல்வதில் எந்த இடையூறும் ஏற்படாது. வழக்கமான கொரோனா டெஸ்ட் அணிகளுக்குள் நடந்து கொண்டே இருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் எப்படி நடைபெற்றதோ, அதேபோன்று தற்போதும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளன.
    Next Story
    ×