என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.  

    • முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.
    • ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    நவி மும்பை:

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன.

    முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை முறியடித்தார். நடப்பு தொடரில் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி வருகிறார்.

    ஸ்மிருதி மந்தனா இறுதிப்போட்டியில் 21 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

    ஏற்கனவே, மிதாலி ராஜ் 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தொடரில் 409 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது ஸ்மிருதி மந்தனா அந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.

    நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஸ்மிருதி மந்தனா 9 இன்னிங்சில் 410 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா வெற்றி பெற்றார்.

    ரியாத்:

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நேற்று தொடங்கியது.

    இதில் ஸ்டெபிகிராப் பிரிவில் நம்பர் ஒன் நட்சத்திரமான பெலாரசின் அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காப், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.

    • கடந்த 25ஆம் தேதியில் இருந்து இன்றுவரை போட்டிகள் நடைபெற்றன.
    • இந்தோனேசிய வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்.

    சென்னை ஓபன் டென்னிஸ் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தோனேசியாவின் ஜானிஸ் டிஜென்- ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டிஜென் 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

     இந்த போட்டியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்த்து ரசித்தனர். அதன்பின் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசு கோப்பையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    • முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 298 ரன்கள் குவித்தது.
    • ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 78 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்தார்.

    நவி மும்பை:

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நவி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 298 ரன்கள் குவித்தது. தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா சிறப்பான ஆட்டததை வெளிப்படுத்தினர்.

    ஸ்மிருதி மந்தனா 58 பந்தில் 8 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 78 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்தார்.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்னும், ஹர்மன்பிரித் கவுர் 20 ரன்னும், அமன்ஜோத் கவுர் 12 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    6வது விக்கெட்டுக்கு இணைந்த தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் ஜோடி அதிரடியில் மிரட்டியது. தீப்தி சர்மா அரை சதம் கடந்தார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ரிச்சா கோஷ் 24 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார்.

    இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது. தீப்தி சர்மா 58 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா வெற்றி பெற்றார்.

    ரியாத்:

    ஒவ்வொரு ஆண்டும் 8 முன்னணி வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 8-ம் தேதி வரை நடக்கிறது.

    செரீனா பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா மற்றும் மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.

    • கர்நாடகா அணி 2வது நாளில் 5 விக்கெட்டுக்கு 586 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் கருண் நாயர், ஸ்மான் ரவிச்சந்திரன் இரட்டை சதமடித்து அசத்தினர்.

    திருவனந்தபுரம்:

    ரஞ்சி டிராபி தொடரின் 3வது சுற்று போட்டி நடந்து வருகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்ட கருண் நாயர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கேரளா அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 142 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

    கர்நாடகா அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்துள்ளது. 4வது விக்கெட்டுக்கு இணைந்த கருண் நாயர்-ரவிச்சந்திரன் ஜோடி இதுவரை 183 ரன்கள் சேர்த்துள்ளது.

    இந்நிலையில், 2வது நாளில் கர்நாடக அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கருண் நாயர் இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 233 ரன்னில் அவுட்டானார்.

    4வது விக்கெட்டுக்கு கருண் நாயர்-ரவிச்சந்திரன் ஜோடி 343 ரன்கள் சேர்த்து அசத்தியது. அவரைத் தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய ரவிச்சந்திரனும் இரட்டை சதமடித்தார்.

    இறுதியில், கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 586 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவிச்சந்திரன் 220 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இரண்டாம் நாள் முடிவில் கேரளா அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 21 ரன் எடுத்துள்ளது.

    • ஸ்மிரிதி மந்தனா 45 ரன்கள் அடித்து அரைசதம் வாய்ப்பை இழந்தார்.
    • ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 49 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    நவி மும்பையில் நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியாவின் ஸ்மிரி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டததை வெளிப்படுத்தினர். இதனால் இந்தியா 6.3 ஓவரில் 50 ரன்களை கடந்து, 17.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்மிரிதி மந்தனா 58 பந்தில் 8 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 49 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    2ஆவது விக்கெட்டுக்கு ஷபாலி வர்மா உடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தியா 20 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் அடித்துள்ளது. ஷபாலி வர்மா 56 ரன்களுடனும், ரோட்ரிக்ஸ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்​மனி​யில் நடை​பெற்று வருகிறது.
    • இந்தியாவின் உன்னதி ஹுடா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹுடா, இந்தோனேசியாவின் புத்ரி குசுமா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய வீராங்கனை 21-7, 21-13 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் இந்தியாவின் உன்னதி ஹுடா தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்றது.
    • இதன் இறுதிச்சுற்றில் கனடா வீராங்கனை எம்போகா வெற்றி பெற்றார்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் கனடாவின் விக்டொரியா எம்போகா, ஸ்பெயினின் கிறிஸ்டினா புஸ்கா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய எம்போகா முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக கிறிஸ்டினா 2வது செட்டை 7-6 (11-9)

    என போராடி வென்றார்.

    இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை எம்போகா 6-2 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
    • இதன் அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-0, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் 7-6 (7-3) 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • சூர்யகுமார் யாதவ் 11 பந்தில் 24 ரன்கள் அடித்தார்.
    • திலக் வர்மா 29 ரன்களும், அபிஷேக் சர்மா 25 ரன்களும் சேர்த்தனர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹோபர்ட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா ஆகியோர் நீக்கப்பட்டனர்.

    முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா டிம் டேவிட், ஸ்டோய்னிஸ் அரைசதத்தால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது. டிம் டேவிட் 38 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் 39 பந்தில் 8 பவுண்டிரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா தலா 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 25 ரன்கள் அடித்து எல்லீஸ் பந்தில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 12 பந்தில் 15 ரன்கள் எடுத்து எல்லீஸ் பந்தில் வெளியேறினார்.

    அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் 11 பந்தில் 24 ரன்களும், திலக் வர்மா 26 பந்தில் 29 ரன்களும் சேர்த்தனர். அக்சர் படேல் 12 பந்தில் 17 எடுத்தார்.

    அடுத்து வாஷிங்கடன் சுந்தர் களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடினார். இதனால் இந்தியா எளிதாக இலக்கை நெருங்கியது.

    18.3 ஓவரில் 188 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 23 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜித்தேஷ் சர்மா 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.

    ×