என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வாஷிங்டன் சுந்தர் அதிரடி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டி20-யில் இந்தியா அசத்தல் வெற்றி
- சூர்யகுமார் யாதவ் 11 பந்தில் 24 ரன்கள் அடித்தார்.
- திலக் வர்மா 29 ரன்களும், அபிஷேக் சர்மா 25 ரன்களும் சேர்த்தனர்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹோபர்ட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா ஆகியோர் நீக்கப்பட்டனர்.
முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா டிம் டேவிட், ஸ்டோய்னிஸ் அரைசதத்தால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது. டிம் டேவிட் 38 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் 39 பந்தில் 8 பவுண்டிரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா தலா 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 25 ரன்கள் அடித்து எல்லீஸ் பந்தில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 12 பந்தில் 15 ரன்கள் எடுத்து எல்லீஸ் பந்தில் வெளியேறினார்.
அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் 11 பந்தில் 24 ரன்களும், திலக் வர்மா 26 பந்தில் 29 ரன்களும் சேர்த்தனர். அக்சர் படேல் 12 பந்தில் 17 எடுத்தார்.
அடுத்து வாஷிங்கடன் சுந்தர் களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடினார். இதனால் இந்தியா எளிதாக இலக்கை நெருங்கியது.
18.3 ஓவரில் 188 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 23 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜித்தேஷ் சர்மா 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.






