என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டி20 கிரிக்கெட்டின் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்லுக்கு நேற்று பிறந்த நாள். அன்றைய தினம் ரசிகர்களுக்கு கிரிக்கெட் களத்தில் விருந்து படைக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்.
    டி20 கிரிக்கெட் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல். தனது அதிரடி ஆட்டம் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    கிறிஸ் கெய்லுக்கு நேற்று பிறந்த நாள். 42 வயது முடிந்த நிலையில் 43-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு நேற்று பிறந்த நாள் வாழ்த்துகள் குவிந்தன. ஐ.பி.எல். போட்டியில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் ஆடும் லெவனில் இடம்பிடித்து ரசிகர்களுக்கு பேட்டிங் மூலம் விருந்து படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் பஞ்சாப் அணி அவருக்கு ஆடும் லெவன் அணியில் வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் கவாஸ்கர், கெவின் பீட்டர்சன் ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.

    பீட்டர்சன் கூறுகையில் ‘‘சில கேள்விகளை எழுப்பலாம். பிறந்த நாள் அன்று கிறிஸ் கெய்ல் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரேயொரு போட்டியில் அவரை விளையாட வைத்திருக்கலாம். அவர் சரியாக விளையாடவில்லை என்றால், அதன்பின் ஓய்வு கொடுத்திருக்கலாம்’’ என்றார்.
    எளிதில் வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தை பஞ்சாப் அணி கோட்டை விட்டது குறித்து அந்த அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    ஐ.பி.எல். போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து ராஜஸ்தான் 4-வது வெற்றியை பெற்றது.

    துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 185 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.

    ஜெய்ஷ்வால் 36 பந்தில் 49 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), மகிபால் லோம் ரோர் 17 பந்தில் 43 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), லீவிஸ் 21 பந்தில் 36 ரன்னும் (7 பவுண்டரி, 1சிக்சர்) எடுத்தனர். அர்ஷ்தீப்சிங் 5 விக்கெட்டும், முகமது ‌ஷமி 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்தது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்னில் வெற்றி பெற்றது.

    மயங்க் அகர்வால் 43 பந்தில் 67 ரன்னும் (7பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் லோகேஷ் ராகுல் 33 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் 22 பந்தில் 32 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    கார்த்திக் தியாகி 2 விக்கெட்டும், சஹாரியா, ராகுல் திவேதியா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி எளிதில் வெற்றி பெற வேண்டியது. கார்த்திக் தியாகியின் கடைசி ஓவர் ஆட்டத்தை மாற்றியது. கடைசி 2 ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய முஸ்தாபிசூர் ரகுமான் 4 ரன்னை கொடுத்தார்.

    கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. கைவசம் 8 விக்கெட் இருந்தது. கார்த்திக் தியாகி முதல் பந்தில் ரன் கொடுக்கவில்லை. 2-வது பந்தில் ஒரு ரன் கொடுத்தார்.

    3-வது பந்தில் நிக்கோலஸ் பூரனை அவுட் செய்தார். 4-வது பந்தில் தீபக் ஹூடா ரன் எடுக்கவில்லை. 5-வது பந்தில் ஹூடா ஆட்டம் இழந்தார். இதனால் கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. கடைசி பந்தில் ஒரு ரன்கூட எடுக்கவில்லை. கார்த்திக் தியாகியின் அபாரமான பந்து வீச்சால் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

    எளிதில் வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தை பஞ்சாப் அணி கோட்டை விட்டது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

    முந்தைய தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இனிவரும் 5ஆட்டங்களில் நாங்கள் வெற்றி பெற முயற்சிப்போம். சிறப்பாக ஆடியும் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற முடியாமல் தோல்வியை தழுவியது ஏமாற்றம் அளிக்கிறது.

    இவ்வாறு ராகுல் கூறினார்.

    பஞ்சாப் அணி 6-வது தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 4-வது வெற்றியை பெற்று 5-வது இடத்துக்கு முன்னேறியது. 


    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ஹமீது ஷின்வாரியை ஹக்கானிகள் பதவி நீக்கம் செய்து உள்ளனர்.

    காபூல்:

    20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ள தலிபான்கள் அங்கு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஹமீது ஷின்வாரி செயல்பட்டு வந்தார். அவரை ஹக்கானிகள் பதவி நீக்கம் செய்து உள்ளனர். இவர்கள் தலிபான்களின் கூட்டாளி ஆவார்கள்.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக நஸீபுல்லா ஹக்கானி என்ற நஸீப்கான் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மிதாலிராஜ் வருகைக்கு பிறகே சாதிக்கத் தொடங்கியது. அவர் 1999-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.
    புதுடெல்லி:

    இந்திய மகளிர் கிரிக்கெட்டில் முன்னணி வீராங்கனையாக இருப்பவர் மிதாலிராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் எப்படி தெண்டுல்கர் சாதனை படைத்திருந்தாரோ அதே போன்று பெண்கள் கிரிக்கெட்டில் அவர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.

    இந்திய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 63 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 20 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை படைத்தார்.

    38 வயதான மிதாலிராஜ் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் அரை சதம் விளாசி சாதித்து உள்ளார். அவர் 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,367 ரன்கள் எடுத்து உள்ளார். இதில் 7 சதமும், 59 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 125 ரன் குவித்து உள்ளார்.

    நேற்றைய போட்டியின் மூலம் அவர் 59-வது அரை சதத்தை தொட்டார். அவரது சராசரி 51.88 ஆகும்.

    மிதாலிராஜ் பிறந்தது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஆகும். குடியேறியது ஐதராபாத் ஆகும். ஆனால் அவரது தாய்மொழி தமிழ் மொழி ஆகும். அவரது பெற்றோர் பெயர் துரைராஜ்-லீலா.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மிதாலிராஜ் வருகைக்கு பிறகே சாதிக்கத் தொடங்கியது. 1999-ம் ஆண்டு அவர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு அவர் ஓய்வு பெறப்போவதாக கூறப்படுகிறது.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சரிவில் இருந்து மீளும் முனைப்புடன் உள்ள ஐதராபாத் அணி, பலம் வாய்ந்த டெல்லி கேப்பிட்டல்சுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.
    துபாய்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் இன்று அரங்கேறும் 33-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.

    டெல்லி அணி முதல் பாதியில் 8 ஆட்டங்களில் விளையாடி 6-ல் வெற்றி, 2-ல் தோல்வி என்று 12 புள்ளிகள் எடுத்து நல்ல நிலையை எட்டியது. தோள்பட்டை காயத்தால் போட்டிக்கு முன்பாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் விலகியதால் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணியின் கேப்டன் பதவியை ஏற்று கலக்கலாக செயல்பட்டார். இப்போது 4 மாதங்கள் கழித்து ஐ.பி.எல். மீண்டும் தொடங்கி இருப்பதால் அதற்குள் ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார். ஆனாலும் கேப்டன்ஷிப்பில் மாற்றமின்றி ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு வீரராக நீடிப்பார் என்று ஏற்கனவே தெளிவுப்படுத்தப்பட்டு விட்டது.

    ஷிகர் தவானும் (8 ஆட்டத்தில் 380 ரன்), பிரித்வி ஷாவும் (308 ரன்) முதல் சீசனில் அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். தற்போதைய 2-வது கட்ட போட்டிகளிலும் அவர்கள் அதே போன்று விளையாடினால் சிக்கலின்றி ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டிவிட முடியும். மற்றபடி ஸ்டீவன் சுமித், ரஹானே, ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோனிஸ், பந்து வீச்சில் காஜிசோ ரபடா, அஸ்வின், நோர்டியா, அக்‌ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா என்று மிரட்டல் வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனாலும் ஸ்டீவன் சுமித், ரஹானேவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகம் தான்.

    ஐதராபாத் சன்சரைசர்ஸ் அணி இந்திய மண்ணில் நடந்த முதல் 7 ஆட்டங்களில் 6-ல் தோற்று கடைசி இடத்தில் தவிக்கிறது. 21 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் ஐதராபாத் அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. இனி எஞ்சிய 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். முதல் பாதியில் 6 ஆட்டங்களுக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னர் ஒதுங்க, கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் புதிய சீசனில் ஐதராபாத் அணி எழுச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    அதிரடி ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ விலகியது அந்த அணிக்கு இன்னொரு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக பொருத்தமான தொடக்க ஆட்டக்காரரை அடையாளம் காண வேண்டி உள்ளது. அனேகமாக வார்னருடன், விருத்திமான் சஹா தொடக்க வீரராக இறங்குவார் என்று தெரிகிறது. பேட்டிங்கில் வார்னர், வில்லியம்சன், மனிஷ் பாண்டே, விருத்திமான் சஹா, கேதர் ஜாதவ் ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், புவனேஷ்வர்குமார், காயத்தில் இருந்து மீண்டுள்ள டி.நடராஜன், சந்தீப் ஷர்மா, ஜாசன் ஹோல்டர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    இவ்விரு அணிகளும் ஏற்கனவே சென்னையில் சந்தித்த லீக் ஆட்டம் சமனில் (டை) முடிந்து அதன் பிறகு சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி கண்டது நினைவிருக்கலாம். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டார்சி பிரவுன் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    மெக்கே:

    இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்தது. இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 63 ரன்னில் அவுட்டானார். யஸ்திகா பாட்டியா 35 ரன்னும், ரிச்சா கோஷ் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அரை சதமடித்த மிதாலி ராஜ்

    ஆஸ்திரேலிய அணி சார்பில் டர்சி பிரவுன் 4 விக்கெட்டும், மொலினக்ஸ், டார்லிங்டன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய பெண்கள் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர். அலிசா ஹீலி 77 ரன்னில் அவுட்டானார். 

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 41 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ராச்சல் ஹெயின்ஸ் 93 ரன்னும், மாக் லானிங் 53 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
    ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தனர்.
    துபாய்:

    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 185 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் அனது.

    லீவிஸ் 36 ரன், ஜெய்ஸ்வால் 49 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்னில் வெளியேறினார்.

    மஹிபால் லோம்ரோர் அதிரடியாக ஆடி 17 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் விளாசினார். ரியான் பராக் 4 ரன், ராகுல் டெவாட்டியா 5 ரன்னிலும் கிறிஸ் மோரிஸ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் பொறுப்புடன் ஆடினர். அகர்வால் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். 

    பஞ்சாப் அணியின் எண்ணிக்கை 120 ஆக இருந்தபோது கே.எல்.ராகுல் 49 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்தில் மயங்க் அகர்வால் 67 ரன்னில் வீழ்ந்தார்.

    சிறப்பான தொடக்கம் கொடுத்த ராகுல்-அகர்வால் ஜோடி

    அடுத்து இறங்கிய மார்கிராம், நிகோலஸ் பூரன் இணைந்து பொறுப்புடன் ஆடினர். பூரன் 32 ரன்னில் அவுட்டானார். 

    இறுதியில், பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. மார்கிராம் 26 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதன்மூலம் கடைசி ஓவரில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது கார்த்திக் தியாகிக்கு அளிக்கப்பட்டது.
    ஒருபக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி காட்ட மறுபக்கம் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் அபாரமாக பந்து வீச பஞ்சாப் அணிக்கு 186 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எவின் லீவிஸ் அறிமுகம் ஆனார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் இஷான் பொரேல், எய்டன் மார்கிராம், அடில் ரஷித் ஆகியோர் அறிமுகம் ஆகினர்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் எர்வின் லீவிஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் ராஜஸ்தான் அணிக்கு சிறந்த தொடக்கம் கொடுத்தனர். லீவிஸ் 21 பந்தில் 36 ரன்கள் எடுத்தும், ஜெய்ஸ்வால் 36 பந்தில் 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவரில் 54 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்னில் வெளியேறினார்.

    3 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி

    அதன்பின் ராஜஸ்தானின் ஸ்கோரில் வேகம் சற்று குறைந்தது. ஆனால் மஹிபால் லோம்ரோர் 17 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் விளாசினார். இதனால் மீண்டும் ஸ்கோர் வேகம் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் எப்படியும் 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ரியான் பராக் 4 ரன்னிலும், ராகுல் டெவாட்டியா 5 ரன்னிலும் கிறிஸ் மோரிஸ் 2 ரன்னிலும் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தனர். ஷமி 19-வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் சாய்த்தார்.

    கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் சாய்த்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் சரியாக 20 ஓவரில் 185 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் அனது.

    5 விக்கெட் வீழ்த்திய அர்ஷ்தீப் சிங்

    பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டும், ஷமி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 14.2 ஓவரில் 136 ரன்களும், 16.3 ஓவரில் 166 ரன்களும் எடுத்திருந்தது.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எவின் லீவிஸ் அறிமுகம் ஆகிய நிலையில், பஞ்சாப் அணியில் எய்டன் மார்கராம், அடில் ரஷித், இஷான் பொரேல் என மூன்று பேர் அறிமுகமாகிறார்கள்.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எவின் லீவிஸ் அறிமுகம் ஆகியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் இஷான் பொரேல், எய்டன் மார்கிராம், அடில் ரஷித் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்:

    1. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2. எவின் லீவிஸ், 3. சஞ்சு சாம்சன், 4. லியாம் லிவிங்ஸ்டோன், 5. மஹிபால் லாம்லோர், 6. ரியான் பராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. கிறிஸ் மோரிஸ், 9. முஷ்டாபிஜுர் ரஹ்மான், 10. சேத்தன் சகாரியா, 11. கார்த்திக் தியாகி.

    பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள்:

    1. கே.எல். ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. எய்டன் மார்கிராம், 4. நிக்கோலஸ் பூரன், 5. தீபக் ஹூடா, 6. பேபியன் ஆலன், 7. அடில் ரஷித், 8. ஹர்ப்ரீத் பிரார், 9. முகமது ஷமி, 10. அர்ஷ்தீப் சிங், 11. இஷான் பொரேல்.
    கொல்கத்தாவின் மிரட்டலான வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி.
    அபுதாபி:

    ஐபிஎல் தொடரின் 2021 சீசனின் இரண்டாம் பகுதி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையில் அபுதாபியில் போட்டி நடந்தது.

    இந்தப் போட்டியில் ஆர்.சி.பி படுதோல்வியடைந்தது. கொல்கத்தாவின் மிரட்டலான வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. அவர் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    போட்டி முடிந்த பின்னர் வருண் குறித்து கோலி, 'அவரின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. நான் சக வீரர்களிடமும் அவரைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தேன். அவர் இந்தியாவுக்காக விளையாடும் போது மிக முக்கியமான வீரராக இருக்கப் போகிறார்.

    அவரைப் போன்று பல இளம் வீரர்களும் தங்களது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும். அப்போதுதான் இந்திய அணி வலுவாக இருக்கும். அவர் விரைவில் இந்தியாவுக்காக விளையாட உள்ளார். அது நல்ல விஷயமாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்து, தொடரிலிருந்து விலகுவதாக சொன்னபோதே, எந்த மாதிரியான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தது என்பதை எங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.
    பாகிஸ்தான்:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடக்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியது நியூசிலாந்து அணி.

    இந்நிலையில் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த இங்கிலாந்து அணியும் தொடரிலிருந்து விலகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

    இது பற்றி வாரியத்தின் தலைவர் ரமிஸ் ராஜா கூறுகையில்,

    நியூசிலாந்து அணியைத் தொடர்ந்து இங்கிலாந்தும் தொடரிலிருந்து விலகியுள்ளது வருந்தத்தக்கது. ஆனால், இதை நாங்கள் எதிர்பார்த்துதான் இருந்தோம். நியூசிலாந்து, தொடரிலிருந்து விலகுவதாக சொன்னபோதே, எந்த மாதிரியான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தது என்பதை எங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.

    இப்போது இங்கிலாந்து, நியூசிலாந்து போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தானுக்கு வர தயக்கம் காட்டி வருகிறது. அவர்கள் மூவரும் ஒரே மேற்கத்திய கோஷ்டியைச் சேர்ந்தவர்கள். எங்களை அவர்கள் இன்னும்  தங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.  

    டி20 உலகக்கோப்பையைப் பொறுத்தவரை நாங்கள் ஒரு அணியை (இந்தியா) மட்டும்தான் நாங்கள் டார்கெட்டாக வைத்திருந்தோம். ஆனால் இப்போது அந்தப் பட்டியலில் இரு அணிகள் சேர்ந்துள்ளன. அவை நியூசிலாந்தும் இங்கிலாந்தும் தான். அவர்களை நாங்கள் மைதானத்தில் பழி தீர்ப்போம்.

    இவ்வாறு அவர் அதிரடியாக பேசியுள்ளார்.
    பெண்கள் விளையாட்டு போட்டிகளை பார்ப்பதாலும், போட்டியின்போது ரசிகர்கள் ஆட்டம் போடுவதாலும் ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்பக் கூடாது என ஆப்கானிஸ்தான் ஊடகங்களுக்கு தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை பிடித்து ஆட்சியமைத்துள்ளனர். அவர்கள் பெண்களுக்கான உரிமைகளை பறித்து வருகின்றனர். பெண்கள் விளையாட்டில் சேரக்கூடாது, பள்ளிக்கு செல்லக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

    தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறியவர்கள், ஆண்கள் என அனைவரும் போட்டியை நேரில் பார்த்து ரசிக்கிறார்கள். ஐ.பி.எல் போட்டிகள் என்றாலே விசில், ஆட்டம் இல்லாமல் இருக்காது.

    உற்சாகத்திலும், தங்களுடைய அணி வீரர்களை உற்சாகப்படுத்தவும் பெண்களும் ஆட்டம் போடுவார்கள். ஏற்கனவே பெண்களுக்கு எதிரான முடிவகளை எடுத்து வரும் தலிபான்கள், பெண்கள் போட்டியை பார்ப்பதாலும் ரசிகர்கள் ஆட்டம் போடுவதாலும் ஐ.பி.எல். போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்பக்கூடாது என்று ஊடகங்களுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    ×