search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிறிஸ் கெய்ல்
    X
    கிறிஸ் கெய்ல்

    பிறந்த நாள் அன்று களம் இறங்க முடியாமல் கிறிஸ் கெய்ல் ஏமாற்றம்

    டி20 கிரிக்கெட்டின் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்லுக்கு நேற்று பிறந்த நாள். அன்றைய தினம் ரசிகர்களுக்கு கிரிக்கெட் களத்தில் விருந்து படைக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்.
    டி20 கிரிக்கெட் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல். தனது அதிரடி ஆட்டம் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    கிறிஸ் கெய்லுக்கு நேற்று பிறந்த நாள். 42 வயது முடிந்த நிலையில் 43-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு நேற்று பிறந்த நாள் வாழ்த்துகள் குவிந்தன. ஐ.பி.எல். போட்டியில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் ஆடும் லெவனில் இடம்பிடித்து ரசிகர்களுக்கு பேட்டிங் மூலம் விருந்து படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் பஞ்சாப் அணி அவருக்கு ஆடும் லெவன் அணியில் வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் கவாஸ்கர், கெவின் பீட்டர்சன் ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.

    பீட்டர்சன் கூறுகையில் ‘‘சில கேள்விகளை எழுப்பலாம். பிறந்த நாள் அன்று கிறிஸ் கெய்ல் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரேயொரு போட்டியில் அவரை விளையாட வைத்திருக்கலாம். அவர் சரியாக விளையாடவில்லை என்றால், அதன்பின் ஓய்வு கொடுத்திருக்கலாம்’’ என்றார்.
    Next Story
    ×