என் மலர்
விளையாட்டு
சாமுவேல் மீது எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு அளித்த புகார் அடிப்படையில் ஐ.சி.சி. ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மார்லோன் சாமுவேல்ஸ். வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற சாமுல்வேஸ் முக்கிய காரணமாக இருந்தார். அவர் எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு நடத்திய டி10 கிரிக்கெட் தொடரில் விளையாடினார். அப்போது 750 அமெரிக்க டாலர் அளவிலான விருந்தோம்பல் ரசீதை மறைத்ததாக சாமுவேல்ஸ் மீது எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு ஐசிசி-யிடம் புகார் தெரிவித்தது.
அதனடிப்படையில் 750 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு மேல் கொண்ட ரசீதை மறைத்தல், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை, தகவலை மறைப்பதன் மூலம் விசாரணைக்கு தடை அல்லது தாமதம் செய்வது என நான்கு ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் ஐசிசி குற்றம்சாட்டியுள்ளத.
கடந்த 21-ந்தேதியில் இருந்து 14 நாட்களுக்குள் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்குமாறு சாமுவேல்ஸ்க்கு அவகாசம் வழங்கியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் சி.எஸ்.கே.-யின் இரண்டு முக்கிய வீரர்கள் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் 2008-ம் ஆண்டு தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 14-வது லீக் தொடர் நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இரு அணிகளும் 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் இருப்பவர் எம்.எஸ். டோனி. இவர் பெரும்பாலும் போட்டியை முடித்து வைப்பதில் வல்லவர். இதனால் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை ஆட்டமிழக்காமல் இருந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

எம்.எஸ். டோனி 70 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். ஜடேஜா 59 முறை ஆட்டமிழக்காமல் 2-வது இடத்தையும், பொல்லார்டு 50 முறை ஆட்டமிழக்காமல் 3-வது இடத்திலும், யூசுப் பதான் 44 முறை ஆட்டமிழக்காமல் 4-வது இடத்திலும், வெயின் பிராவோ 39 முறை ஆட்டமிழககாமல் 5-வது இடத்திலும், ஏபி.டி. வில்லியர்ஸ் 38 முறை ஆட்டமிழக்காமல் 6-வது இடத்திலும் உள்ளனர்.
நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்றிருந்தபோது, அந்த அணியினருக்கு பாதுகாப்புத் தருவதற்காக 1 சிறப்பு அதிகாரி மற்றும் 500 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.
பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடக்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியது நியூசிலாந்து அணி.
இந்த சம்பவம் நடந்து சில நாட்களே கடந்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த இங்கிலாந்து அணியும் தொடரிலிருந்து விலகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இன்னொரு நெருக்கடி வந்துள்ளது. நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் சென்றிருந்தபோது, அந்த அணியினருக்கு பாதுகாப்புத் தருவதற்காக 1 சிறப்பு அதிகாரி மற்றும் 500 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.
அவர்களுக்கு தினமும் இரண்டு வேளை உணவு வழங்கப்பட்டது. குறிப்பாக இரண்டு வேளைகளும் அவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டுள்ளதாக தகவல். இதற்கு ஆகிய செலவு மட்டும் 27 லட்ச ரூபாய் என்று சொல்லப்படுகிறது.
நியூசிலாந்து தொடர் ரத்தானதால் ஏற்கெனவே நிதிச் சுமையால் தவித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இது மேலும் சுமையாக மாறியுள்ளது.

ஐ.பி.எல். புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கட்டாயம் வீழ்த்த வேண்டும் என்ற நிலையில் உள்ளது.
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 2-வது பாதி ஆட்டங்கள் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று வரை நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதுவரை 33 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. டெல்லி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 9 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற ஆறு அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளன.
இதில் டெல்லி கேப்பிடல்ஸ் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. டெல்லி ஏறக்குறைய பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் 4 வெற்றிகளுடன் 4-வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 வெற்றிகளுடன் 6-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 3 வெற்றிகளுடன் 7-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஒரு வெற்றியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகமிக முக்கியமானது. இதில் தோல்வியடைந்தால் 9 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும். அடுத்த ஐந்து போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்படும். மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை பெற முன்னிலைப்படுத்திக் கொள்ளும்.
கார்த்திக்கும் நீரஜ் சோப்ராவும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்று பலர் கருத்து.
துபாய்:
நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் அதில் பங்கெடுத்துள்ள ஒரு வீரர், இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவைப் போலவே இருக்கிறார் என்று நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர்.
ஐபிஎல் 2021-ன் 32வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 185 ரன்கள் அடித்தது.
இதைத் தொடர்ந்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்ட பஞ்சாப் அணி, கண்டிப்பாக வெற்றிவாகை சூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி ஓவரை வீச வந்த ராஜஸ்தானின் கார்த்திக் தியாகி, வரலாற்றை மாற்றி எழுதினார். கடைசி ஓவரில் பஞ்சாப், 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. ஆனால் கார்த்திக், 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வெற்றிபெற வைத்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
கார்த்திக், தன் அசத்தலான பந்துவீச்சின் மூலம் ஒரே நாளில் உலக புகழ் பெற்றார். இது ஒரு பக்கம் இருக்க, சில நெட்டிசன்கள் கார்த்திக்கும் நீரஜ் சோப்ராவும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்று சொல்லி, இருவருடைய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர். இதை பலரும் ஆமோதித்து வருகிறார்கள்.

ராஜஸ்தான் அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக ஐ.பி.எல். நிர்வாகம் விதித்துள்ளது.
துபாய்:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்தது. இதில் 186 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து அடங்கியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு வெறும் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தும் கடும் நெருக்கடிக்கு ஆளான பஞ்சாப் அணி 2 விக்கெட்டை இழந்து ஒரு ரன் மட்டும் எடுத்து பரிதாபகரமாக வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல்-மயங்க் அகர்வால் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. ஐ.பி.எல். போட்டியில் இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் திரட்டிய 4 முறையும் பஞ்சாப் அணி தோல்வியையே சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி ஓவரை பிரமாதமாக வீசிய ராஜஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி, நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியதுடன், ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அத்துடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக ஐ.பி.எல். நிர்வாகம் விதித்துள்ளது.
போட்டிக்கு பிறகு பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்பிளே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இலக்கை நெருங்கி வந்து தோல்வி அடைவது எங்களுக்கு கொஞ்சம் வழக்கமாகி விட்டது. குறிப்பாக துபாயில் இந்த மாதிரி நடக்கிறது. 19-வது ஓவரில் ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்பது தான் எங்களது தெளிவான திட்டமாகும். அது தான் எங்களுடைய அணுகுமுறையாகவும் இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றுவிட்டது. கடைசி சில பந்துகளில், அதிர்ஷ்டத்தை பொறுத்தும் எதுவும் நடக்கலாம். கடைசி ஓவரை கார்த்திக் தியாகி வீசிய விதம் பாராட்டுக்குரியதாகும். அவர் சில பந்துகளை ஆப் ஸ்டம்ப்புக்கு வெளியே வைடாக வீசினார். ஆனால் எங்கள் பேட்ஸ்மேன்கள் அதற்கு தகுந்தபடி செயல்படவில்லை.
இந்த மாதிரி நெருக்கமாக வந்து தோற்கும் பிரச்சினை குறித்து நாங்கள் ஆலோசித்து தீர்வு காண வேண்டியது அவசியமானதாகும். எங்களுக்கு இன்னும் 5 ஆட்டங்கள் இருக்கிறது. இதனால் இந்த தோல்வியால் துவண்டு போய்விடக்கூடாது.’ என்றார்.
இதையும் படியுங்கள்... ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
அனுபவ வீரர் ஷிகர் தவான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எளிதாக வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்.
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் டேவிட் வார்னர், விருத்திமான் சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அன்ரிச் நோர்ஜே வீசினார். முதல் ஓவரிலேயே வார்னர் ரன்ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார். அதன்பின் வந்த கேன் வில்லியம்சன் 18 ரன்னிலும், சகா 18 ரன்னிலும், மணிஷ் பாண்டே 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 74 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் தத்தளித்தது.
அதன்பின் வந்த அப்துல் சமாத் 21 பந்தில் 28 ரன்களும், ரஷித் கான் 19 பந்தில் 21 ரன்களும் சேர்க்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் நோர்ஜே 2 விக்கெட்டும், ரபடா 3 விக்கெட்டும், அக்சார் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரத்வி ஷா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் உடன் ஷ்ரேயாஸ் அய்யர ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தவான் 37 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி கேப்பிடல்ஸ் 10.5 ஓவரில் 72 ரன்கள் எடுத்திருந்தது. தவான்- ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தது.
3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கடைசி ஐந்து ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது.
அதன்பின் ரிஷாப் பண்ட் அதிரிடியாக விளையாட 17.5 ஓவரில் டெல்லி அணி 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது.
பண்ட் 21 பந்தில் 35 ரன்கள் எடுத்தும் ஷ்ரேயாஸ் அய்யர் 41 பந்தில் 47 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்கமால் இருந்தனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை.
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் டேவிட் வார்னர், விருத்திமான் சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அன்ரிச் நோர்ஜே வீசினார். முதல் ஓவரிலேயே வார்னர் ரன்ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார். அதன்பின் வந்த கேன் வில்லியம்சன் 18 ரன்னிலும், சகா 18 ரன்னிலும், மணிஷ் பாண்டே 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 74 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் தத்தளித்தது.

அதன்பின் வந்த அப்துல் சமாத் 21 பந்தில் 28 ரன்களும், ரஷித் கான் 19 பந்தில் 21 ரன்களும் சேர்க்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் நோர்ஜே 2 விக்கெட்டும், ரபடா 3 விக்கெட்டும், அக்சார் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் இன்றிரவு நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:
1. டேவிட் வார்னர், 2. சஹா, 3. கேன் வில்லியம்சன், 4. மணிஷ் பாண்டே, 5. ஜேசன் ஹோல்டர், 6. அப்துல் சமாத், 7. கேதர் ஜாதவ், 8. ரஷித் கான், 9. புவனேஷ்வர் குமார். 10. சந்தீர் சர்மா, 11. கலீல் அஹமது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி:
1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷாப் பண்ட், 5. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 6. ஷிம்ரோன் ஹெட்மையர், 7. அக்சர் பட்டேல், 8. அஷ்வின், 9. ரபடா, 10. அன்ரிச் நோர்ஜோ, 11. அவேஷ் கான்.
மெஸ்சி பார்சிலோனாவில் இருந்து பி.எஸ்.ஜி. அணிக்கும் ரொனால்டோ யுவான்டஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கும் சென்றபின் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரர்களாக போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி ஆகியோர் திகழ்ந்து வருகிறார்கள். அதிக கோல்கள், விருதுகள், வருமானம் என எதை எடுத்தாலும் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும்.
லா லிகாவில் பார்சிலோனா அணிக்காக மெஸ்சி விளையாடும்போதும், ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ விளையாடும்போது இரு அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்ப்பதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
மெஸ்சிக்கு பார்சிலோனா மிக அதிக அளவில் சம்பளம் கொடுத்து வந்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரியல் மாட்ரிட் அதிக சம்பளம் கொடுத்தாலும் மெஸ்சியைவிட குறைவாகத்தான் வாங்கினார். மேலும், வணிக ஒப்பந்தம் உள்பட இதர வருமானத்திலும் மெஸ்சி முன்னிலை பெற்றிருந்தார்.
ரொனால்டோ யுவென்டஸ் அணிக்கு சென்ற பிறகு, அவரது சம்பளம் வெகுவாக குறைந்தது. தற்போது மெஸ்சி பார்சிலோனாவில் இருந்து விலகி பி.எஸ்.ஜி. அணிக்கு சென்றுள்ளார். இதனால் மெஸ்சி சம்பளம் குறைந்துள்ளது.
இந்த நிலையில் 2021-22 சீசனில் மெஸ்சியை விட ரொனால்டோ அதிக வருமானம் ஈட்டும் நபராக இருப்பார் என போர்ப்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. ரொனால்டோ வரியுடன் 125 மில்லின் டாலர் சம்பளம் பெறும் நிலையில், மெஸ்சி 110 மில்லியன் டாலரே பெறுவார் எனத் தெரிவித்துள்ளது.
மான்செஸ்டர் யுனைடெ் அணி ரொனால்டோவுக்கு போனஸ் உடன் சேர்த்து 70 மில்லியன் டாலர் சம்பளம் கொடுக்கிறது. வணிக ஒப்பந்தம் மூலம் 55 மில்லியன் வருமானம் ஈட்டுகிறார்.
மெஸ்சி சம்பளம் மற்றும் போனஸ் மூலம 75 மில்லியன் டாலர் ஈட்டுவார் எனத்தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்... சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரருக்கு கொரோனா: இன்றைய போட்டி நடைபெறுமா?
கண்ணை மூடிக்கொண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிதான் வெற்றிபெறும் என ரசிகர்கள் சொல்லக்கூடிய நிலையில் இருந்து, எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தது.
ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 185 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால், கே.எல். ராகுல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 67 ரன்கள் விளாசினார். கே.எல். ராகுல் 49 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.
என்றாலும் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபின், அந்த அணி 2 ரன்னில் தோல்வியை சந்தித்தது. 12 பந்தில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் அவர்களால் அடிக்க முடியவில்லை. பஞ்சாப் அணி இதுபோன்று முதலில் சிறப்பாக விளையாடி கடைசியில் தோல்வியை சந்திப்பது முதல் முறையல்ல. பெரும்பாலான ஆட்டங்களில் இப்படித்தான் தோல்வியை சந்தித்துள்ளது.
மேலும், மயங்க் அகர்வால் 2019-ல் இருந்து ஏழு முறை அணிக்காக அதிகபட்ச ரன்கள் சேர்த்தபோது, அந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், கே.எல். ராகுல்- மயங்க் அகர்வால் ஜோடி நான்கு முறை 100 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. நான்கு முறையும் அந்த அணி தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரருக்கு கொரோனா: இன்றைய போட்டி நடைபெறுமா?
இன்று இரவு டெல்லி கேப்பிடல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ள நிலையில், வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 2-வது பகுதி ஆட்டங்கள் கடந்த 19-ந்தேதியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. நேற்றுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்த நிலையில் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ள டி. நடராஜனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐ.பி.எல். ஆட்டங்கள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மே மாதம் வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவியதால் ஐ.பி.எல். தொடர் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.