search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மெஸ்சி, ரொனால்டோ
    X
    மெஸ்சி, ரொனால்டோ

    அதிக வருமானம் பெறும் கால்பந்து வீரர்: மெஸ்சியை பின்னுக்குத் தள்ளினார் ரொனால்டோ

    மெஸ்சி பார்சிலோனாவில் இருந்து பி.எஸ்.ஜி. அணிக்கும் ரொனால்டோ யுவான்டஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கும் சென்றபின் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
    கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரர்களாக போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி ஆகியோர் திகழ்ந்து வருகிறார்கள். அதிக கோல்கள், விருதுகள், வருமானம் என எதை எடுத்தாலும் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும்.

    லா லிகாவில் பார்சிலோனா அணிக்காக மெஸ்சி விளையாடும்போதும், ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ விளையாடும்போது இரு அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்ப்பதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

    மெஸ்சிக்கு பார்சிலோனா மிக அதிக அளவில் சம்பளம் கொடுத்து வந்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரியல் மாட்ரிட் அதிக சம்பளம் கொடுத்தாலும் மெஸ்சியைவிட குறைவாகத்தான் வாங்கினார். மேலும், வணிக ஒப்பந்தம் உள்பட இதர வருமானத்திலும் மெஸ்சி முன்னிலை பெற்றிருந்தார்.

    ரொனால்டோ யுவென்டஸ் அணிக்கு சென்ற பிறகு, அவரது சம்பளம் வெகுவாக குறைந்தது. தற்போது மெஸ்சி பார்சிலோனாவில் இருந்து விலகி பி.எஸ்.ஜி. அணிக்கு சென்றுள்ளார். இதனால் மெஸ்சி சம்பளம் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் 2021-22 சீசனில் மெஸ்சியை விட ரொனால்டோ அதிக வருமானம் ஈட்டும் நபராக இருப்பார் என போர்ப்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. ரொனால்டோ வரியுடன் 125 மில்லின் டாலர் சம்பளம் பெறும் நிலையில், மெஸ்சி 110 மில்லியன் டாலரே பெறுவார் எனத் தெரிவித்துள்ளது.

    மான்செஸ்டர் யுனைடெ் அணி ரொனால்டோவுக்கு போனஸ் உடன் சேர்த்து 70 மில்லியன் டாலர் சம்பளம் கொடுக்கிறது. வணிக ஒப்பந்தம் மூலம் 55 மில்லியன் வருமானம் ஈட்டுகிறார்.

    மெஸ்சி சம்பளம் மற்றும் போனஸ் மூலம 75 மில்லியன் டாலர் ஈட்டுவார் எனத்தெரிவித்துள்ளது.

    Next Story
    ×