என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஷார்ஜா மைதானத்தில் மணல் புயல் வீசுவதால் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    ஐ.பி.எல். தொடரின் 35-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் இன்று இரவு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சரியாக 7 மணிக்கு டாஸ் சுண்டப்படும். ஷார்ஜா மைதானத்தில் மணல் புயல் வீசி வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த நிலையில், இங்கிலாந்தும் ஆண்கள், பெண்கள் அணிகள் பாகிஸ்தானில் விளையாடாது எனத் தெரிவித்தது.
    ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது.

    நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு சற்று முன் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து அறிவித்தது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடும் முடிவை திரும்பப் பெற்றது.

    டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கிறது. இரண்டு முக்கிய அணிகள் விலகிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எங்களுடைய கமிட்மென்ட்-க்கு நாங்கள் மதிப்பளிக்க திட்டமிட்டுள்ளோம் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் தலைமை நிர்வாக அதிகாரி ஜானி கிரேவ் தெரிவித்துள்ளார்.

    மேலும், பாகிஸ்தான் தொடரை குறித்து ஜானி கிரேவ் கூறுகையில் ‘‘கிரிக்கெட் தொடர் குறித்த எங்களுடைய கடமைகளுக்கு மதிப்பு அளிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் மாதம் பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கும் தொடரையும் சேர்த்துதான்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் நிர்வாகக்குழு கிரிக்கெட் தொடருக்கான கடமையை நிறைவேற்றாமல் இருப்பது என்பது எங்களுடைய நோக்கமில்லை. எங்களுடைய சுற்றுப்பயண கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். 2018-ம் ஆண்டு நாங்கள் செய்ததை போன்று தனி பாதுகாப்பு நிபுணர்களுடன் செல்வோம்.’’ என்றார்.

    இதன்மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன் கிறிஸ் கெய்ல் பாகிஸ்தானுக்கு செல்ல இருக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், ஐதராபாத் அணி உம்ரான் மாலிக்கை தேர்வு செய்துள்ளது.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த டி. நடராஜன் இடம் பெற்றுள்ளார். நேற்று முன்தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதியது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் டி.நடராஜனுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

    இதனால் 6 வீரர்களுடன் டி.நடராஜன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டி.நடராஜனுக்கு மாற்று வீரராக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அந்த அணியின் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக சென்றனர்.

    தற்போது குறுகிய கால கொரோனா மாற்று வீரராக அணியில் இணைக்கப்பட்டுள்ளார். மாலிக் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். லிஸ்ட் ‘ஏ’ போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை ஈவு இரக்கமின்றி துவம்சம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
    ஐ.பி.எல். 2021 டி20 கிரிக்கெட் லீக்கின் 2-வது பகுதி ஆட்டங்கள் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் பகுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்று 7-வது இடத்தில் இருந்தது.

    2-வது பகுதி தொடரில் புத்துணர்ச்சியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக வெங்கடேஷ் அய்யரை களம் இறக்கியது. 26 வயதான அவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆர்.சி.பி.க்கு எதிராக 27 பந்தில் 41 ரன்கள் விளாசினார். நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 30 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.

    வெங்கடேஷ் மட்டுமல்ல ஒட்டுமொத்த அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர். முதல் ஆட்டத்தில் ஆர்.சி.பி.-யை 92 ரன்னில் சுருட்டியது. அதோடு மட்டுமல்லாமல் 10 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது.

    மும்பைக்கு எதிராக பெரும்பாலும் தோல்வியை சந்திக்கும் கொல்கத்தா நேற்றைய போட்டியில் 156 ரன்னில் கட்டுப்படுத்தியதுடன் 15.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த இரண்டு அசத்தலான வெற்றி மூலம் நிகர ரன் ரேட் (NRR) மைனஸில் இருந்து பிளஸ்-ஆக உயர்ந்ததுடன் 9 போட்டிகளில் நான்கு வெற்றி மூலம் 8 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    4-வது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் 9 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்து 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
    மும்பை அணிக்கு எதிராக மெதுவாக பந்து வீசியதால் கொல்கத்தா அணியில் உள்ள 10 வீரர்களுக்கும் தலா ரூ.6 லட்சத்துக்கும் குறைவாக அல்லது போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும்.

    அபுதாபி:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பையை வீழ்த்தி கொல்கத்தா அணி 4-வது வெற்றியை பெற்றது.

    அபுதாபியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 155 ரன் எடுத்தது. இதனால் கொல்கத்தாவுக்கு 156 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    குயிண்டன் டிகாக் அதிகபட்சமாக 42 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்னும் எடுத்தனர். பிரசித் கிருஷ்ணா, பெர்குசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாச்தில் அபார வெற்றி பெற்றது.

    ராகுல் திரிபாதி 42 பந்தில் 74 ரன்னும் (8 பவுண்டரி, 3 சிக்சர்) வெங்கடேஷ் ஐயர் 30 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    கொல்கத்தா அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது. மும்பை அணி 5-வது தோல்வியை தழுவியது. இதனால் அந்த அணி 6-வது இடத்துக்கு பின் தங்கியது.

    இந்த போட்டியில் கொல்கத்தா அணி மீது மெதுவாக பந்து வீசியதாக புகார் எழுந்தது. அவர்கள் நிர்யணிக்கப்பட்ட 20 ஓவர் வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டனர். மெதுவாக பந்து வீசியதற்காக கொல்கத்தா அணி கேப்டன் மார்கனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    அதோடு அந்த அணியில் உள்ள மற்ற 10 வீரர்களுக்கும் தலா ரூ.6 லட்சத்துக்கும் குறைவாக அல்லது போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும்.

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 1000 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

    அபுதாபி:

    ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர் 1000 ரன்னை தொட்டார்.

    ஒரு குறிப்பிட்ட ஐ.பி.எல் அணிக்கு எதிராக எந்த ஒரு வீரரும் 1000 ரன்னை எடுத்தது இல்லை. இதன் மூலம் ரோகித்சர்மா புதிய சாதனையை படைத்தார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ரிஷப் பண்ட் நீடிக்க அணி நிர்வாகம் எடுத்த முடிவை மதிக்கிறேன் என முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை துவம்சம் செய்து 7-வது வெற்றியை ருசித்து மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

    அதன்பின், தோள்பட்டை காயம் காரணமாக முதல் கட்ட போட்டியில் விளையாட முடியாமல் போனதால் கேப்டன் பதவியை இழந்த டெல்லி வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    எனக்கு டெல்லி அணியின் கேப்டன் பதவி அளிக்கப்பட்ட போது நான் வித்தியாசமான மனநிலையில் இருந்தேன். முடிவு எடுப்பது மற்றும் மனப்பக்குவம் மிகவும் நன்றாக இருந்தது. இதன்மூலம் கடந்த 2 ஆண்டுகளில் நான் நிறைய பயனடைந்தேன். ரிஷப் பண்ட் கேப்டனாக தொடருவது என்பது அணி நிர்வாகம் எடுத்த கொள்கை முடிவாகும். நிர்வாகம் எடுத்த முடிவை நான் மதிக்கிறேன்.

    ஷ்ரேயாஸ் அய்யர்

    ரிஷப் பண்ட் இந்த சீசன் தொடக்கத்தில் இருந்து அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இந்த சீசன் முடியும் வரை அவர் கேப்டனாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த முடிவை நான் முற்றிலும் மதிக்கிறேன். அதில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.

    நான் கேப்டனாக இருக்கையில் நெருக்கடியை எதிர்கொள்ள விரும்புவேன். நெருக்கடியும், சவாலும் அதிகமாக இருக்கும்போது, நான் சிறப்பாக செயல்படுவதாக நினைப்பேன். இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் தான் களம் புகுந்தேன். ஆடுகளம் சீரற்ற தன்மை கொண்டதாக இருந்தது. எப்போது களம் கண்டாலும் கடைசி வரை நிலைத்து நின்று வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணமாகும். காயத்தில் இருந்து மீண்ட பிறகு முதல் ஆட்டத்திலேயே அணியின் வெற்றிக்கு பங்களிப்பு அளித்திருப்பது உற்சாகம் அளிக்கிறது என தெரிவித்தார்.
    பாதுகாப்பை காரணம் காட்டி பாகிஸ்தான் சென்று விளையாட நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மறுத்துள்ளன.
    பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடக்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியது நியூசிலாந்து அணி.

    இந்த சம்பவம் நடந்து சில நாட்களே கடந்த நிலையில், இரு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த இங்கிலாந்து அணியும் தொடரிலிருந்து விலகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கவாஜா கூறுகையில், கிரிக்கெட் விளையாட பாதுகாப்பான நாடு என்று பாகிஸ்தான் மீண்டும் நிரூபித்துள்ளது. ஆனாலும் அங்கு விளையாட மாட்டோம் என்று சொல்லும் வீரர்கள், இந்தியாவில் விளையாட மாட்டோம் என்று சொல்ல மாட்டார்கள். காரணம் பணம் என தெரிவித்துள்ளார்.
    மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி தலா அரை சதமடித்து அசத்தினர்.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 34-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா இடம்பெற்றார்.

    அந்த அணியின் டி காக் உடன் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ரோகித் சர்மா 30 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 9.2. ஓவரில் 78 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டி காக் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததால் மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களே அடித்தது.  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சார்பில் பெர்குசன், பிரசித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    அதன்பின், 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெங்கடேஷ் அய்யர், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வெங்கடேஷ் அய்யர் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கினார். தொடர்ந்து அவர் ருத்ரதாண்டவம் ஆடினார்.

    விக்கெட் வீழ்த்திய பும்ரா

    டிரென்ட் பவுல்ட் வீசிய முதல் ஓவரில் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் தலா ஒரு சிக்ஸ் விளாசினர். 2-வது ஓவரை ஆடம் மில்னே வீசினார். இந்த ஓவரில் வெங்கடேஷ் அய்யர் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விரட்டினார். இதனால் கொல்கத்தா அணிக்கு 2 ஓவரில் 30 ரன்கள் கிடைத்தது. 3-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரிலும் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். ஆனால் கடைசி பந்தில் ஷுப்மான் கில் ஆட்டமிழந்தார். அவர் 9 பந்தில் 13 ரன்கள் சேர்த்தார்.

    அடுத்து வெங்கடேஷ் அய்யர் உடன் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பவர்பிளேயான 6 ஓவரில் 63 ரன்கள் குவித்தது. 10 ஓவரில் 111 ரன்கள் விளாசியது. 
    சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் 25 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் திரிபாதி 29 பந்தில் அரைசதம் அடித்தார். 

    வெங்கடேஷ் அய்யர் 53 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த மார்கன் 7 ரன்னில் அவுட்டானார். இறுதியில், கொல்கத்தா 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ராகுல் திரிபாதி 73 ரன்னில் அவுட்டாகாமல் உள்ளார்.
    ரோகித் சர்மா- டி காக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.2 ஓவரில் 78 ரன்கள் குவித்த போதிலும் மும்பை இந்தியன்ஸ் அணியால் மிகப்பெரிய ஸ்கோரை எட்டமுடியவில்லை.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 34-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா களம் இறங்கினார்.

    அந்த அணியின் டி காக் உடன் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ரோகித் சர்மா 30 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 9.2. ஓவரில் 78 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டி காக் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் 14 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ரோகித் சர்மா ஆட்டமிழந்தபின் மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் வேகத்தில் தடைஏற்பட்டது.

    2 விக்கெட் வீழ்த்திய பெர்குசன்

    அதிரடி வீரர் பொல்லார்டு  15 பந்தில் 21 ரன்கள் அடித்து ரன்அவுட் ஆனார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பெர்குசன், பிரசித் கிருஷ்ணா தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    ரோகித் சர்மா களம் இறங்கிய நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 34-வது லீக் ஆட்டம் இன்று அபு தாபியில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணி:-

    டி காக், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சவுரப் திவாரி, பொல்லார்டு, குருணல் பாண்ட்யா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், பும்ரா, டிரென்ட் பவுல்ட்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

    ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, மோர்கன், தினேஷ் கார்த்திக், அந்த்ரே ரஸல், சுனில் நரைன், பெர்குசன், வரண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.
    காயம் காரணமாக உலகக் கோப்பை அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பதவி ஆகியவை ஷ்ரேயாஸ் அய்யருக்கு கை நழுவி போனது.
    இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கியவர் ஷ்ரேயாஸ் அய்யர். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐ.பி.எல். முதல் பகுதியில் விளையாட முடியாமல் போனது. ஆகவே ரிஷாப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் டெல்லி அணி சிறப்பாக விளையாடியதால் ஷ்ரேயாஸ் அய்யருக்கு கேப்டன் பதவி வழங்கப்படவில்லை.

    அதேபோல் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியிலும் இடம் கிடைக்கவில்லை. மாற்று வீரர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார்.

    சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு தற்போது களம் இறங்கியுள்ளார். நேற்று ஐதராபாத் அணிக்கெதிராக சிறப்பாக விளையாடி 41 பந்தில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நேற்றைய போட்டியில் விளையாடியது குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘என்னைப் பொறுத்த வரைக்கும் மிகவும் சிறந்ததாக உணர்கிறேன். நான் திப்தியடைந்தேன் என்று சொல்லவே மாட்டேன். ஏனென்றால், இன்னும் ரன்கள் குவிக்க வேண்டும் என செல்ல வேண்டியுள்ளது. நீங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். ஆகவே, நான் திருப்தியடையவில்லை.

    என்னைப் பொறுத்தவரைக்கும் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யவில்லை. கேப்டனாக இருந்த நேரத்தை ஒப்பிடும்போதுதற்போது நான் அதிக அளவு பேட்டிங் மீது கவனம் செலுத்துகிறேன். நான் நெருக்கடியில் இருக்க விரும்புவேன். நெருக்கடியில் இருக்கும்போதுதான், சவால்கள் அதிகரிக்கும். கடினமான நேரத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற மனநிலையை பெற முயற்சி செய்வேன்.

    நான் இன்று களம் இறங்கும்போது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி இருந்தது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சீராக இல்லை. நான் போட்டியை முடித்துக் கொடுத்து அணியின் முக்கிய வீரராக இருக்க வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டோன்.

    நான் விளையாடும்போதெல்லாம், கடைசி பந்து வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு’’ என்றார்.

    ×