search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி
    X
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

    இரண்டு அசுர வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை ஈவு இரக்கமின்றி துவம்சம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
    ஐ.பி.எல். 2021 டி20 கிரிக்கெட் லீக்கின் 2-வது பகுதி ஆட்டங்கள் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் பகுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்று 7-வது இடத்தில் இருந்தது.

    2-வது பகுதி தொடரில் புத்துணர்ச்சியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக வெங்கடேஷ் அய்யரை களம் இறக்கியது. 26 வயதான அவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆர்.சி.பி.க்கு எதிராக 27 பந்தில் 41 ரன்கள் விளாசினார். நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 30 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.

    வெங்கடேஷ் மட்டுமல்ல ஒட்டுமொத்த அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர். முதல் ஆட்டத்தில் ஆர்.சி.பி.-யை 92 ரன்னில் சுருட்டியது. அதோடு மட்டுமல்லாமல் 10 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது.

    மும்பைக்கு எதிராக பெரும்பாலும் தோல்வியை சந்திக்கும் கொல்கத்தா நேற்றைய போட்டியில் 156 ரன்னில் கட்டுப்படுத்தியதுடன் 15.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த இரண்டு அசத்தலான வெற்றி மூலம் நிகர ரன் ரேட் (NRR) மைனஸில் இருந்து பிளஸ்-ஆக உயர்ந்ததுடன் 9 போட்டிகளில் நான்கு வெற்றி மூலம் 8 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    4-வது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் 9 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்து 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
    Next Story
    ×