என் மலர்
விளையாட்டு
23 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.25 ஆயிரமாகவும், 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.20 ஆயிரமாகவும், 16 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.7 ஆயிரமாகவும் தினசரி போட்டி கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
புதுடெல்லி:
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல்முறையாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் உள்நாட்டு போட்டிகளில் விளையாடும் வீரர்கள் பாதிப்படைந்தனர்.
கடந்த 2019-20-ம் ஆண்டுக்கான உள்ளூர் சீசனில் விளையாடிய வீரர்களுக்கு இந்த சீசனில் கூடுதலாக 50 சதவீத கட்டணம் இழப்பீடாக வழங்கப்படும். அத்துடன் அடுத்த சீசனில் இருந்து உள்ளூர் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான போட்டி கட்டணம் அதிகரிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா ‘டுவிட்டர்’ மூலம் நேற்று அறிவித்து இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரிய உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி 40 ரஞ்சி போட்டிக்கு மேல் விளையாடிய வீரர்களுக்கு தினசரி போட்டி கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டு இனிமேல் ரூ.60 ஆயிரம் கிடைக்கும். இதன்படி ஒரு முதல்தர போட்டிக்கு மொத்தம் ரூ.2.40 லட்சம் ஊதியமாக பெற முடியும். 21 முதல் 40 போட்டிகள் வரை விளையாடிய வீரர்களுக்கு தினசரி போட்டி கட்டணம் ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 20-க்கும் குறைவான போட்டியில் ஆடியவர்களுக்கு தினசரி போட்டி கட்டணம் ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
23 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.25 ஆயிரமாகவும், 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.20 ஆயிரமாகவும், 16 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.7 ஆயிரமாகவும் தினசரி போட்டி கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பயன் அடைவார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல்முறையாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் உள்நாட்டு போட்டிகளில் விளையாடும் வீரர்கள் பாதிப்படைந்தனர்.
கடந்த 2019-20-ம் ஆண்டுக்கான உள்ளூர் சீசனில் விளையாடிய வீரர்களுக்கு இந்த சீசனில் கூடுதலாக 50 சதவீத கட்டணம் இழப்பீடாக வழங்கப்படும். அத்துடன் அடுத்த சீசனில் இருந்து உள்ளூர் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான போட்டி கட்டணம் அதிகரிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா ‘டுவிட்டர்’ மூலம் நேற்று அறிவித்து இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரிய உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி 40 ரஞ்சி போட்டிக்கு மேல் விளையாடிய வீரர்களுக்கு தினசரி போட்டி கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டு இனிமேல் ரூ.60 ஆயிரம் கிடைக்கும். இதன்படி ஒரு முதல்தர போட்டிக்கு மொத்தம் ரூ.2.40 லட்சம் ஊதியமாக பெற முடியும். 21 முதல் 40 போட்டிகள் வரை விளையாடிய வீரர்களுக்கு தினசரி போட்டி கட்டணம் ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 20-க்கும் குறைவான போட்டியில் ஆடியவர்களுக்கு தினசரி போட்டி கட்டணம் ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
23 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.25 ஆயிரமாகவும், 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.20 ஆயிரமாகவும், 16 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.7 ஆயிரமாகவும் தினசரி போட்டி கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பயன் அடைவார்கள்.
சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ள 100 சதங்கள் என்ற சாதனையை சமன்செய்யும் முயற்சியில் விராட் கோலி ஈடுபட்டுள்ளார் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
டி20 இந்திய அணியின் கேப்டன் மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன் போன்ற பதவிகளில் இருந்து விராட் கோலி விலகி உள்ளார். கேப்டன் பதவிகளில் இருந்து விலகினாலும் வீரராக அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தற்போது டெஸ்ட் போட்டியில் 27 சதங்கள், ஒருநாள் போட்டியில் 43 சதங்கள் என மொத்தம் 70 சதங்கள் அடித்துள்ளார்.

இந்நிலையில், கேப்டன் பதவியை உதறியுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, தெண்டுல்கரின் 100 சதங்கள் அடிக்கும் சாதனையை சமன்செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர். அவர் டெஸ்டில் 51 சதங்களும், ஒரு நாள் போட்டியில் 49 சதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆர்.சி.பி.யை 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 31-வது லீக் ஆட்டம் இன்று அபு தாபியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆர்.சி.பி. அணி 92 ரன்னில் படுமோசமாக சுருண்டது.
பின்னர் 93 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. பேட்டிங்கில் சொதப்பிய ஆர்.சி.பி. பந்து வீச்சிலாவது சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.1 ஓவரில் 82 ரன்கள் குவித்தது. ஷுப்மான் கில் 34 பந்தில் 48 ரன்கள் விளாசினார். வெங்கடேஷ் அய்யர் 27 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை ரத்து செய்த நிலையில், இங்கிலாந்தும் தொடரில் இருந்து விலகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்த போதிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. அதற்கு நன்றிக்கடனாக பாகிஸ்தான் சென்று கிரிக்கெட்டில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சம்மதம் தெரிவித்தது.
அதன்படி அடுத்த மாதம் பாகிஸ்தான் சென்று இரண்டு டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சம்மதம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் டி20 போட்டியில் விளையாடுவதில் இருந்து விலகியுள்ளது.
முன்னதாக, நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி நடைபெறுவதற்கு சற்றுமுன் தொடரில் இருந்து விலகியது. இந்த நிலையில் இங்கிலாந்தும் விலகியுள்ளது.
விராட் கோலி, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் என அனைவரும் சொதப்ப கொல்கத்தாவிற்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 92 ரன்னில் சரணடைந்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 31-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்.சி.பி. கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் கேப்டன் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஸ்ரீகர் பரத், தேவ்தத் படிக்கல் உடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

என்றாலும் பரத் 16 ரன்னிலும், படிக்கல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த மேக்ஸ்வெல் 10 ரன்னிலும், டி வில்லியர்ஸ் டக்அவுட்டிலும் வெளியேற ஆர்.சி.பி. 11.4 ஓவரில் 63 ரன்னுக்குள் முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் சரிவில் இருந்து அந்த அணியால் மீள முடியவில்லை.
சச்சின் பேபி 7 ரன்னிலும், வணிந்து ஹசரங்கா டக்அவுட்டிலும், கைல் ஜேமிசன் 4 ரன்னிலும் வெளியேறினர். ஹர்ஷல் பட்டேல் 12 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க 19 ஓவரில் 92 ரன்னில் ஆல்அவுட் ஆனது ஆர்.சி.பி.
கொல்கத்தா அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி, அந்த்ரே ரஸல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் அடிக்கும் பவுண்டரி, சிக்ஸ் மற்றும் எடுக்கும் விக்கெட்டுக்கு டைட்டில் ஸ்பான்சர் முன்கள பணியாளர்களுக்காக நன்கொலை வழங்குகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முன்களத்தில் இருந்து போரிடும் முன்கள பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் நீல நிற ஜெர்சி அணியுடன் விளையாடுகிறார்கள்.
மேலும், இந்த போட்டியில் ஆர்.சி.பி. வீரர்கள் சிக்சர்கள், பவுண்டரிகள் அடித்தாலும் விக்கெட் வீழ்த்தினாலும் டைட்டில் ஸ்பான்சர் முன்கள பணியாளர்களுக்காக நன்கொடை வழங்குகிறது. இதனால் அதிக சிக்ஸ், பவுண்டரிகள் அடிக்க அடிக்க நன்கொடை தொகை அதிகரிக்கும்.
அபு தாபியில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்.சி.பி. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல். 2021 லீக்கின் 31-வது ஆட்டம் அபு தாபியில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போரிடும் முன்கள பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆர்.சி.பி. வீரர்கள் நீல கலர் ஜெர்சியுடன் விளையாடுகிறார்கள்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் விவரம்:
1. விராட் கோலி, 2. தேவ்தத் படிக்கல், 3. எஸ். பரத், 4. மேக்ஸ்வெல், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. வணிந்து ஹசரங்கா, 7. சச்சின் பேபி, 8. கைல் ஜேமிசன், 9. முகமது சிராஜ், 10. ஹர்ஷல் பட்டேல், 11. சஹல்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் விவரம்:
1. ஷுப்மான் கில், 2. நிதிஷ் ராணா, 3. ராகுல் திரிபாதி, 4. மோர்கன், 5, அந்த்துர ரஸல், 6. தினேஷ் கார்த்திக், 7. சுனில் நரைன், 8. வெங்கடேஷ் அய்யர், 9. பெர்குசன், 10. வருண் சக்ரவர்த்தி, 11. பிரசித் கிருஷ்ணா.
டி20 உலகக் கோப்பைக்குப்பின் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நான்கு அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது.
2021-22-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிராக வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் டிசம்பர் 3-ந்தேதி வரை மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
பிப்ரவரி 25-ந்தேதி முதல் மார்ச் 18-ந்தேதி வரை இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
ஜூன் 9-ந்தேதி முதல் ஜூன் 19-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பறவில்லை என்றால், மிகுந்த ஏமாற்றத்துடன் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் தொடங்கி 13 வருடம் நிறைவடைந்து, 14-வது வருடம் நடைபெற்று வருகிறது. 13 முறையில் ஒருமுறை கூட ஆர்.சி.பி. கோப்பையை வென்றதில்லை. அந்த அணியின் கேப்டனாக விராட் கோலி நீண்ட காலமாக இருந்துள்ளார். அவரது தலைமையில் ஆர்.சி.பி. கோப்பையை வென்றதில்லை. இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில்தான் இந்த வருட ஐ.பி.எல். போட்டி முடிந்ததும், ஆர்.சி.பி.யின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்றுவிடுவோம் என ஆர்.சி.பி. அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சஹல் கூறுகையில் ‘‘மீண்டும் ஐ.பி.எல். தொடங்கியுள்ளதால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சீசனில் ஆர்.சி.பி. சிறப்பான தொடக்கத்தை கண்டது. எங்களுடைய முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. இந்த முறை கோப்பையை வெல்லும் அளவிற்கு விராட் கோலி அணியை வழிநடத்திச் செல்வார்.

இந்தியாவுக்காகவும், ஆர்.சி.பி.க்காகவும் விளையாடும்போது விராட் கோலி ஒரே விதமாகவே இருப்பார். இரண்டு அணிகளும் வெற்றிபெற வேண்டும் என்பதில் தீராக வேட்கையாக இருப்பார். அவரது வழிகாட்டுதலில் இரண்டு அணிக்காகவும் விளையாடி அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளேன்’’ என்றார்.
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மார்கஸ் ஸ்டாய்னிஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார்.
ஐ.பி.எல். 2021 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் உலகின் சிறந்த பினிஷராக விரும்புவதாக தெரித்துள்ளார்.
இதுகுறித்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் சுதந்திரமாக விளையாடுகிறோம் என்று நினைக்கிறோம். அது மன எழுச்சியை தருகிறது. நாங்கள் சிறப்பான ஒன்றை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் அடைய முடியும். அதற்கான திறமை உள்ளது. ஏராளமான திறமை வாய்ந்த வீரர்கள் எங்கள்அணியில் உள்ளனர். நாங்கள் கோப்பையை வெல்ல முடியாது என்பதற்கான எந்த காரணமும் இருக்க முடியாது.
அடுத்த மூன்று வருடத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டின் சிறந்த பினிஷராக இருக்க விரும்புகிறேன். இதுதான் என்னுடைய அடுத்த கட்டமாக பார்க்கிறேன்’’ என்றார்.
இதையும் படியுங்கள்... மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம்
ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி 10,075 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள நிலையில், கரோலினா பிளிஸ்கோவா 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் நான்கு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற நவோமி ஒசாகா ஐந்தாவது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
பிரெஞ்ச் ஓபனை வென்ற பார்பரோ கிரேஜ்சிகோவா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஷ்லே பார்டி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.

தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்த வீராங்கனைகள்:-
1. ஆஷ்லே பார்டி (ஆஸ்திரேலியா)
2. அரினா சபலென்கா (பல்கேரியா)
3. கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு)
4. எலினா ஸ்விட்டோலினா (உக்ரைன்)
5. பார்பரோ கிரெஜ்சிகோவா (செக் குடியரசு)
6. இகா ஸ்வியாடெக் (போலந்து)
7. சோபியா கெனின் (அமெரிக்கா)
8. நவோமி ஒசாகா (ஜப்பான்)
9. கார்பைன் முகுருசா (ஸ்பெயின்)
10. பெட்ரா குவிடோவா (செக் குடியரசு)
இதையும் படியுங்கள்.. தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
விராட் கோலி இந்திய அணி மற்றும் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், அதற்கான காரணத்தை கண்டறிவதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக உள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்ற முடியவில்லை என விராட் கோலி மீது விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், உலகக் கோப்பையுடன் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நேற்று ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் உலகக் கோப்பை, ஐபிஎல் போட்டிகள் முடிந்த உடன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார்.
மூன்று வகை கேப்டன் பதவியுடன் பேட்டிங்கிலும் கவனம் செலுத்துவது விராட் கோலிக்கு கூடுதல் சுமையை கொடுப்பதால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இளம் குடும்பம் (Young Family) காரணமாக விராட் கோலி கேப்டன் பதவியை துறந்திருக்கலாம் என தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘தொடக்கத்தில் இருந்து விராட் கோலி ஆர்.சி.பி.யில் இருக்கிறார். தற்போது விராட் கோலி இளம் குடும்பத்தை பெற்றுள்ளார். ஒரு பக்கம் கேப்டன் பதவி அவருக்கு அதிகமான சுமையை கொடுத்திருக்கும். மற்றொரு பக்கம் தனிப்பட்ட குடும்ப சூழ்நிலை சுமையை கொடுத்திருக்கும்.
கேப்டன் பொறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக்கொடுத்து தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதது, அவரது தொழில் முறை கிரிக்கெட்டில் இந்த நேரத்தில் நல்ல முடிவு.
எங்களுக்கு அவருடைய கேப்டன் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. சிறந்த கேப்டன். அவருடைய சாதனை அவரை பற்றிச் சொல்லும். எனவே, அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்ற முடிவை அவர் எடுக்க முடியும். டி20 உலகக் கோப்பை நெருங்குவதால் இது நல்ல முடிவு. சிறந்த விராட் கோலியை உலகக் கோப்பை மற்றும் ஐ.பி.எல். தொடரில் நாம் பார்க்க முடியும்’’ என்றார்.
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துகொண்ட விராட் கோலிக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது.






