என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 24-ந் தேதி சார்ஜாவில் எதிர்கொள்கிறது.

    துபாய்:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் ஏப்ரல் 9 முதல் மே 2 வரை இந்தியாவில் நடைபெற்றது. 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று தொடங்கியது.

    துபாயில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது.

    முதலில் விளையாடிய சி.எஸ்.கே. அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களே எடுக்க முடிந்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 58 பந்தில் 88 ரன் எடுத்தார். இதில் 9பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். பிராவோ 8 பந்தில் 23 ரன் (3 சிக்சர்) எடுத்தார்.

    போல்ட், ஆடம் மிலின், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்

    பின்னர் ஆடிய மும்பை அணி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    சவுரப் திவாரி அதிகபட்சமாக 40 பந்தில் 50 ரன் (5 பவுண்டரி) எடுத்தார். பிராவோ 3 விக்கெட்டும், தீபக் சாகர் 2 விக்கெட்டும், ஹாசல்வுட், ‌ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்சுக்கு பதிலடி கொடுத்தது. இந்த சீசனில் டெல்லியில் நடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி மும்பையிடம் தோற்று இருந்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் 12 புள்ளிகள் பெற்று சி.எஸ்.கே. புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. அந்த அணியும், டெல்லியும் தலா 12 புள்ளிகள் பெற்று உள்ளன. ரன் ரேட் அடிப்படையில் டெல்லியை பின்னுக்கு தள்ளி சென்னை முதல் இடத்தை பிடித்து உள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு காரணமான தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஆல் ரவுண்டர் பிராவோ ஆகியோரை கேப்டன் டோனி பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஒரு கட்டத்தில் 30 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தோம். அப்போது ஒரு நல்ல ஸ்கோர் வேண்டும் என்று நாங்கள் 140 ரன் வரை எதிர்பார்த்தோம். ஆனால் 160 ரன் வரை நெருங்கிவிட்டோம். இது மிகவும் பிரமாதமாக இருந்தது.

    ருதுராஜ் கெய்க்வாட்டும், பிராவோவும் நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டனர்.

    ஆடுகளம் இரண்டு நிலையில் இருந்தது. தொடக்கத்தில் சற்று மெதுவாக இருந்தது. பின் களத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. அம்பர்த்தி ராயுடு காயம் அடைந்தார். அதில் இருந்து மீண்டு வருவது கடினமாக இருந்தது. ஆனால் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஒரு பேட்ஸ்மேன் இறுதி வரை களத்தில் நிற்பது புத்திசாலித்தனமானது.

    இவ்வாறு டோனி கூறி உள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 24-ந் தேதி சார்ஜாவில் எதிர்கொள்கிறது. 4-வது தோல்வியை தழுவிய மும்பை அணி 9-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்சை 23-ந் தேதி அபுதாபியில் சந்திக்கிறது.

    அபுதாபியில் இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர்- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கொல்கத்தா 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.


    பாகிஸ்தான் மூத்த வீரர் முகமது ஹபீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் நியூசிலாந்து அணியை கிண்டல் செய்துள்ளார்.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றது.

    இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 17-ந் தேதி நடைபெற இருந்த நிலையில் நியூசிலாந்து அணி தொடரை ரத்து செய்தது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நாட்டு அரசு அறிவுறுத்தியதன் பேரில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென இந்த முடிவை எடுத்தது. உடனடியாக நியூசிலாந்து அணி அந்த நாட்டில் இருந்து விளையாடாமலேயே திரும்பியது.

    நியூசிலாந்தின் இந்த முடிவால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சி அடைந்தது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அந்நாட்டு முன்னாள் வீரர்கள் பலரும் நியூசிலாந்து கிரிக்கெட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    பாகிஸ்தான் மூத்த வீரர் முகமது ஹபீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்து நியூசிலாந்து அணியை தாக்கி இருந்தார்.

    இந்தநிலையில் பாகிஸ்தான் தொடரை ரத்து செய்ததற்காக நியூசிலாந்து வீரர்களை குற்றம் சுமத்த வேண்டாம் என்று அந்நாட்டு வேகப்பந்து வீரர் மிச்சேல் மெக்லெகன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ரத்து செய்ததற்காக நியூசிலாந்து வீரர்களை குறைகூற வேண்டாம். ஏனெனில் அவர்கள் தங்களது அரசாங்கத்தின் ஆலோசனையை பின்பற்றுகிறார்கள். வீரர்களையோ, அமைப்பையோ குற்றம் சாட்ட வேண்டாம். எங்கள் அரசை குறை கூறுங்கள். அரசு சொல்வதைதான் வீரர்கள் கேட்டு உள்ளனர்.

    அனைத்து வீரர்களுமே விளையாட வேண்டும் என்பதை விரும்பினார்கள். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. இதை புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு மெக்லெகன் கூறி உள்ளார்.

    டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது.
    அபுதாபி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 30 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், புள்ளி பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது.

    சென்னை அணி  8 ஆட்டங்களில் 2 தோல்வி 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

    டெல்லி கேப்பிடல்ஸ் 8 ஆட்டங்களில் 2 தோல்வி, 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

    பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 4-வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்தில் உள்ளது.

    2021 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
    புதுடெல்லி:

    ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

    இந்நிலையில், ஐபிஎல் இரண்டாவது போட்டிகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர ஷேவாக் கூறியதாவது:

    இரண்டாம் பாதி துபாய் மற்றும் அபுதாபிக்கு மாற்றப்பட்டதால் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்சுக்கு கூடுதல் வாய்ப்புள்ளது என்றார்.

    இஷான் கிஷன்

    மேலும், ஐபிஎல் தொடரில் எனது முதல் தேர்வு இஷான் கிஷன். அவரைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கல், கே.எல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன். இந்த நான்கு பேரையும் நான் கூர்ந்து கவனிப்பேன்.

    நான் தேவ்தத்தின் பேட்டிங்கை நேசித்து வருகிறேன். நால்வரில் ஒருவரை நான் தேர்வு செய்ய வேண்டும் என்றால் தேவ்தத் படிக்கல் எனது தேர்வு என தெரிவித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்படலாம். யாருக்கு தெரியும், அவர் சிறப்பாக செயல்பட்டால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய டாப்-ஆர்டராக அவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் கூறினார்.
    ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 6 வெற்றி, 2 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
    அபுதாபி:

    ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அங்கம் வகிக்கும் ரவீந்திர ஜடேஜா கடந்த 7 போட்டிகளில் 6-வது வீரராக களமிறங்கி வருகிறார். அவருக்கு அடுத்து கேப்டன் தோனி களமிறங்கி வருகிறார்.

    இதற்கிடையே, நேற்று நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி ஜடேஜாவுக்கு முன்னதாக களமிறங்கி 3 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

    சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

    இந்நிலையில், ரவீந்திர ஜடேஜா எந்த வரிசையில் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மஞ்ச்ரேக்கர் தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ரவீந்திர ஜடேஜா எம்.எஸ்.தோனிக்கு முன்னதாகவே பேட் செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். அப்போது தான் அணி சிறப்பாக செயல்படும். மொயீன் அலி மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தாக்க வீரர்களாக மாறியுள்ளனர். எனவே அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் சிறப்பாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    கடைசி நேரத்தில் போட்டியை ரத்து செய்வதற்கு பதிலாக அமீரகத்துக்கு போட்டியை மாற்றி இருக்கலாம் என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்
    லண்டன்:

    பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் களம் இறங்காமலேயே நியூசிலாந்து அணியினர் நாடு திரும்பினர். 

    நியூசிலாந்து அணி கடைசி நேரத்தில் தொடரை ரத்து செய்ததை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

    இதற்கிடையே, இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இந்நிலையில், கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்வதற்கு பதிலாக அமீரகத்துக்கு மாற்றி இருக்கலாம் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்று கருதினால் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதற்கு பதிலாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்ற முயற்சிப்பது புத்திசாலித்தனமாகத் தெரிகிறது.

    முழு ரத்து செய்வதை விட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான விளையாட்டுகள் நடக்கலாம் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
    பந்து வீச்சாளர்கள் அட்டகாசமாக பந்து வீச, மும்பை இந்தியன்ஸ் அணியை 136 ரன்னில் சுருட்டி 6-வது வெற்றியை ருசித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று  நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 58 பந்தில் 88 ரன்கள் விளாசினார்.

    பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் குயின்டான் டி காக் 17 ரன்னிலும், அன்மோல்ப்ரீத் சிங் 16 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 3 ரன்னிலும், இஷான் கிஷன் 11 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனால் மும்பை இந்தியன்ஸ் 58 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. கேப்டன் பொல்லார்ட் 15 ரன்னில் வெளியேற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி உறுதியானது.

    சவுரப் திவாரி கடைசி வரை அணியின் வெற்றிக்காக போராடினார். 18 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி இரண்டு ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது.

    19-வது ஓவரை சர்துல் தாக்குர் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 15 அடித்தது மும்பை இந்தியன்ஸ். இதனால் கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. 

    சென்னை வீரர்கள்

    கடைசி ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் மும்பை அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆகவே, சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

    சவுரப் திவாரி 40 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக ஆர்சிபி அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன் என விராட் கோலி கூறியுள்ளார்.
    அபுதாபி:

    ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, ஐபிஎல் தொடருக்கு பிறகு தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, 

    ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். நான் கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன்.

    ஆர்சிபி அணியின் கேப்டனாக நான் இருந்த நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
    தொடக்க வீரர் ருதுராஜ் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி அரைசதம் அடிக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் மும்பைக்கு 157 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கிங்ஸ்.
    துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. டு பிளிஸ்சிஸ், மொயீன் அலி, அம்பத்தி ராயுடு (காயம் காரணமாக வெளியேறினார்) ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.

    டோனி 3 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் சி.எஸ்.கே. 24 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ருதுராஸ் அபாரமாக விளையாடினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஜடேஜா 33 பந்தில் 26 ரன்கள் சேர்த்தார்.

    ஜடேஜா ஆட்டமிழக்கும்போது சி.எஸ்.கே. 16.4 ஓவரில் 105 ரன்கள் எடுத்திருந்தது. வெய்ன் பிராவோ அதிரடியாக விளையாடி 8 பந்தில் 3 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை ஸ்கோர் 150 ரன்னை நெருங்கியது.

    41 ரன்னில் அரைசதம் அடித்த ருதுராஜ் 58 பந்தில் 88 ரன்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் டிரென்ட் பவுல்ட், ஆடம் மில்னே, பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    டு பிளிஸ்சிஸ், மொயீன் அலி டக்அவுட்டில் வெளியேற சுரேஷ் ரெய்னா 4 ரன்னில் ஆட்டமிழக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 24 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்தியா- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று இரவு இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு  தொடங்கியது. சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளிஸ்சிஸ் முதல் ஓவரின் கடைசி பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயீன் அலியும் டக்அவுட்டில் வெளியேறினார்.

    மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்

    3-வது விக்கெடடுக்கு களம் இறங்கிய அம்பத்தி ராயுடன் 3 பந்துகளை சந்தித்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 4 ரன்கள் எடுத்த திருப்தியுடன் வெளியேறினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்துள்ளது.

    அடுத்து எம்.எஸ். டோனி களம் இறங்கினார். தல டோனி சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 ஓவரில் 24 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்ட் செயல்படும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    ஐ.பி.எல். 2021 சீசனின் 2-வது பகுதி ஆட்டங்களுக்கான தொடர் இன்று தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா  இடம்பெறவில்லை. அதனால் பொல்லார்ட் கேப்டனாக செயல்படுகிறார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்:

    1. ருதுராஜ், 2. டு பிளிஸ்சிஸ், 3. மொயீன் அலி, 4. சுரேஷ் ரெய்னா, 5. அம்பத்தி ராயுடு, 6. ரவீந்திர ஜடேஜா, 7. வெய்ன் பிராவோ, 8. டோனி (கேப்டன்), 9. ஷர்துல் தாக்குர், 1. தீபக் சாஹர், 10. ஹேசில்வுட்.

    மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:

    1. குயின்டான் டி காக், 2. இஷான் கிஷன், 3. சூர்யகுமார் யாதவ், 4. அன்மோல்ப்ரீத் சிங், 5. பொல்லார்ட், 6. சவுரப் திவாரி, 7. குருணல் பாண்ட்யா, 8. ஆடம் மில்னே, 9. ராகுல் சாஹர், 10. டிரென்ட் பவுல்ட், 11. பும்ரா.

    முன்னதாக, 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த நிலையில் 4 அணிகளைச் சேர்ந்த சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. அதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தது.
    3-வது அல்லது 4-வது அல்லது இடத்தில் களம் இறங்கி நங்கூரமாக நின்று பேட்டிங் செய்யும் வல்லமை படைத்தவர் சூர்யகுமார் என முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த நிலையில் 4 அணிகளைச் சேர்ந்த சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. அதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தது.

    இந்நிலையில், மீதமுள்ள 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களுக்கு மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது.

    இதையடுத்து,  இந்த தொடர் குறித்து பல்வேறு கருத்துகளை பல்வேறு முன்னாள் வீரர்களும், ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர். அதனடிபடையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக்குழு உறுப்பினருமான சபா கரீம் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    சூர்யகுமார் யாதவ்

    மும்பை இந்தியன் அணி குறித்து  சபா கரீம் கூறுகையில் “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடைத்தது, அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான். போட்டியில், மூன்றாவது அல்லது நான்காவது வரிசையில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ் களத்தில் நீண்ட நேரம் நின்று தொடர்ச்சியாக ரன்களை குவிப்பவர்.  இவரின் விளையாட்டிற்கு ரசிகர்களின் ஆதரவு பெரிதளவு இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
    ×