என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தீபக் சாஹர்
மும்பை இந்தியன்ஸை 20 ரன்னில் வீழ்த்தி 6-வது வெற்றியை ருசித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
By
மாலை மலர்19 Sep 2021 5:57 PM GMT

பந்து வீச்சாளர்கள் அட்டகாசமாக பந்து வீச, மும்பை இந்தியன்ஸ் அணியை 136 ரன்னில் சுருட்டி 6-வது வெற்றியை ருசித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 58 பந்தில் 88 ரன்கள் விளாசினார்.
பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் குயின்டான் டி காக் 17 ரன்னிலும், அன்மோல்ப்ரீத் சிங் 16 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 3 ரன்னிலும், இஷான் கிஷன் 11 ரன்னிலும் வெளியேறினர்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் 58 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. கேப்டன் பொல்லார்ட் 15 ரன்னில் வெளியேற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி உறுதியானது.
சவுரப் திவாரி கடைசி வரை அணியின் வெற்றிக்காக போராடினார். 18 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி இரண்டு ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரை சர்துல் தாக்குர் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 15 அடித்தது மும்பை இந்தியன்ஸ். இதனால் கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் மும்பை அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆகவே, சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சவுரப் திவாரி 40 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Next Story
×