search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எஸ் தோனி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்டம்ப்களை பார்க்காமலேயே ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை எடுத்தார்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.

    தற்போது இந்த போட்டியின் போது வங்காளதேசம் அணியின் விக்கெட் கீப்பர் எடுத்த ரன் அவுட் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. போட்டியின் இக்கட்டான சூழலில் வங்காளதேசம் அணி விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், ஸ்டம்ப்களை பார்க்காமலேயே காற்றில் மிதந்த படி ஸ்டம்பிங் செய்தார்.

     


    இதில் இலங்கை அணியின் தசுன் ஷனகா 9 பந்துகளில் 19 ரன்களை எடுத்திருந்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி ஒன்றில், ஸ்டம்ப்களை பார்க்காமலேயே ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை எடுத்தார்.

    தற்போது இதே போன்று வங்காளதேச விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை வீழ்த்தியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பலர் தோனி மற்றும் லிட்டன் தாஸ் செய்த ஸ்டம்பிங் வீடியோக்களை இணைத்து வெளியிட்டு வருகின்றனர்.



    • 15 சர்வதேச போட்டியில் மட்டுமே மனோஜ் திவாரிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது
    • ரெய்னா, கோலி, ரோகித் ரன்கள் குவிக்க முடியாமல் தவித்தனர் என்றார் மனோஜ்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவர், மனோஜ் திவாரி (Manoj Tiwary).

    வலது கர பேட்ஸ்மேனான திவாரி, அவ்வப்பொது லெக் ப்ரேக் பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். சிறப்பான பேட்ஸ்மேனாக இருந்தும் சர்வதேச கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் மட்டுமே அவரால் பங்கேற்க முடிந்து.

    2011 டிசம்பரில் தனது முதல் சர்வதேச சதத்தை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மனோஜ் பதிவு செய்தார். ஆனால், அதற்கு பிறகு அவர் பல போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

    தற்போது 38 வயதாகும் மனோஜ், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் குறித்து பேட்டியளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனியை சந்திக்க நேர்ந்தால் நான் நிச்சயம் சில கேள்விகளை எழுப்புவேன். மேற்கிந்திய அணிக்கு எதிராக சதம் அடித்தும் இந்திய கிரிக்கெட் அணியின் "பிளேயிங் லெவன்"  வீரர்களில் என்னை சேர்க்கவில்லை.

    என் மீது தவறு ஏதும் இல்லாத போதும் என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என அவரிடம் கேட்பேன். குறிப்பாக, ஆஸ்திரேலியா-இந்தியா போட்டியில் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோகித் சர்மா உட்பட பலரும் ரன்களை குவிக்க முடியாமல் தவித்தனர். நான் அந்த காலகட்டத்தில் சிறப்பாக விளையாடி வந்தேன்.

    ஆனால், அந்த போட்டிக்கு என்னை தவிர்த்தார் தோனி. அது ஏன் என அவரிடம் கேட்பேன்.

    14 போட்டிகளில் தொடர்ந்து நான் புறக்கணிக்கப்பட்டேன்.

    தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும் போது அதை எவரேனும் அழித்தால், அந்த நடவடிக்கையே விளையாட்டு வீரரை கொன்று விடும்.

    வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் நானும் கோலி அல்லது ரோகித் போன்று சிறப்பான வீரராக உருவெடுத்திருக்க முடியும்.

    தற்போது நான் இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. 

    இவ்வாறு திவாரி கூறினார்.

    12 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய மனோஜ் திவாரி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, முழு நேர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    • ஏலத்தில் அவர் ரூ. 20 லட்சம் என்ற அடிப்படை தொகைக்கு வாங்கப்பட்டார்.
    • சி.எஸ்.கே. ரசிகர்களை பெருமையடைய வைப்பேன் என்று ஆரவல்லி அவனிஷ் கூறியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக 18 வயதாகும் ஆரவல்லி அவனிஷ் ராவ் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார்.

    ஐ.பி.எல். தொடரில் 5 கோப்பைகளை வென்ற எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த ஏலத்தில் அவர் ரூ. 20 லட்சம் என்ற அடிப்படை தொகைக்கு வாங்கப்பட்டார்.

    இந்நிலையில் விரைவில் சென்னை அணிக்காக விளையாடி எம்.எஸ். தோனி மற்றும் சி.எஸ்.கே. ரசிகர்களை பெருமையடைய வைப்பேன் என்று ஆரவல்லி அவனிஷ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-

    சென்னை அணிக்காக நான் தேர்வு செய்யப்பட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதை நான் புரிந்து கொள்வதற்கு நீண்ட நேரமானது. நான் தோனி சார் மற்றும் சி.எஸ்.கே. குடும்பத்தை பெருமையடைய வைக்க விரும்புகிறேன். தோனி தலைமையில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும்.

    தோனி அவர்களிடமிருந்து, கடினமான சூழ்நிலையில் எப்படி அசத்துவது என்பதை பற்றி கற்றுக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அவர் விளையாடிய இன்னிங்ஸ்போல அவரிடம் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய அம்சங்கள் இருக்கின்றன

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்பு.
    • முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

    உள்ளநாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கம் வகையில் அதிகாரி பேசியதாக தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்திவைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து, ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கம் வகையில் அதிகாரி பேசியதாக தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

    மேலும், மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்திவைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ஆப்கானிஸ்தானின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் முகமது ஷேசாத்.
    • இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையே "டை" ஆன போட்டியில் சதம் விளாசியிருந்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். தோனி. இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவருக்கும் அணியின் நிர்வாகத்திற்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருந்து வருகிறது. இதனால் தோனி ஒரு வீரரை ஏலத்தில் எடுக்க விருப்பம் தெரிவித்தால், நிர்வாகம் எவ்வளவு தொகை கொடுத்தாவது அவரை ஏலத்தில் எடுத்து விடும்.

    கூல் கேப்டன் எனப் பெயரெடுத்துள்ள எம்.எஸ். டோனி உடல் கட்டுக்கோப்பு (fitness), பீல்டிங் ஆகிய இரண்டு விசயத்தில் கறாராக இருப்பார். கேட்ச் மிஸ் செய்தால், அல்லது பீல்டிங்கில் கோட்டை விட்டால் கடுங்கோபம் அடைவார்.

    ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரராக இருந்தவர் முகமது ஷேசாத். உடல் பருமனாக காணப்படும் ஷேசாத் சிக்ஸ் அடிப்பதில் வல்லவர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவரால் விரைவாக ஓடி ரன்கள் எடுக்க முடியாது. இருந்தபோதிலும் தனது அதிரடி ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அளவில் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர்.

    2018-ம் இந்தியா- ஆப்காகிஸ்தான் இடையிலான சர்வதேச போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது எம்.எஸ். டோனியிடம் அப்போதைய ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கன் பேசியுள்ளார். அப்போது எம்.எஸ். தோனியிடம் பேசியது குறித்து சமீபத்தில் அஸ்கர் ஆப்கன் விவரித்திருந்தார்.

    2018-ல் எம்.எஸ். தோனியிடம் பேசியது குறித்து அஸ்கர் ஆப்கன் கூறியதாவது:-

    2018-ம் ஆண்டு இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆசியக் கோப்பை போட்டிக்குப்பிறகு நீண்ட நேரம் எம்.எஸ். தோனியிடம் பேசிக் கொண்டிருந்தேன். எம்.எஸ். தோனி சிறந்த கேப்டன். இந்திய கிரிக்கெட்டிற்கு கடவுள் வழங்கிய பரிசுதான் எம்.எஸ். தோனி. அவர் தலைசிறந்த மனிதர்.

    முகமது ஷேசாத் குறித்து நாங்கள் அதிகமாக பேசிக் கொண்டோம். நான் எம்.எஸ். தோனியிடம் ஷேசாத் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் எனத் தெரிவித்தேன். தோனி என்னிடம் ஷேசாத் மிகப்பெரிய பானை வைத்திருக்கிறார். அவர் 20 கிலோ எடையை குறைத்தால், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரை எடுத்துக் கொள்வேன் எனக் கூறினார். ஆனால், ஷேசாத் மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்கு திரும்பும்போது, 5 கிலோ எடை அதிகரித்திருந்தார்.

    இவ்வாறு அஸ்கர் ஆப்கன் தெரிவித்திருந்தார்.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான "டை" ஆன போட்டியில் முதலில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் இந்தியா 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நிலையில் 49.5 ஓவரில் 252 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இந்த போட்டியில் முகமது ஷேசாத் 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2-வது போட்டியில் இந்தியா 235 ரன்கள் குவித்தது.
    • ரிங்கு சிங் 9 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் சேர்த்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியபோது ஒரே ஓவரில் நான்கு சிக்சர்கள் அடித்து அணியை வெற்றிபெற வைத்தபோது, அனைவருடைய கண்ணிலும் பட்டவர்தான் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிங்கு சிங்.

    தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரிங்கு சிங் இடம் பிடித்துள்ளார். ஐ.பி.எல். போட்டி வேறு, சர்வதேச போட்டி வேறு. இவரால் அதேபோல் சிறப்பாக விளையாட முடியுமா? இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் ரன் குவித்து கொடுப்பாரா? என்ற சந்தேகம் இருந்தது.

    ஆனால், முதல் போட்டியிலேயே இக்கட்டான நிலையில் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி அசத்தினார். இருந்தபோதிலும், அது நோ-பால் என்பதால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    ரன்கள் அடிக்க வேண்டுமே, விக்கெட்டுகள் விழுந்து கொண்டு இருக்கிறதே என்ற கவலை அவரது முகத்தில் கொஞ்சம் கூட இல்லை. ஆஹா... நமக்கு ஒரு பினிஷர் கிடைத்து விட்டார் என ரசிகர்கள் மனதில் நினைத்துக் கொண்டனர். விமர்சகர்களும் முணுமுணுக்க தொடங்கினர்.

    நேற்றைய 2-வது போட்டியிலும் 14 பந்துகள் இருக்கும்போது களம் இறங்கினார். 9 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்தார். 26 வயதேயாகும் ரிங்கு சிங்கை இனிமேல் ஒயிட்பால் கிரிக்கெட் இந்திய அணியில் தொடர்ந்து பார்க்கலாம். இவர்தான் இனிமேல் பினிஷர். தல தோனியை செய்த வேலையை இவர்தான் செய்வார் என ரசிகர்கள் வெளிப்படையாக நம்பிக்கை தெரிவிக்க ஆரம்பித்தனர்.

    ரசிகர்களின் கருத்தை தனது புன்னகையால் மறைமுகமாக தெரிவித்தார் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.

    போட்டி முடிவடைந்தபின் பரிசு வழங்கும் நிகழ்ச்சியின்போது சூர்யகுமார் யாதவ் பேசுகையில் "இளம் வீரர்கள் என் மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். அவர்களிடம் முன்னதாகவே, முதல் பேட்டிங்கிற்கு தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டேன். மைதானத்தில் பனி அதிகமாக இருந்தது. பின்னர், ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்துவது குறித்து பேசினோம்.

    ரிங்கு சிங் முதல் போட்டியில் பேட்டிங் செய்தபோது, அவர் வெளிப்படுத்திய நிதானம் அற்புதமானது. எனக்கு அவர் ஒருவரை நினைவூட்டினார் (புன்னகை). ஒவ்வொருவருக்கும் அதன் விடை தெரியும் (மீண்டும் புன்னகை)." என்றார்.

    இந்த அணியின் தலைசிறந்த பினிஷராக எம்.எஸ். டோனி திகழ்ந்தார். எந்தவொரு சூழ்நிலையிலும் தனது நிதானத்தை இழக்கமாட்டார். இறுதி கட்ட ஓவரை சிறப்பான வகையில் டார்கெட் செய்வார். தற்போது அதேவழியில் ரிங்கு சிங் செல்கிறார் என்பதை புன்னகை மூலம் சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்திருக்கலாம்.

    • சென்னை அணியில் இருந்து எட்டு வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
    • 2024 ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன், அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றிக்கொள்ள முடியும். அதன்படி வீரர்களை தங்களது அணியில் வைத்துக்கொள்ளவும், விடுவிக்கவும் முடியும்.

    அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல். தொடருக்காக ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொண்ட, விடுவித்த வீரர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றன. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் எம்.எஸ். தோனி தக்கவைக்கப்பட்டுள்ளார்.

    மேலும் சென்னை அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷூ சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா என மொத்தம் எட்டு வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த அறிவிப்பின் படி, 2024 ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

    சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு..

    எம்.எஸ். தோனி, டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜின்க்யா ரகானே, ஷேக் ரஷீத், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், மொயின் அலி, ஷிவம் தூபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ராஜ்வர்தன் ஹங்கரேக்கர், தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி, பிரஷாந்த் சொலங்கி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே மற்றும் மதீசா பதிரனா.

    • இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் எம்.எஸ்.தோனி ஒருவராக போற்றப்படுகிறார்.
    • பல்வேறு திறமைகள் பெற்றிருந்தாலும் தோனியின் கேப்டன்ஷிப் அதிகளவில் புகழ்பெற்றதாக உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் எம்.எஸ்.தோனியும் ஒருவராக போற்றப்படுகிறார். அதிரடியாக பேட்டிங் செய்தும், மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தும், நிறைய போட்டிகளில் பினிஷராக இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

    இப்படி பல்வேறு திறமைகள் பெற்றிருந்தாலும், தோனியின் கேப்டன்ஷிப் தான் அதிகளவில் புகழ்பெற்றதாக உள்ளது. மற்றவர்களை விட வித்தியாசமாக சிந்தித்து, பல்வேறு தருணங்களில் தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றிகளைக் கண்டுள்ளார்.

    இந்நிலையில், கேப்டனாக தோனி எடுக்கும் முடிவுகளை பற்றி இந்திய கிரிக்கெட்டில் யாருமே கேள்வி கேட்க மாட்டார்கள் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அம்பத்தி ராயுடு அளித்துள்ள பேட்டியின் விவரம் வருமாறு:

    வீரர்களிடம் இருக்கும் சிறந்த திறமையை தோனி வெளிக்கொணர்வார் என்பதை அனைவரும் அறிவார்கள். சென்னை அணியில் விளையாடிய சில வெளிநாட்டு வீரர்களின் திறமையை கூட தோனி சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளார்.

    அந்தப் பண்பு அவரிடம் இயற்கையாகவே இருக்கிறது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்பது கூட அவருக்கு தெரியாது. ஒருவேளை அவர் அந்த திறமையை ஆசீர்வாதமாக பெற்றிருக்கலாம்.

    பெரும்பாலான தருணங்களில் நான் நினைக்காதவற்றை எப்படி அவர் செய்கிறார் என்று ஆச்சரியமாக பார்ப்பேன். ஒவ்வொரு நாளின் இறுதியிலும் 99.99 சதவீத தருணங்களில் அவர் சரியான முடிவுகளையே எடுத்திருப்பார். அதை அவர் நீண்ட காலமாக வெற்றிகரமாக செய்து வருகிறார்.

    அதனால் இந்திய கிரிக்கெட்டில் எந்த இடத்தில் இருக்கும் நபராலும் அவருடைய முடிவுகளை கேள்வி கேட்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை என தெரிவித்தார்.

    • பயண நேரத்தை கழிப்பதற்காக தோனி தனது டேப்பில் கேண்டி கிரஸ் கேமை விளையாடி கொண்டு இருக்கிறார்.
    • பணிப்பெண் ஒருவர் ஒரு தட்டு முழுவதும் சாக்லெட்டுகளை எடுத்து வந்து தோனியிடம் வழங்குகிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஐ.பி.எல். போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் அவரை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகும். அதுபோன்ற ஒன்று தற்போதும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    அதில் தோனி ஒரு விமானத்தில் பயணம் செய்கிறார். பயண நேரத்தை கழிப்பதற்காக அவர் தனது டேப்பில் கேண்டி கிரஸ் கேமை விளையாடி கொண்டு இருக்கிறார். அப்போது பணிப்பெண் ஒருவர் ஒரு தட்டு முழுவதும் சாக்லெட்டுகளை எடுத்து வந்து தோனியிடம் வழங்குகிறார். இதைப்பார்த்து மகிழ்ந்த தோனி அன்புக்காக ஒரு சாக்லேட்டை மட்டும் எடுத்துக்கொண்டார். அப்போது அந்த பணிப்பெண் ஒரு பேப்பரை கொடுத்தார். அதில் ஏதோ எழுதியிருந்தது.

    அதைப்படித்துப் பார்த்த தோனி பணிப்பெண்ணுக்கு நன்றி தெரிவித்து விட்டு மீதமுள்ள சாக்லேட்டுகளை திருப்பி கொடுப்பது போன்ற காட்சிகள் உள்ளது.


    • இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி வாகனங்கள் மீது தனி பிரியம் கொண்டவர்.
    • தனது இல்லத்தில் ஏராளமான பைக் மற்றும் கார்களை வாங்கி கரேஜ் ஒன்றை எம்எஸ் தோனி வைத்திருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் கார் மற்றும் பைக் மீது அதீத மோகம் கொண்டவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. உலக கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளுக்கு பெயர் பெற்ற எம்எஸ் தோனி தனது வீட்டில் ஏராளமான பழைய மற்றும் அதிநவீன கார், பைக் வாங்கி சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    இந்த வரிசையில், எம்எஸ் தோனி கரேஜில் புதுவரவு வாகனமாக கியா EV6 சேர்ந்து இருக்கிறது. இது எம்எஸ் தோனி வாங்கி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் வீடியோவில், எம்எஸ் தோனி கியா EV6 மாடலில் கிரிக்கெட் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோருடன் அமரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    கிரெ நிறம் கொண்ட கியா EV6 மாடல் முற்றிலும் புதிதாக காட்சியளிப்பதோடு, தற்காலிக பதிவு எண் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட கியா EV6 விலை உயர்ந்த முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இந்த கார் சிபியு முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. மேலும் கியா EV6 மாடல் குறுகிய எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கியா EV6 மாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக காரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த கியா இந்தியா முடிவு செய்துள்ளது. இதுவரை இந்திய சந்தையில் மட்டும் சுமார் 200-க்கும் அதிகமான கியா EV6 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் கியா EV6 விலை ரூ. 59 லட்சத்து 95 ஆயிரம் என துவங்குகிறது. இதில் 2 வீல் டிரைவ் வசதி, முன்புறம் மவுண்ட் செய்யப்பட்ட ஒற்றை மோட்டார் உள்ளது. இது 229 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே கார் வெவ்வேறு பேட்டரி மற்றும் சார்ஜிங் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ×