என் மலர்
விளையாட்டு

கணவனுடன் சண்டை வந்தால்... மணப்பெண்ணுக்கு அறிவுரை கூறிய தோனி
- மணமக்களுக்கு சில ஆலோசனைகளை நகைச்சுவையுடன் கூறியது, இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
- நீங்கள் உலக கோப்பையை வென்றீர்களா, இல்லையா என்பது இங்கே முக்கியமில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி, ஆட்டக் களத்தில் அமைதியானவர் என்று பெயர் பெற்றவர். அதனால் அவரை 'கேப்டன் கூல்' என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள். சமீபத்தில் அவர் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது மணமக்களுக்கு சில ஆலோசனைகளை நகைச்சுவையுடன் கூறியது, இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
மணமக்களுக்கு அருகில் நின்றபடி மைக்கில் பேசிய தோனி, "திருமணம் என்பது நல்ல விஷயம். நீங்கள் அவசரப்பட்டு அதை செய்து கொண்டீர்கள். சிலர் நெருப்புடன் விளையாட விரும்புகிறார்கள். அவர்களில் மணமகனும் ஒருவர். எல்லோருமே இதே மாயபடகில்தான் இருக்கிறார்கள்" என்று அவர் கூறியதும், விழா அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
தொடர்ந்து பேசிய தோனி, 'நீங்கள் உலக கோப்பையை வென்றீர்களா, இல்லையா என்பது இங்கே முக்கியமில்லை. திருமணத்துக்குப் பிறகு அனைத்து கணவர்களும் ஒரே நிலையில்தான் இருப்பார்கள் என்பதை மனைவி புரிந்து கொள்ள வேண்டும்." என்று கூறிய அவர், பின்னர் மணமகனிடம் திரும்பி, "உங்கள் மனைவி வித்தியாசமானவர் என்று நினைத்தால் நீங்களும் தவறாக நினைக்கிறீர்கள் என்று அர்த்தம்" என்றார். அதற்கு மணமகன், "ஆமாம் என்னுடையவர் வேறுபட்டவர் அல்ல என்றார். இதைக்கேட்டு அனைவரும் சிரித்தனர்.
இறுதியில் இருவருக்கும் சேர்த்து ஒரு ஆலோசனை கூறினார் தோனி, "சண்டை வந்தால் அமைதியாக இருங்கள். ஆண்கள் 5 நிமிடத்தில் அமைதியாகிவிடுவார்கள். அவர்களின் சக்தி அவர்களுக்குத் தெரியும்" என்றார். டோனியின் அறிவுரைகள் திருமணவிழாவை கலகலப்பாக்கியது.






