என் மலர்

  செய்திகள்

  மார்கஸ் ஸ்டாய்னிஸ்
  X
  மார்கஸ் ஸ்டாய்னிஸ்

  உலகின் சிறந்த பினிஷராக விருப்பம்: டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் சொல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மார்கஸ் ஸ்டாய்னிஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார்.
  ஐ.பி.எல். 2021 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். மார்கஸ் ஸ்டாய்னிஸ்  உலகின் சிறந்த பினிஷராக விரும்புவதாக தெரித்துள்ளார்.

  இதுகுறித்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் சுதந்திரமாக விளையாடுகிறோம் என்று நினைக்கிறோம். அது மன எழுச்சியை தருகிறது. நாங்கள் சிறப்பான ஒன்றை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் அடைய முடியும். அதற்கான திறமை உள்ளது. ஏராளமான திறமை வாய்ந்த வீரர்கள் எங்கள்அணியில் உள்ளனர். நாங்கள் கோப்பையை வெல்ல முடியாது என்பதற்கான எந்த காரணமும் இருக்க முடியாது.

  அடுத்த மூன்று வருடத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டின் சிறந்த பினிஷராக இருக்க விரும்புகிறேன். இதுதான் என்னுடைய அடுத்த கட்டமாக பார்க்கிறேன்’’ என்றார்.

  Next Story
  ×