என் மலர்

  செய்திகள்

  டி வில்லியர்ஸ் போல்டாகிய காட்சி
  X
  டி வில்லியர்ஸ் போல்டாகிய காட்சி

  பேட்ஸ்மேன்கள் சொதப்பல்- 92 ரன்னில் சுருண்டது ஆர்.சி.பி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விராட் கோலி, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் என அனைவரும் சொதப்ப கொல்கத்தாவிற்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 92 ரன்னில் சரணடைந்தது.
  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 31-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்.சி.பி. கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

  அதன்படி அந்த அணியின் கேப்டன் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஸ்ரீகர் பரத், தேவ்தத் படிக்கல் உடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

  விராட் கோலி அவுட்

  என்றாலும் பரத் 16 ரன்னிலும், படிக்கல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த மேக்ஸ்வெல் 10 ரன்னிலும், டி வில்லியர்ஸ் டக்அவுட்டிலும் வெளியேற ஆர்.சி.பி. 11.4 ஓவரில் 63 ரன்னுக்குள் முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் சரிவில் இருந்து அந்த அணியால் மீள முடியவில்லை.

  சச்சின் பேபி 7 ரன்னிலும், வணிந்து ஹசரங்கா டக்அவுட்டிலும், கைல் ஜேமிசன் 4 ரன்னிலும் வெளியேறினர். ஹர்ஷல் பட்டேல் 12 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க 19 ஓவரில் 92 ரன்னில் ஆல்அவுட் ஆனது ஆர்.சி.பி.

  கொல்கத்தா அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி, அந்த்ரே ரஸல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 
  Next Story
  ×