என் மலர்

  செய்திகள்

  சஹல்
  X
  சஹல்

  விராட் கோலி இந்த முறை ஆர்.சி.பி.யை சாம்பியனுக்கு எடுத்துச் செல்வார்: சஹல் நம்பிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பறவில்லை என்றால், மிகுந்த ஏமாற்றத்துடன் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவார்.
  ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் தொடங்கி 13 வருடம் நிறைவடைந்து, 14-வது வருடம் நடைபெற்று வருகிறது. 13 முறையில் ஒருமுறை கூட ஆர்.சி.பி. கோப்பையை வென்றதில்லை. அந்த அணியின் கேப்டனாக விராட் கோலி நீண்ட காலமாக இருந்துள்ளார். அவரது தலைமையில் ஆர்.சி.பி. கோப்பையை வென்றதில்லை. இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்தது.

  இந்த நிலையில்தான் இந்த வருட ஐ.பி.எல். போட்டி முடிந்ததும், ஆர்.சி.பி.யின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

  இந்த நிலையில் இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்றுவிடுவோம் என ஆர்.சி.பி. அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து சஹல் கூறுகையில் ‘‘மீண்டும் ஐ.பி.எல். தொடங்கியுள்ளதால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சீசனில் ஆர்.சி.பி. சிறப்பான தொடக்கத்தை கண்டது. எங்களுடைய முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. இந்த முறை கோப்பையை வெல்லும் அளவிற்கு விராட் கோலி அணியை வழிநடத்திச் செல்வார்.

  விராட் கோலி

  இந்தியாவுக்காகவும், ஆர்.சி.பி.க்காகவும் விளையாடும்போது விராட் கோலி ஒரே விதமாகவே இருப்பார். இரண்டு அணிகளும் வெற்றிபெற வேண்டும் என்பதில் தீராக வேட்கையாக இருப்பார். அவரது வழிகாட்டுதலில் இரண்டு அணிக்காகவும் விளையாடி அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளேன்’’ என்றார்.
  Next Story
  ×