என் மலர்

  செய்திகள்

  பிசிசிஐ
  X
  பிசிசிஐ

  2021-22-ல் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி20 உலகக் கோப்பைக்குப்பின் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நான்கு அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது.
  2021-22-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது.

  நியூசிலாந்துக்கு எதிராக வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் டிசம்பர் 3-ந்தேதி வரை மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

  அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

  பிப்ரவரி 25-ந்தேதி முதல் மார்ச் 18-ந்தேதி வரை இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

  ஜூன் 9-ந்தேதி முதல் ஜூன் 19-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.  அதன்பின் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறது.
  Next Story
  ×