search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    93 ரன்கள் அடித்த ராச்சல் ஹெயின்ஸ்
    X
    93 ரன்கள் அடித்த ராச்சல் ஹெயின்ஸ்

    பெண்கள் கிரிக்கெட் - முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா

    இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டார்சி பிரவுன் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    மெக்கே:

    இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்தது. இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 63 ரன்னில் அவுட்டானார். யஸ்திகா பாட்டியா 35 ரன்னும், ரிச்சா கோஷ் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அரை சதமடித்த மிதாலி ராஜ்

    ஆஸ்திரேலிய அணி சார்பில் டர்சி பிரவுன் 4 விக்கெட்டும், மொலினக்ஸ், டார்லிங்டன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய பெண்கள் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர். அலிசா ஹீலி 77 ரன்னில் அவுட்டானார். 

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 41 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ராச்சல் ஹெயின்ஸ் 93 ரன்னும், மாக் லானிங் 53 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
    Next Story
    ×