search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிரடி காட்டிய லோம்ரோர்
    X
    அதிரடி காட்டிய லோம்ரோர்

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 186 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்

    ஒருபக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி காட்ட மறுபக்கம் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் அபாரமாக பந்து வீச பஞ்சாப் அணிக்கு 186 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எவின் லீவிஸ் அறிமுகம் ஆனார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் இஷான் பொரேல், எய்டன் மார்கிராம், அடில் ரஷித் ஆகியோர் அறிமுகம் ஆகினர்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் எர்வின் லீவிஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் ராஜஸ்தான் அணிக்கு சிறந்த தொடக்கம் கொடுத்தனர். லீவிஸ் 21 பந்தில் 36 ரன்கள் எடுத்தும், ஜெய்ஸ்வால் 36 பந்தில் 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவரில் 54 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்னில் வெளியேறினார்.

    3 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி

    அதன்பின் ராஜஸ்தானின் ஸ்கோரில் வேகம் சற்று குறைந்தது. ஆனால் மஹிபால் லோம்ரோர் 17 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் விளாசினார். இதனால் மீண்டும் ஸ்கோர் வேகம் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் எப்படியும் 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ரியான் பராக் 4 ரன்னிலும், ராகுல் டெவாட்டியா 5 ரன்னிலும் கிறிஸ் மோரிஸ் 2 ரன்னிலும் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தனர். ஷமி 19-வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் சாய்த்தார்.

    கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் சாய்த்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் சரியாக 20 ஓவரில் 185 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் அனது.

    5 விக்கெட் வீழ்த்திய அர்ஷ்தீப் சிங்

    பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டும், ஷமி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 14.2 ஓவரில் 136 ரன்களும், 16.3 ஓவரில் 166 ரன்களும் எடுத்திருந்தது.
    Next Story
    ×