என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன் குவித்தனர்.
    கொல்கத்தா:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றிய இந்திய வீரர்கள் அதே உற்சாகத்துடன் ஆடினர். துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் களமிறங்கினர். ருதுராஜ் 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் குவித்தது.

    விக்கெட் கைப்பற்றிய உற்சாகத்தில் ஹோல்டர்

    ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்களிலும், இஷான் கிஷன் 34 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவரில் ஆட்டமிழந்தனர். அணியின் ஸ்கோர் 93 ஆக இருந்தபோது, கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன் குவித்தனர். சூர்யகுமார் யாதவ் பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டார். கடைசி ஓவரில் மட்டும் யாதவ் 3 சிக்சர்கள் விளாசினார். மொத்தம் 31 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 65 ரன்கள் குவித்து, ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 

    சூர்யகுமார் யாதவ்

    இதனால், 20 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. வெங்கடேஷ் அய்யர் 19 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 35 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர், ரொமாரியா ஷெப்பர்ட், ரோஸ்டன் சேஸ், வால்ஷ், டிரேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

    இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.
    இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆவேஷ் கான் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளார்.
    கொல்கத்தா:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. 

    முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆவேஷ் கான் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளார். ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர் ஆகியோரும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

    இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஹேடன் வால்ஷ், ஃபேபியன் ஆலன், டொமினிக் டிரேக்ஸ் மறறும் ஷாய் ஹோப் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.

    இந்திய அணி:  ருதுராஜ் கெய்க்வாட், இஷான்  கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர், தீபக் சாகர், ஷர்துல் தாகூர், ஹர்ஷல் பட்டேல், ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.

    வெஸ்ட் இண்டீஸ்: கைல் மேயர்ஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மேன் பாவெல், கிரன் பொல்லார்ட் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், டொமினிக் டிரேக்ஸ், ஃபேபியன் ஆலன், ஹேடன் வால்ஷ்.
    ஷாருக் கான் 194 ரன்கள் விளாசிய போதிலும், டெல்லி அணியின் இளம் வீரர் யாஷ் துல் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்தினார்.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு- டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் கவுகாத்தியில் நடைபெற்றது. கடந்த 17-ந்தேதி தொடங்கிய நான்கு நாட்கள் கொண்ட இந்த ஆட்டத்தில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் யாஷ் துல் 113 ரன்களும், லலித் யாதவ் 177 ரன்களும் அடிக்க டெல்லி முதல் இன்னிங்சில் 452 ரன்கள் குவித்தது. தமிழ்நாடு அணி சார்பில் எம். முகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர், தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. 5-வது வீரராக களம் இறங்கிய பாபா அபரஜித் 117 ரன்களும், ஷாருக் கான் 194 ரன்களும் விளாச தமிழ்நாடு 494 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சில் 42 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    பின்னர் டெல்லி அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தமிழ்நாடு அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர்களான யாஷ் துல், துருவ் ஷோரே அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். இந்த ஜோடியை தமிழ்நாடு வீரர்களால் முறியடிக்க முடியவில்லை.

    டெல்லி அணி 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 228 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டி டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் சதம் விளாசிய யாஷ் துல் 2-வது இன்னிங்சில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். துருவ் ஷோரே 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    முதல் இன்னிங்சில் முன்னிலைப் பெற்ற தமிழ்நாடு அணிக்கு 3 புள்ளிகளும், டெல்லி அணிக்கு 1 புள்ளிகளும் கிடைத்தன.
    இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 58 பந்தில் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தார்.
    ஆஸ்திரேலியா- இலங்கை அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் நான்கு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது. இன்று கடைசி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்துவிட வேண்டும் என எண்ணத்தில் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. அதேவேளையில் எப்படியாவது ஆறுதல் வெற்றிபெற வேண்டும் என உத்வேகத்துடன் இலங்கை அணி களம் இறங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச் (8), மெக்டெர்மோட் (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் மேத்யூ வடே 27 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இலங்கை அணி சார்பில் லஹிரு குமாரா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் நிசாங்கா 13 ரன்னிலும் வெளியேறினார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 பந்தில் 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவரது சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒயிட்வாஷை தவிர்த்தது.
    இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இரண்டு முக்கிய வீரர்களுக்கு இடம் கிடைக்காதது குறித்து வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி இரு்கிறது. அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    ரகானே, புஜாரா, சகா, இஷாந்த் சர்மா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா, ஷுப்மான் கில் அணிக்கு திரும்பியுள்ளனர். பிரியங்க் பன்சால், கே.எஸ். பரத் உள்ளிட்டோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    இந்திய டெஸ்ட் அணி தேர்வை பலர் பாராட்டும் நிலையில், சிலர் கேள்வி எழுப்பினர். ரஞ்சி டிராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வார்டு, சர்பராஸ் கான் ஆகியோருக்கு இடம் கிடைக்காதது குறித்து முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் திலிப் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து வெங்சர்க்கார் கூறுகையில் ‘‘அணியை தேர்வு செய்யும் தேர்வாளர்கள் அதற்கான வழிமுறைக்கான மனநிலையை பயன்படுத்துவதில்லை. உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வார்டு, சர்பராஸ் கான் ஆகியோரை அணியில் சேர்க்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இருவரையும் சேர்க்காததற்கு அவர்களால் ஒரு காரணத்தையாவது கூறி முடியுமா?. இந்திய அணியை பார்க்கும்போது, சில வீரர்கள் திறமையானவர்களாக இருக்கலாம்.

    ஆனால், மெரிட் அளவில் தேர்வு செய்வதற்கான அளவில் இல்லை. ஒவ்வொரு வீரர்களும் தனது இடத்தை பெறட்டும். அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ருத்துராஜ், சர்பராஸ் கான் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு தகுதியானவர்கள். தேர்வாளர்கள் இருவரையும் தேர்வு செய்யாததன் மூலம் அவர்களுடைய மன உறுதியை சீர்குலைத்து வருகிறார்கள்.’’ என்றார்.

    ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது காலத்தில் மூன்று கேப்டன்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள், டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வரும் ரோகித் சர்மா தற்போது கூடுதலாக டெஸ்ட் அணி கேப்டனாகவும் செயல்பட இருக்கிறார்.

    34 வயதாகும் ரோகித் சர்மா மூன்று வடிவிலான கேப்டன் பதவி மற்றும் தொடக்க வீரராக தொடர்ந்து செயல்பட முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால், அவர் அடிக்கடி தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்படுவது உண்டு. ஆனால், ரோகித் சர்மா முழு உடல் தகுதியுடன் உள்ளார். அவருடைய கேப்டன் பதவியின் கீழ் மூன்று கேப்டன்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேத்தன் சர்மா கூறுகையில் ‘‘மிகப்பெரிய கிரிக்கெட்டர் (ரோகித் சர்மா) கேப்டனாகும்போது, அதன்பின் தானாக, தேர்வுக்குழு ரோகித் சர்மாவிற்கு கீழ் கேப்டன்களை உருவாக்குவது குறித்து யோசிக்க விரும்பும்.

    நாம் கே.எல். ராகுலை தென்ஆப்பிரிக்கா தொடரில் கேப்டனாக செயல்பட வைத்தோம். பும்ரா தென்ஆப்பிரிக்கா தொடரில் துணைக் கேப்டனாக செயல்பட்டார். இலங்கை தொடரிலும் துணைக் கேப்டனாக செயல்பட இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ரிஷாப் பண்ட் துணைக் கேப்டனாக செயல்பட்டார். ரோகித் சர்மா தலைமையின் கீழ்கேப்டன்கள் உருவாக மிகப்பெரிய அளவிலான சாத்தியக்கூறுகள் உள்ளன. அடுத்த கேப்டன் யார் என்று கூறுவது கடினம். ஆனால், விரைவில் நாங்கள் பெயரை வெளிப்படுத்துவோம்’’ என்றார்.

    இந்தியாவின் முதன்மையான உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    இந்தியாவின் முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை தொடர் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. 38 அணிகளுக்கு இடையில் 19 போட்டிகள் தொடங்கின. ஒரு போட்டியில் அருணாச்சல பிரதேசம்- மணிப்பூர் அணிகள் மோதின. இதில் மணிப்பூர் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் கேரளா- மேகாலயா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மேகாலயா 148 ரன்னில் சுருண்டது. பின்னர் கேரளா 9 விக்கெட் இழப்பிற்கு 505 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்சில் மேகாலயா 191 ரன்னில் சுருண்டது. இதனால் கேரளா இன்னிங்ஸ் மற்றும் 166 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஜம்மு&காஷ்மீர்- புதுச்சேரி இடையிலான ஆட்டம் சென்னையில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் புதுச்சேரி 343 ரன்கள் சேர்த்தது. ஜம்மு-காஷ்மீர் 426 ரன்கள் குவித்தது. பின்னர் 2-வது இன்னிங்சில் புதுச்சேரி 124 ரன்கள் சுருண்டது. இதனால் ஜம்மு-காஷ்மீர் 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ராஜஸ்தான்- ஆந்திர பிரதேசம் இடையிலான போட்டியில் ராஜஸ்தான் 158 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் முதல் இன்னிங்சில் 127 ரன்களும், ஆந்திரா 224 ரன்களும் எடுத்தது. ராஜஸ்தான் 2-வது இன்னிஙசில் 316 ரன்கள் குவித்தது. ஆந்திரா 209 ரன்னில் ஆல்அவுட் ஆகி 158 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    சர்வீசஸ்- உத்தரகாண்ட் இடையிலான ஆட்டத்தில் உத்தரகாண்ட் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்வீசஸ் முதல் இன்னிங்சில் 176 ரன்னில் சுருண்டது. உத்தரகாண்ட் 248 ரன்கள் சேர்த்தது. 2-வது இன்னிங்சில் சர்வீசஸ் 204 ரன்னில் ஆல்அவுட் ஆனது. உத்தரகாண்ட் இலக்கை 1 விக்கெட் மட்டுமே இழந்து எட்ட 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இருந்து வெளியேறிய நிலையில், வாழ்நாள் தடைக்கு உள்ளாகியுள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னர். இவர் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கிய இந்தத் தொடர் வருகிற 27-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் குவெட்டா அணி ஒப்பந்தத்திற்கு மரியாதை கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

    அத்துடன் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவருக்கு வாழ்நாள் தடைவிதித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பால்க்னர் ஆறு போட்டிகளில் விளையாடி 6 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

    அவர் வெளியிட்டுள்ள தகவலில் ‘‘நான் மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச போட்டி நடக்க உதவி செய்ய விரும்பினேன். பாகிஸ்தானில் ஏராளமான இளம் திறமையான வீரர்கள் உள்ளனர். ரசிகர்கள் மிகவும் சிறப்பானவர்கள். இப்படி இருந்தும் நான் வெளியேறுவது மனவேதனை தருகிறது.

    ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் நான் அவமானத்தை பெற்றேன். அதுபோன்று நடத்தப்பட்டேன். நீங்கள் அனைவரும் என்னுடைய நிலையை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

    இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள ரோகித் சர்மா, இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட் என சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
    இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஏற்கனவே ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்க எதிரான தொடரை இந்தியா 1-2 என இழந்ததால், விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால், இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ரோகித் சர்மா, கே.எல். ராகுல், ரிஷாப் பண்ட் பெயர்கள் அடிபட்டது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மூன்று வகை கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியையும் ரோகித் சர்மா ஏற்றுள்ளார்.

    சேத்தன் சர்மா

    இந்த நிலையில் ரோகித் சர்மா இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட்டர் என பிசிசிஐ தேர்வுக்குழுவின் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேத்தன் சர்மா கூறுகையில் ‘‘ரோகித் சர்மா இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட்டர். முக்கியமான விசயம் என்னவென்றால், அவர் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வருவதுதான். நாங்கள் அவரை எவ்வாறு மேனேஜ் செய்யப் போகிறோம் என்பதும் முக்கியமானது.

    எல்லா கிரிக்கெட் வீரர்களும் தொழில்முறை வீரர்கள். அவர்களுக்கு அவர்களுடைய உடல்நிலை, உடல்நிலையை நிர்வகிப்பது தெரியும்.

    ரோகித் சர்மா முற்றிலும் உடல் தகுதியுடன் உள்ளார். அதில் எந்த பிரச்சினையும் இருக்காது’’ என்றார்.

    இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சகா ராகுல் டிராவிட் மற்றும் கங்குலி மீது கடுமையான விமர்சனத்தை சுமத்தியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா. டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

    அணியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலி ஆகியோரை விருத்திமான் சஹா கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    என்னை ஓய்வு குறித்து பரிசீலிக்குமாறு ராகுல் டிராவிட் சொன்னார். இந்திய அணிக்கு மீண்டும் நான் தேர்வு செய்யப்பட மாட்டேன் என்பதால் ஓய்வு பெறுமாறு அணி நிர்வாகம் பரிசீலிக்க சொன்னது.

    கடந்த நவம்பர் மாதம் கான்பூரில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நான் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொண்டு ஆட்டம் இழக்காமல் 61 ரன் எடுத்தேன். அப்போது கங்குலி வாட்ஸ்அப் மூலம் என்னை பாராட்டினார்.

    கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்கும் வரை எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று கங்குலி என்னிடம் வாக்குறுதி அளித்தார். அவரது தைரியம் என் நம்பிக்கையை அதிகரித்தது. ஆனால் தற்போது அவசரமாக நான் நீக்கப்பட்டது ஏன் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

    இவ்வாறு விருத்திமான் சஹா கூறியுள்ளார்.

    விராட் கோலி, ரிஷாப் பண்ட் விளையாடாத நிலையில் இளம் வீரர்களுக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
    பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது.

    மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 8 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தப் போட்டியிலும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஹாட்ரிக் சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது போல் 20 ஓவர் தொடரையும் ஒயிட் வாஷ் செய்யும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு கடும் சவாலாக விளங்கியது.

    முதல் 2 போட்டியில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். முன்னாள் கேப்டன் விராட் கோலி, அதிரடி பேட்ஸ்மேன் ரி‌ஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஷ்ரேயாஸ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு போன இஷான் கி‌ஷன் முதல் 2 ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இன்றைய ஆட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது.


    இதேபோல வாய்ப்பு கிடைக்காத வேகப்பந்து வீரர்களும் இன்று இடம் பெறுவார்கள். சுழற்பந்தில் யசுவேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் தொடரையும் இழந்துவிட்டது. அந்த அணி ஆறுதல் வெற்றிபெறும் ஆர்வத்தில் உள்ளது.

    முதல் ஆட்டத்தில் சிறப்பாக ஆடாத வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது போட்டியில் வெற்றி வரை நெருங்கிவந்து 8 ரன்னில் தோற்றது. நிக்கோலஸ் பூரன், போவெல், கேப்டன் போல்லார்ட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் எந்த நேரத்தில் ஆட்டத்தின் தன்மையை மாற்றக்கூடியவர்கள்.

    இரு அணிகளும் வெற்றிக் காக முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

    டெல்லிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணியின் ஷாருக்கான் 194 ரன்களில் ஆட்டமிழந்து 6 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டார்.
    கவுகாத்தி:

    ரஞ்சிக் கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    கவுகாத்தியில், தமிழ்நாடு, டெல்லி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    முதலில் ஆடிய டெல்லி அணி 141.2 ஓவர்கள் விளையாடி 452 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சிசை தொடங்கியது. 2-ம் நாள் முடிவில் தமிழ்நாடு அணி 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்தது. 

    இந்நிலையில், முன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அணியில் ஷாருக் கான், பாபா அபராஜித் பொறுப்புடன் ஆடி சதமடித்தனர்.

    ஷாருக்கான் அதிரடியாக ஆடி 194 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து 6 ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார். பாபா இந்திரஜித் 117 ரன்னில் அவுட்டானார். ஜெகதீசன் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    இறுதியில், தமிழ்நாடு அணி 494 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தற்போதுவரை தமிழ்நாடு அணி டெல்லியை விட 42 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
    ×