search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ரஞ்சி டிராபி: ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர், கேரளா அணிகள் வெற்றி

    இந்தியாவின் முதன்மையான உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    இந்தியாவின் முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை தொடர் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. 38 அணிகளுக்கு இடையில் 19 போட்டிகள் தொடங்கின. ஒரு போட்டியில் அருணாச்சல பிரதேசம்- மணிப்பூர் அணிகள் மோதின. இதில் மணிப்பூர் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் கேரளா- மேகாலயா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மேகாலயா 148 ரன்னில் சுருண்டது. பின்னர் கேரளா 9 விக்கெட் இழப்பிற்கு 505 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்சில் மேகாலயா 191 ரன்னில் சுருண்டது. இதனால் கேரளா இன்னிங்ஸ் மற்றும் 166 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஜம்மு&காஷ்மீர்- புதுச்சேரி இடையிலான ஆட்டம் சென்னையில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் புதுச்சேரி 343 ரன்கள் சேர்த்தது. ஜம்மு-காஷ்மீர் 426 ரன்கள் குவித்தது. பின்னர் 2-வது இன்னிங்சில் புதுச்சேரி 124 ரன்கள் சுருண்டது. இதனால் ஜம்மு-காஷ்மீர் 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ராஜஸ்தான்- ஆந்திர பிரதேசம் இடையிலான போட்டியில் ராஜஸ்தான் 158 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் முதல் இன்னிங்சில் 127 ரன்களும், ஆந்திரா 224 ரன்களும் எடுத்தது. ராஜஸ்தான் 2-வது இன்னிஙசில் 316 ரன்கள் குவித்தது. ஆந்திரா 209 ரன்னில் ஆல்அவுட் ஆகி 158 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    சர்வீசஸ்- உத்தரகாண்ட் இடையிலான ஆட்டத்தில் உத்தரகாண்ட் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்வீசஸ் முதல் இன்னிங்சில் 176 ரன்னில் சுருண்டது. உத்தரகாண்ட் 248 ரன்கள் சேர்த்தது. 2-வது இன்னிங்சில் சர்வீசஸ் 204 ரன்னில் ஆல்அவுட் ஆனது. உத்தரகாண்ட் இலக்கை 1 விக்கெட் மட்டுமே இழந்து எட்ட 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Next Story
    ×