என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் போது வெற்றியை வசமாக்கினார்.
    சென்னை:

    ஆன்லைன் மூலம் நடைபெற்ற  ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார். 

    கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் போது வெற்றியை வசமாக்கினார். தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த பிரக்ஞானந்தா, மொத்தம் 8 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தில் உள்ளார்.

    பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

    சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த  தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த சதுரங்க ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டர்  ஆர்.பிரக்ஞானந்தாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும் என்று தெரிவித்துள்ளார்.

    1½ வருடத்திற்கு முன்பு புஜாரா, ரகானே ஆகிய இருவராலும் இந்திய அணி உயர்ந்த நிலையில் இருந்தது என முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாரா, ரகானே, இஷாந்த் சர்மா, விர்த்திமான் சஹா ஆகியோர் நீக்கப்பட்டனர்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் மோசமாக விளையாடியதற்காக ரகானேயையும், புஜாராவையும் தேர்வு குழு அதிரடியாக நீக்கியது. இந்த இருவரது நீக்கமும் எதிர்பார்த்ததுதான் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் புஜாரா, ரகானேவை நீக்கியது நியாயமற்றது என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தேர்வு குழுவை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இந்திய அணி இழந்தது. ஒருதொடரை இழந்ததற்காக புஜாராவையும், ரகானேவையும் நீக்கியதில் நியாயம் இல்லை. அவர்கள் நீக்கப்பட்டது வருத்தமாக இருக்கிறது.

    1½ வருடத்திற்கு முன்பு அவர்கள் இருவராலும் இந்திய அணி உயர்ந்த நிலையில் இருந்தது. இந்த நீக்கத்தின் மூலம் அவர்களை நீங்கள் (தேர்வு குழுவினர்) தனிமைப்படுத்தி விட்டீர். இருவருமே டெஸ்டில் மட்டும்தான் விளையாடி வருகிறார்கள்.

    ரகானேவும், புஜாராவும் 80 முதல் 90 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளனர். போதுமான திறமைசாலிகள். அவர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை. அடுத்த தலைமுறை வீரர்கள் இருப்பதால் அவர்களுக்கான வாய்ப்பு இனி கடினமே. இது எல்லா வீரர்களுக்கும் உள்ள நிலைமைதான்.

    இவ்வாறு அஜய் ஜடேஜா கூறி உள்ளார்.

    ரகானே கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஞ்சி டிராபி போட்டியில் சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த மூன்றாவது இந்திய வீரர் பிரக்ஞானந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
    புதுடெல்லி:

    ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர்.

    எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.

    கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார். தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த பிரக்ஞானந்தா, மொத்தம் 8 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தில் உள்ளார்.

    இந்நிலையில், உலக சாம்பியன் கார்ல்சனை தோற்கடித்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
     
    இதுதொடர்பாக டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என்ன ஒர் அற்புதமான உணர்வு. அனுபவம் வாய்ந்த, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை கறுப்பு காய்களுடன் விளையாடி தோற்கடித்தது ​​மாயாஜாலம். மேன்மேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். இந்தியாவுக்கு நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.

    ரியோ ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் பேபியோ போக்னினியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியவர் கார்லோஸ் அல்கராஸ்.
    ரியோ டி ஜெனிரோ:

    ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், அர்ஜெண்டினா வீரர் டியகோ ஸ்கெவெர்ட்ஸ்மேனுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.

    புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி ஆகிய அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறின.
    பெங்களூர்:

    12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடித்த பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதா, குஜராத்  ஜெயண்ட்ஸ், பெங்களூர் புல்ஸ், புனேரி பல்தான் ஆகியவை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    இந்நிலையில், நேற்று எலிமினேட்டர் சுற்றுகள் நடைபெற்றன.

    முதல் சுற்றில் உ.பி. யோதா அணியும், புனேரி பால்டன் அணியும் மோதின. இதில் உபி யோதா அணி 42 -31 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    மற்றொரு எலிமினேட்டர் சுற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின. இதில் அதிரடியாக ஆடிய பெங்களூரு புல்ஸ் அணி 49 -29 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. 

    நாளை நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் பாட்னா பைரேட்சுடன் உ.பி. யோதா அணியும், தபாங் டெல்லி அணியுடன் பெங்களூரு புல்ஸ் அணியும் மோதவுள்ளன.

    புரோ கபடி லீக் தொடரின் இறுதிப்போட்டி வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வெங்டேஷ் அய்யர் தனது திறமையை நிரூபித்தார்.
    ஐ.பி.எல். 2021 சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களில் ஒருவர் வெங்கடேஷ் அய்யர். மிதவேக பந்து வீச்சுடன் சிறப்பாக பேட்டிங் செய்ததால் இந்திய அணியில் வெங்கடேஷ் அய்யருக்கு இடம் நிச்சயம் என கிரிக்கெட் விமர்சகர்கள் உறுதியாக தெரிவித்தனர்.

    இந்திய அணி டிசம்பர்- ஜனவரியில் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்றிலும் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது இந்திய அணி. முதல் ஒருநாள் போட்டியில் வெங்கடேஷ் அய்யர் அறிமுகம் ஆனார். அவர் 7 பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 2-வது போட்டியில் 22 ரன்கள் அடித்தாலும் 33 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். இதனால் 3-வது போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

    இதனால் மீண்டும் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்காது என யூகிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெறாத வெங்கடேஷ் அய்யருக்கு, மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இடம் கிடைத்தது.

    இந்த முறை எப்பாடியாவது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் நிரந்தரமாக இடம் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினார்.

    முதல் போட்டியில் இந்தியா 158 இலக்கை  18.5 ஓவரில் எட்டியது. இதில் சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை துவம்சம் செய்தார். வெங்கடேஷ் அய்யர் ஆட்டமிழக்காமல் 13 பந்தில் 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாசி முத்திரை பதித்தார்.

    2-வது போட்டியில் இந்தியா 13.4 ஓவரில் 106 ரன்கள் எடுத்திருக்கும்போது  களம் இறங்கி, 18 பந்தில் 33 ரன்கள் விளாசி இந்தியா 186 ரன்கள் எடுக்க உதவியாக இருந்தார்.

    வெங்கடேஷ் அய்யர்

    நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் இந்தியா 13.5 ஓவரில் 93 ரன்கள் என்ற நிலையில், சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை துவம்சம் செய்தார். வெங்கடேஷ் அய்யர் 19 பந்தில் 35 ரன்கள் விளாசி அசத்தினார். இந்த ஜோடி 37 பந்தில் 91 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் போட்டியில் சொதப்பிய வெங்கடேஷ் அய்யர் டி20-யில் அசத்தியுள்ளார். இதனால் தொடர்ந்து இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்கலாம். ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதால், அங்கு மிதவேகப்பந்து வீச்சு எடுபடும் என்பதால் இந்திய அணியில் வெங்கடேஷ் அய்யருக்கு ஒரு இடம் உண்டு என்பதை அடித்து கூறலாம்.

    டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காத நிலையில், ராகுல் டிராவிட் தன்னை ஓய்வு குறித்து பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியதாக சகா தெரிவித்திருந்தார்.
    இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தவர்கள் விருத்திமான் சகா. ரிஷாப் பண்ட் அணியில் இணைந்த பிறகு சகாவின் இடம் கேள்விக்குறியானது.

    இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சகாவிற்கும், வெளிநாட்டில் நடைபெறும் போட்டியில் ரிஷாப் பண்டிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

    இலங்கை அணி இந்தியாவிற்கு வந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான டெஸ்ட் அணியில் சகாவிற்கு இடம் கிடைக்கவில்லை. இளம் வீரர்கள் வந்து கொண்டிருப்பதால் சகாவிற்கு இடம் வழங்கப்படவில்லை என தேர்வுக்குழு அறிவித்தது.

    இதற்கிடையே, ராகுல் டிராவிட் தன்னிடம் ஓய்வு குறித்து பரிசீலனை செய்யுமாறு வலியுறத்தினார் என சகா தெரிவித்திருந்தார். மேலும், கங்குலி அணியில் இடம் கிடைக்காதோ என்பது குறித்து கவலைப்பட வேண்டாம் எனக் கூறினார். தற்போது அணியில் இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் சகாவின் கருத்து என்னை காயப்படுத்தவில்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘நான் உண்மையிலேயே அவரது கருத்தால் காயப்படவில்லை. இந்திய கிரிக்கெட்டிற்கான அவரது பங்களிப்பு, அவரது சாதனை மற்றும் அவருக்கு நான் முழுமையாக மரியாதை கொடுக்கிறேன். என்னுடைய உரையாடல் அந்த இடத்தில் இருந்துதான் வந்தது. நேர்மைக்கும் தெளிவுக்கும் அவர் தகுதியானவர் என நினைக்கிறேன்.

    நான் தொடர்ச்சியாக வீரர்களுடன் உரையாடும் வகையிலான உரையாடல்தான் அது. நான் சொல்வது அனைத்தையும் அப்படியே வீரர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது கிடையாது. அது சரியாக வராது. வீரர்களுடன் கடினமான உரையாடல்களை நடத்தலாம். ஆனால், வலுக்கட்டாயமாக சொல்கிறீர்கள்  அல்லது  அவர்களுடன் உரையாடுவதில்லை என்று அர்த்தம் கூடாது ’’ என்றார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 10 அணிகள் விளையாட இருக்கும் நிலையில் அடுத்த ஐந்தாண்டுக்கான ஒளிபரப்பு உரிமம் 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கிரிக்கெட் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை பெற்று தருவது ஐ.பி.எல். போட்டியாகும். இதனால் ஐ.பி.எல். போட்டிக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெறுவதில் எப்போதுமே கடும் போட்டி இருக்கும். தற்போது ஐ.பி.எல். போட்டியை ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது. அந்த நிறுவனம் 2018 முதல் 2022 வரை ரூ.16 ஆயிரத்து 347.5 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை பெற்று இருந்தது.

    அதற்கு முன்பு 2008 முதல் 2017 வரை சோனி நெட்வொர்க் ரூ.8 ஆயிரத்து 200 கோடிக்கு பெற்று ஒளிபரப்பு இருந்தது. ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் இந்த ஆண்டுடன் முடிவடைவதால் அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமம் வழங்கும் நடைமுறையை கிரிக்கெட் வாரியம் தொடங்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.

    ஆன்லைன் மூலம் ஒளிபரப்பு உரிமையை வழங்கும் ஏலம் நடை முறையை இந்த வாரத்தில் தொடங்கும். ஏப்ரல் முதல் மே மாதத்தில் ஏல பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    10 அணிகள் விளையாடுவதாலும், ஐ.பி.எல். போட் டிக்கான மதிப்பு உயர்ந்து வருவதாலும் ஒளிபரப்பு உரிமத்துக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுக்கான ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி ஒளிபரப்பு உரிமம் மதிப்பு ரூ.40 ஆயிரம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போது நிபுணர்களின் கூற்றுப்படி ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என்று கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது.

    ஸ்டார் மற்றும் டிஸ்னி இந்தியா நிறுவனம், சோனி பிச்சர்ஸ் நெட்வெர்க், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அமைப்பான வியாகாம், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமையை பெற கடுமையாக போட்டியிடும் என்று தெரிகிறது.

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்களாக திகழ்ந்த ரகானே, புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டனர்.
    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து புஜாரா, ரகானே ஆகியோர் நீக்கப்பட்டனர். தென் ஆப்பிரிக்க தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இருவரையும் தேர்வுக்குழு கழற்றி விட்டது. புஜாராவின் கடைசி 16 டெஸ்ட் சராசரி 27.93 ஆகும். 7 அரை சதம் மட்டுமே அடித்தார். ரகானேவுக்கு 15 ஆட்டத்தில் சராசரி 20.25 ஆகும். இதில் 3 அரை சதம் அடங்கும்.

    இந்தநிலையில் புஜாராவும், ரகானேவும் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது கடினம் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரகானேவும், புஜாராவும் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். தென் ஆப்பிரிக்க தொடரில் செஞ்சூரியோ அல்லது 80 முதல் 90 ரன்கள் வரை எடுத்திருந்தால் நிலைமை மாறுபட்டு இருக்கும்.

    ரகானே ஒரு டெஸ்டில் சிறப்பாக ஆடினார். ஆனால் அது போதுமான ரன் கிடையாது. அணியை பொருத்தவரை அவரிடம் இருந்து ரன்களை அதிகம் எதிர்பார்த்தது.

    இருவரையும் ரஞ்சி போட்டியில் விளையாடுமாறு தேர்வுக்குழு அறிவுறுத்தி உள்ளது. ரஞ்சி போட்டியில் சிறப்பாக ஆடினாலும் அவர்களால் இந்திய அணிக்கு மீண்டும் நுழைய இயலாது.

    200 முதல் 250 ரன்கள் வரை எடுத்தால் அணிக்குள் நுழையலாம். ஆனால் தற்போது இலங்கைக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்தியா ஒரே ஒரு டெஸ்டில் இங்கிலாந்துடன் விளையாடுகிறது. அதன் பிறகு உலகக்கோப்பை வந்து விடுகிறது.

    கவாஸ்கர்

    நவம்பர்- டிசம்பருக்கு பிறகுதான் டெஸ்ட் நடைபெறும். அப்போது அவர்கள் 35 வயதை தொட்டு விடுவார்கள். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் புஜாராவும், ரகானேவும் அணிக்கு மீண்டும் திரும்புவது கடினமே.

    இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.

    புஜாரா 95 டெஸ்டில் 6713 ரன் எடுத்துள்ளார். சராசரி 43.87 ஆகும். 18 சதமும், 32 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 206 ரன் குவித்துள்ளார்.

    ரகானே 82 டெஸ்டில் 4931 ரன் எடுத்துள்ளார். சராசரி 38.52 ஆகும். 12 சதமும், 25 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 188 ரன் குவித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தது.
    கொல்கத்தா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. 

    முதலில் ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில், 7 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 65 ரன்கள் விளாசினார். வெங்கடேஷ் அய்யர் 35 ரன், இஷான் கிஷன் 34 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களே எடுத்ததால், இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், டெத் ஓவர் என அழைக்கப்படும் கடைசி 5 ஓவரில் இந்தியா 86 ரன்கள் குவித்தது. இதுவே டி20 போட்டியில் கடைசி 5 ஓவரில் இந்தியாவின் அதிக ரன்கள் என்ற சாதனையை படைத்தது.

    ஏற்கனவே, கடந்த 2007-ம் ஆண்டில் டர்பனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான் போட்டியில் இந்தியா 80 ரன்கள் எடுத்திருந்தது. 

    ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தொடருக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
    துபாய்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. 

    முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 65 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், ஐ.சி.சி வெளியிட்டுள்ள டி20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

    ஏற்கனவே 2016 பிப்ரவரி 12 முதல் மே 3 வரை எம்.எஸ்.டோனி தலைமையில் இந்தியா முதல் இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

    ரியோ ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் பெரட்டனியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியவர் கார்லோஸ் அல்கராஸ்.
    ரியோ டி ஜெனிரோ:

    ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலி பேபியோ போக்னினியுடன் மோதினார்.

    இதில் கார்லோஸ் அல்கராஸ் 6-2, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா வீரர் டியகோ ஸ்கெவெர்ட்ஸ்மேனுடன் கார்லோஸ் அல்கராஸ் மோத உள்ளார். 
    ×