search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சர்பராஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட், வெங்சர்க்கார்
    X
    சர்பராஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட், வெங்சர்க்கார்

    டெஸ்ட் கிரிக்கெட் அணி தேர்வில் மகிழ்ச்சி இல்லை: வெங்சர்க்கார் சொல்கிறார்

    இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இரண்டு முக்கிய வீரர்களுக்கு இடம் கிடைக்காதது குறித்து வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி இரு்கிறது. அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    ரகானே, புஜாரா, சகா, இஷாந்த் சர்மா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா, ஷுப்மான் கில் அணிக்கு திரும்பியுள்ளனர். பிரியங்க் பன்சால், கே.எஸ். பரத் உள்ளிட்டோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    இந்திய டெஸ்ட் அணி தேர்வை பலர் பாராட்டும் நிலையில், சிலர் கேள்வி எழுப்பினர். ரஞ்சி டிராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வார்டு, சர்பராஸ் கான் ஆகியோருக்கு இடம் கிடைக்காதது குறித்து முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் திலிப் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து வெங்சர்க்கார் கூறுகையில் ‘‘அணியை தேர்வு செய்யும் தேர்வாளர்கள் அதற்கான வழிமுறைக்கான மனநிலையை பயன்படுத்துவதில்லை. உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வார்டு, சர்பராஸ் கான் ஆகியோரை அணியில் சேர்க்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இருவரையும் சேர்க்காததற்கு அவர்களால் ஒரு காரணத்தையாவது கூறி முடியுமா?. இந்திய அணியை பார்க்கும்போது, சில வீரர்கள் திறமையானவர்களாக இருக்கலாம்.

    ஆனால், மெரிட் அளவில் தேர்வு செய்வதற்கான அளவில் இல்லை. ஒவ்வொரு வீரர்களும் தனது இடத்தை பெறட்டும். அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ருத்துராஜ், சர்பராஸ் கான் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு தகுதியானவர்கள். தேர்வாளர்கள் இருவரையும் தேர்வு செய்யாததன் மூலம் அவர்களுடைய மன உறுதியை சீர்குலைத்து வருகிறார்கள்.’’ என்றார்.

    Next Story
    ×