என் மலர்
விளையாட்டு

டீம் இந்தியா
வெஸ்ட் இண்டீஸ் உடன் இன்று கடைசி மோதல்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
விராட் கோலி, ரிஷாப் பண்ட் விளையாடாத நிலையில் இளம் வீரர்களுக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது.
மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 8 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தப் போட்டியிலும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஹாட்ரிக் சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது போல் 20 ஓவர் தொடரையும் ஒயிட் வாஷ் செய்யும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு கடும் சவாலாக விளங்கியது.
முதல் 2 போட்டியில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். முன்னாள் கேப்டன் விராட் கோலி, அதிரடி பேட்ஸ்மேன் ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஷ்ரேயாஸ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு போன இஷான் கிஷன் முதல் 2 ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இன்றைய ஆட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது.
இதையும் படியுங்கள்... மூன்றாவது டி20 போட்டி - விராட் கோலிக்கு ஓய்வு கொடுத்தது பி.சி.சி.ஐ.
இதேபோல வாய்ப்பு கிடைக்காத வேகப்பந்து வீரர்களும் இன்று இடம் பெறுவார்கள். சுழற்பந்தில் யசுவேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.
ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் தொடரையும் இழந்துவிட்டது. அந்த அணி ஆறுதல் வெற்றிபெறும் ஆர்வத்தில் உள்ளது.
முதல் ஆட்டத்தில் சிறப்பாக ஆடாத வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது போட்டியில் வெற்றி வரை நெருங்கிவந்து 8 ரன்னில் தோற்றது. நிக்கோலஸ் பூரன், போவெல், கேப்டன் போல்லார்ட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் எந்த நேரத்தில் ஆட்டத்தின் தன்மையை மாற்றக்கூடியவர்கள்.
இரு அணிகளும் வெற்றிக் காக முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... நாங்கள் அவரை மிகவும் நம்புகிறோம் - புவனேஸ்வர்குமாருக்கு ரோகித் சர்மா பாராட்டு
Next Story






