என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் துணை கேப்டனாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தோடு விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 

    ரோகித் தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான 18 பேர் கொண்ட டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மோசமான பேட்டிங் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரகானே மற்றும் புஜாரா இந்த டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் டி20 தொடரில் 2 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடைபெறவுள்ளது. ஒருநாள், டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    1.ரோகித் சர்மா (கேப்டன்), 2. பும்ரா (துணை கேப்டன்), 3. மயங்க் அகர்வால் 4. பிரியங் பஞ்சல் 5. விராட் கோலி 6. ஷ்ரேயாஸ் அய்யர் 7. ஹனுமன் விஹாரி 8. சுப்மன் கில் 9. ரிஷ்ப் பண்ட் 10. அஸ்வின் 11. ஜடேஜா 12. ஜெய்ன்ட் யாதவ் 13. குல்தீப் யாதவ் 14. முகமது சமி 15. சிராஜ் 16. உமேஷ் யாதவ் 17. சவுரப் குமார் 18.கேஎஸ் பரத்
    இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ள நிலையில் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ நியமித்துள்ளது.
    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்ததையடுத்து விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 

    இதனையடுத்து அடுத்த மாதம் இலங்கை அணிக்கெதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில் ரோகித் சர்மாவை புதிய டெஸ்ட் அணியின் கேப்டனாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 

    ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருந்த நிலையில் தற்போது 3 வடிவிலான அணியிலும் அவர் கேப்டனாக பணியாற்றுவார்.
    இது ஒரு வரலாற்று பூர்வ தருணம் என்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    101 வாக்களிக்கும் உறுப்பினர்கள் மற்றும் 45 கௌரவ உறுப்பினர்களை உள்ளடக்கிய  சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் வருடாந்திர  கூட்டத்தை நடத்துவது தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 

    மும்பையில் இந்த கூட்டத்தை நடத்த 99 சதவீத பேர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து 2023ம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வருடாந்திர கூட்டத்தை மும்பையில் நடத்த ஐ.ஓ.சி.அனுமதி அளித்துள்ளது.

    ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரத்தைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட உலகளாவிய ஒலிம்பிக் இயக்கத்தின் முக்கிய செயல்பாடுகளைப் குறித்து வருடாந்திர கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப் படுகிறது. 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியா வருடாந்திர கூட்டத்தை நடத்தவுள்ளது.  

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் வருடாந்திர கூட்டம் இந்தியாவில் நடைபெறுவது வரலாற்று தருணம் என்று கூறினார். 

    இந்திய விளையாட்டுத்துறை சமீபத்திய ஆண்டுகளில் மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

    இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கையின் வளர்ச்சியாக இருக்கும் என்றும் இந்திய விளையாட்டின் புதிய சகாப்தத்தை இது தொடங்கி வைக்கும் என்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் இந்தியா சார்பில் உறுப்பினராக உள்ள நீட்டா அம்பானி தெரிவித்தார்.
    கொரோனா பரவல் காரணமாக ஒரே இடத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இந்த ஐ.பி.எல். சீசனில் புதிதாக லக்னோ, குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன.

    10 அணிகள் பங்கேற்பதால், ஐ.பி.எல். போட்டியின் ஆட்டங்கள் 74 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒரே இடத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐ.பி.எல் லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மும்பை, புனேயில் உள்ள 5 மைதானங்களில் போட்டி நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானம், டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம், பிரபோர்ன் மைதானம், நவி மும்பையில் உள்ள ரிலையன்ஸ் ஸ்டேடியம், புனேயில் உள்ள மைதானம் உள்ளிட்ட 5 இடங்களில் போட்டி நடக்கிறது.

    உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் பிளே- ஆப் சுற்று மற்றும் இறுதி போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை அறிவிக்கிறது. அடுத்த வாரம் இந்த அட்டவணை வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

    இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 20 ஓவர் தொடர் லக்னோ, தர்மசாலாவிலும், டெஸ்ட் தொடர் மெகாலி பெங்களூரிலும் நடக்கிறது. இதேபோன்று ஐ.பி.எல். போட்டிகள் ஒரே பகுதியில் நடத்தப்படுகிறது.
    நிக்கோலஸ் பூரனும், போவெலும் ஆட்டத்தை இறுதி வரை கொண்டு சென்றது பாராட்டத்தக்கது என தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது.

    கொல்கத்தாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன் குவித்தது.

    ரி‌ஷப்பண்ட் 28 பந்தில் 52 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) , விராட் கோலி 41 பந்தில் 52 ரன்னும் (7 பவுண்டரி 1 சிக்சர்), வெங்கடேஷ் அய்யர் 18 பந்தில் 33 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போவெல் 36 பந்தில் 68 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் 41 பந்தில் 62 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். புவனேஸ்வர் குமார், யசுவேந்திர சாஹல், பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

    18-வது ஓவர் வரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் பக்கம்தான் ஆட்டம் இருந்தது. கடைசி 2 ஓவரில் அந்த வெற்றிக்கு 29 ரன் தேவைப்பட்டது. நிக்கோலஸ் பூரனும், போவெலும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 19-வது ஓவரில் புவனேஸ்வர் குமார் மிகவும் அபாரமாக பந்துவீசி ஆட்டத்தை மாற்றினார். முதல் 2 பந்தில் ஒரு ரன்னை மட்டுமே கொடுத்தார். பூரனை அவுட் செய்தார். அந்த ஓவரில் அவர் 4 ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். இதனால் கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீசுக்கு 25 ரன் தேவைப்பட்டது.

    ஹர்‌ஷல் படேல் கடைசி ஓவரில் 16 ரன் கொடுத்தார். போவெல் 3-வது மற்றும் 4-வது பந்தில் சிக்சர் அடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி 2 பந்தில் ஹர்‌ஷல் படேல் சிறப்பாக பந்து வீசினார். இதனால் 8 ரன்னில் வெற்றி கிடைத்தது.

    19-வது ஓவரில் 4 ரன் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு காரணமாக இருந்த புவனேஸ்வர் குமாரை கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

    வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர்களுக்கு எதிராக விளையாடும்போது எப்போதுமே சிறிது பயம் ஏற்படும். இறுதியில் வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்தது மகிழ்ச்சியானது. இது எளிதானதல்ல என்பது எங்களுக்குத் தெரியும்.

    புவனேஸ்வர் குமார் நெருக்கடியான நேரத்தில் 19-வது ஓவரை சிறப்பாக வீசினார். அவரது அனுபவம் கைகொடுத்தது. பல ஆண்டுகளாக நாங்கள் அவரை மிகவும் நம்புகிறோம். எப்போதுமே 19-வது ஓவரில் அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

    விராட் கோலியின் ஆட்டம் முக்கியமானது. ரி‌ஷப்பண்டும், வெங்கடேஷ் அய்யரும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். வெங்கடேஷ் அய்யர் ஆட்டத்தில் முதிர்ச்சி இருப்பதை பார்க்க முடிகிறது. சில கேட்ச்களை தவறவிட்டது ஏமாற்றத்தை அளித்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறும்போது, நிக்கோலஸ் பூரனும், போவெலும் ஆட்டத்தை இறுதி வரை கொண்டு சென்றது பாராட்டத்தக்கது. நாங்கள் நெருங்கி வந்துதான் தோற்றோம். எங்களது ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

    இந்த வெற்றி மூலம் இந்தியா 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது.
    காயத்தில் இருந்து ரவீந்திர ஜடேஜா மீண்டுள்ளதால் அவர் 3வது டி20 போட்டியில் களம் இறங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
    புது டெல்லி:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலிக்கு மூன்றாவது டி20 போட்டியில் இருந்து பிசிசிஐ ஓய்வு கொடுத்துள்ளது. இதையடுத்து அவர் தமது சொந்த ஊர் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 தொடருக்கு பின்,இந்தியா- இலங்கை இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி மொஹாலியில் அடுத்த மாதம் 4 முதல் 8ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி கோலிக்கு 100 வது டெஸ்ட் போட்டியாகும். 

    மேலும் டெஸ்ட் தொடரை தொடர்ந்து ஐ.பி.எல்.போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளிலும்  புத்துணர்ச்சியுடன் பங்கேற்பதற்காக  வசதியாக 3வது டி20 போட்டியில் கோலிக்கு ஓய்வு  கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    இந்நிலையில் முழங்கால் காயத்தில் இருந்து ரவீந்திர ஜடேஜா குணமடைந்து விட்டதால் 3வது டி20 போட்டியில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 95 ரன்னில் சுருண்டது.

    நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

    முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 482 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ஹென்ரி நிக்கோல்ஸ் சதமடித்து 105 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீபப்ர் டாம் பிளண்டல் 96 ரன்கள் அடித்து சதத்தை தவறவிட்டார். கிராண்ட்ஹோம் 45 ரன்கள் எடுத்து அரைசதம் நழுவவிட்டார். மேட் ஹென்ரி அதிரடியாக ஆடி 58 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணியில் ஆலிவர் 3 விக்கெட்டும் ரபடா, மார்கிராம், ஜான்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 387 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்சிலும் அந்த அணி விக்கெட்டை மளமளவென இழந்தது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 111 ரன்னில் ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக பவுமா 41 ரன்னும், கைல் வெரின் 30 ரன்னும் எடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 276 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.

    வெஸ்ட் இண்டிசுக்கான எதிராக இந்தியா பெற்ற வெற்றி டி20 போட்டிகளில் 100வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
    கொல்கத்தா:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. விராட் கோலி, ரிஷப் பண்ட் அரைசதமடித்தனர்.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 178 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி 8 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற டி20 தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி டி20 போட்டிகளில் 100-வது வெற்றி என்ற சிறப்பை பெற்றது.

    இந்தப் பட்டியலின் முதலிடத்தில் பாகிஸ்தான் உள்ளது. அந்த அணி 118 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    மிசோரம் அணிக்கு எதிரான போட்டியில் பீகாரின் பாபுல் குமார், சகிபுல் கனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 538 ரன்கள் குவித்து அசத்தியது.
    கொல்கத்தா:

    ரஞ்சிக் கோப்பை ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

    கொல்கத்தாவில் நடந்து வரும் போட்டியில் பீகார், மிசோரம் அணிகள் மோதின. டாஸ் வென்ற பீகார் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பீகார் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மங்கல் மாரோர் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ரிஷாவ் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய லக்கன் ராஜா 25 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய பாபுல் குமார், சகிபுல் கனி ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடியைப் பிரிக்க மிசோரம் வீரர்கள் அரும்பாடுபட்டனர்.

    அறிமுக வீரராக களமிறங்கிய சகிபுல் கான் அபாரமாக ஆடி முச்சதம் விளாசி உலக சாதனை படைத்தார்.

    சகிபுல் கனி 341 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சச்சின் குமார் டக் அவுட்டானார்.

    இறுதியில் பீகார் அணி 5 விக்கெட் இழப்புக்கு 686 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இரட்டை சதமடித்த பாபுல் குமார் 229 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் பிபின் சவுரப் 50 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய மிசோரம் இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்துள்ளது.

    அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன், ரோமன் பாவெல் இருவரும் அரை சதம் கடந்து முன்னேறிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
    கொல்கத்தா:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி, ரிஷப் பண்ட் இருவரும் தலா 52 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 19 ரன்கள், வெங்கடேஷ் அய்யர் 33 ரன்கள் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர்களான மேயர்ஸ் 9 ரன்களிலும், பிரண்டன் காக் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர், இணைந்த நிகோலஸ் பூரன், ரோமன் பாவெல் இருவரும் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர்.

    ரோமன் பாவெல்

    அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன், ரோமன் பாவெல் இருவரும் அரை சதம் கடந்து முன்னேறிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. 

    நிகோலஸ் பூரன் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 62 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 159. பூரன் வெளியேறியதும் பாவெலுடன் கேப்டன் பொல்லார்டு இணைந்தார். 

    வெஸ்ட் இண்டீஸ் இலக்கை எட்டுவதற்கு கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை. பரபரப்பான சூழ்நிலையில் கடைசி ஓவரை ஹர்ஷல் பட்டேல் நேர்த்தியாக வீசினார். முதல் பந்தில் பாவெல் ஒரு ரன் எடுத்தார். 2வது பந்தை எதிர்கொண்ட பொல்லார்டும் ஒரு ரன் மட்டுமே சேர்த்தார். அதன்பின்னர் பாவெல் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாச, ஆட்டத்தில் பரபரப்பு கூடியது. 

    ஆனால் 5வது பந்தில் அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்ததால் இந்தியாவின் வெற்றி உறுதி ஆனது. கடைசி பந்தில் பொல்லார்டு 1 ரன் அடிக்க, வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 178 ரன்களே சேர்த்தது. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பாவெல் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. அத்துடன் டி20 தொடரையும் கைப்பற்றி உள்ளது. 3வது மற்றும் கடைசி போட்டி  நாளை மறுநாள் நடக்கிறது.
    106 ரன்களில் 4 விக்கெட் இழந்த நிலையில் ரிஷப் பண்ட், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
    கொல்கத்தா:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களிலும், இஷான் கிஷன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். பார்மை இழந்திருப்பதாக எழுந்த விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதிலளித்தார் கோலி. இப்போட்டியில் கோலி 41 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர்களுடன் 52 ரன்கள் சேர்த்தார். முன்னதாக சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

    ரோகித் சர்மா, விராட் கோலி

    106 ரன்களில் 4 விக்கெட் இழந்த நிலையில் ரிஷப் பண்ட், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். வெங்கடேஷ் அய்யர் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் சேர்க்க இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.
    புரோ கபடி லீக் போட்டியில் கடைசி மூன்று இடத்துக்கு பெங்களூர் புல்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உள்ளிட்ட 6 அணிகள் போட்டியில் உள்ளன.
    பெங்களூர்:

    12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 22 ஆட்டம் இருக்கும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.

    நாளையுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதுவரை 3 அணிகள் பிளே- ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

    பாட்னா பைரேட்ஸ் 21 ஆட்டத்தில் 15 வெற்றி, ஒரு டை, 5 தோல்வியுடன் 81 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் அரியானாவுடன் மோதுகிறது.

    தபாங் டெல்லி 11 வெற்றி, 4 டை, 6 தோல்வியுடன் 70 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சை இன்று எதிர்கொள்கிறது.

    உ.பி.யோதா 22 ஆட்டத்தில் 10 வெற்றி, 3 டை, 9 தோல்வியுடன் 68 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    எஞ்சிய 3 இடத்துக்கு பெங்களூர் புல்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், குஜராத் ஜெய்ன்ட்ஸ், மும்பை ஆகிய 6 அணிகள் போட்டியில் உள்ளன.

    பெங்களூர் அணி 66 புள்ளியுடன் இருக்கிறது. அந்த அணிக்கு அனைத்து போட்டிகளும் முடிந்துவிட்டது. அரியானா 63 புள்ளியுடன் 5-வது இடத்திலும், ஜெய்ப்பூர் 62 புள்ளியுடன் 6-வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுக்கும் இன்னும் ஒரு ஆட்டம் உள்ளன.

    புனே 60 புள்ளியுடன் 7-வது இடத்திலும், குஜராத் 57 புள்ளியுடன் 8-வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுக்கும் இன்னும் 2 ஆட்டங்கள் உள்ளன. மும்பை 54 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது.

    பெங்கால் 52 புள்ளி யுடனும், தமிழ் தலைவாஸ் 47 புள்ளியுடனும், தெலுங்கு டைட்டன்ஸ் 27 புள்ளியுடனும் முறையே 10 முதல் 12 இடங்களை பிடித்து வாய்ப்பை இழந்தன.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் புனே- பெங்கால் (இரவு 7.30), டெல்லி- தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8.30), தமிழ் தலைவாஸ்- குஜராத் (இரவு 9.30) மோதுகின்றன.

    நாளைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர்- புனே, குஜராத்- மும்பை, பாட்னா- அரியானா அணிகள் மோதுகின்றன.
    ×