என் மலர்
விளையாட்டு
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது.
கொல்கத்தா:
பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணியை முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்து சாதித்தது.
மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று இந்தியா தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் பேட்டிங்கிலும், ரவிபிஷ்னோய், ஹர்ஷல் படேல், யசுவேந்திர சாஹல், புவனேஸ்வர் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.
ஸ்ரேயாஸ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்களுக்கு தொடக்க ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் செய்யப்பட்டால் அவர்கள் விளையாடலாம். ஆனால் அணியில் மாற்றம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இன்றைய ஆட்டம் முக்கியமானது. வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோல்வி அடைந்தால் அந்த அணி தொடரை இழந்துவிடும். இதனால் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது.
20 ஓவர் போட்டிக்கேற்ற சிறந்த அதிரடி வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். அவர்களால் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் தன்மையை மாற்ற முடியும். இதனால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் திரிபாதி 2017-ல் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக தோனியின் கீழ் ஐ.பி.எல். தொடரில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இந்திய வீரர் ராகுல் திரிபாதியை 8.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
இந்நிலையில், ராகுல் திரிபாதி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பெரிய போட்டிகளுக்கு முன் தோனி எப்படி அமைதியாக இருப்பது என்பதை வெளிப்படுத்தினார். தனது அணி வீரர்களை எப்போதும் இளைய சகோதரர்களைப் போல நடத்துகிறார். அவர்களின் உயர்வு மற்றும் தாழ்வுகளுக்கு வழிகாட்டுகிறார்.
ஐ.பி.எல். 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி சென்னை சூப்பர் கிங்சிடம் தோற்றது. விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்து வலுவாக இருந்த நிலையில், திடீரென சரிவு ஏற்பட்டது. இதனால் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்து, 27 ரன் வித்தியாசத்தில் தோற்றது வருத்தமாக இருந்தது.
தொடையில் காயம் ஏற்பட்டதால், ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் வந்தேன். என்னால் ரன் எடுக்க முடியவில்லை. விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். நான் வெளியே வந்தபிறகு, மஹி பாய் என் முதுகில் தட்டி ஆறுதல் கூறினார். இது உனக்கான நாள் அல்ல. ஆனால் நூறு சதவீதம் ஆட்டத்தைக் கொடுத்தீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...கடைசி வரை நிற்பதுதான் முக்கியம்: சூர்யகுமார் யாதவ்
ரெயில்வேஸ் அணிக்கு எதிராக கர்நாடக அணியின் கிருஷ்ணமூர்த்தி சித்தார்த், மணீஷ் பாண்டே ஜோடி 4வது விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்தது.
சென்னை:
ரஞ்சிக் கோப்பை எலைட் குரூப் பிரிவில் கர்நாடகா, ரெயில்வேஸ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற ரெயில்வேஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் கர்நாடகா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால், தேவ்தத் படிக்கல் களமிறங்கினர்.
அகர்வால் 16 ரன்னிலும், படிக்கல் 21 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ரவிகுமார் சமர்த் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
4வது விக்கெட்டுக்கு கிருஷ்ணமூர்த்தி சித்தார்த், மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி ரெயில்வேஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. இருவரும் சிறப்பாக ஆடி சதமடித்தனர்.
267 ரன்கள் சேர்த்த நிலையில், மணீஷ் பாண்டே 156 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஸ்ரீனிவாஸ் ஷரத் 5 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் கர்நாடகா அணி 5 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தது. கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்கள் வெளியில் இருக்க வைப்பது கடினமான ஒன்று என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் மிடில் ஆர்டர் வரிசையில் இடம் பிடித்திருந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷ்ரேயாஸ் அய்யருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இது சிலரை முனுமுனுக்க வைத்தது. இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஷ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து கூறியதாவது:-
ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற ஒருவருக்கு, ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்காமல் வெளியில் இருப்பது கடினமான ஒன்றாகும். ஆனால், எங்களுக்கு மிடில் ஆர்டர் வரிசையில் பந்து வீசும் வகையில் ஒருவர் தேவைப்படுகிறார். இதனால் நாங்கள் அவரை ஆடும் லெவன் அணியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஏராளமான வீரர்களுக்கு இடையில் அணியில் இடம் பிடிக்க போட்டி இருப்பது சிறப்பானது. ஃபார்ம் இன்றி அணியில் இடம் பிடிக்காமல் இருப்பதைவிட, கடும் போட்டியில் அணியில் இடம் பிடிக்காமல் இருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன்.
நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். உலகக் கோப்பைக்கு தயாராக விரும்புகிறோம் என்பதை பற்றி அவரிடம் தெளிவாக தெரிவித்துவிட்டோம். அனைத்து வீரர்களும் அணிகள் விரும்புவதை புரிந்து கொள்ள வேண்டும். தொழில்முறை வீரர்கள், அணிதான் முதல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தகுதியான நபராக இருக்கும்போது, சில நேரங்களில் நாங்கள் சிலரை வெளியில் வைக்க வேண்டும் அவசியம் ஏற்படுகிறது.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்
சர்வதேச கிரிக்கெட்டில் ஃபார்ம் இன்றி தவிக்கும் ரகானே, ரஞ்சி டிராபியில் களம் இறங்கியதோடு சதம் அடித்து அசத்தினார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ரகானே திகழ்ந்து வருகிறார். இருந்தாலும் கடந்த சில தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என குரல் எழுந்துள்ளது.
இதற்கிடையே பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி, ரகானே ரஞ்சி டிராபியில் விளையாடி தனது ஃபார்மை திரும்ப பெற வேண்டும் எனக் கூறியிருந்தார். மேலும், தான் சர்வதேச போட்டியில் சறுக்கியபோது ரஞ்சி டிராபியில் விளையாடினேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. குரூப் பிரிவில் இடம் பிடித்துள்ள சவுராஷ்டிரா- மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அகமதாபத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரித்வி ஷா 1 ரன்னிலும், ஆகார்ஷிட் கோமல் 8 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த சச்சின் யாதவ் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் மும்பை அணி 12.2 ஓவரில் 44 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு ரகானே உடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சவுராஷ்டிரா அணியின் பந்து வீச்சாளர்களை சோர்வடைய வைக்கும் வகையில் நிலைத்து நின்று விளையாடினர். ரகானே 211 பந்துகளை எதிர்கொண்டு சதம் விளாசினார்.
சர்வதேச போட்டியில் விமர்சனங்கள் எதிர்கொண்டு வரும் ரகானேவுக்கு இந்த சதம் சற்று நிம்மதியளித்துள்ளது. மும்பை அணி 73 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தள்ளது. ரகானே 100 ரன்களுடனும், சர்பராஸ் அகமது 85 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 18 பந்தில் 34 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்தார்.
பின்னர் இந்தியா சேஸிங் செய்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 40 ரன்களும், இஷான் கிஷன் 35 ரன்களும் அடித்தனர். அடுத்து வந்த விராட் கோலி 17 ரன்னிலும், ரிஷாப் பண்ட் 8 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்தியா 14.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்திருக்கும்போது 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசி 33 பந்தில் 44 ரன்கள் தேவைப்பட்டது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 18 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து இலக்கை 18.5 ஓவரில் எட்ட முக்கிய காரணமாக இருந்தார். இவரும் வெங்கடேஷ் அய்யரும் 5-வது விக்கெட்டுக்கு 4.2 ஓவரில் 48 ரன்கள் விளாசினர். வெங்கடேஷ் அய்யர் 13 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டிக்குப்பின் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் ‘‘கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற வைப்பது முக்கியமானது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதெிரான கடைசி போட்டியில் 32 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தேன். கடைசி வரை நிற்க முடியவில்லை. அதேபோல் சூழ்நிலையை நான் அதிக முறை எதிர்கொண்டுள்ளேன்.
20 முதல் 25 ரன்கள் வரை அணிக்கு தேவை இருக்கும்போது, நான் அவுட்டாகும் போதெல்லாம் ஓட்டலுக்கு திரும்பும்போது மோசமானதாக கருதுவேன். வெங்கடேஷ் அய்யர் நேர்மறை எண்ணத்துடன் களம் இறங்கினார். இன்னிங்சை பவுண்டரியுடன் தொடங்கினார். இலக்கை வெற்றிகரமாக முடிக்க சரியான நேரம் என எண்ணினேன்’’ என்றார்.
இதையும் படியுங்கள்... பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்க்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது - ரோகித் சர்மா கருத்து
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் 95 ரன்னில் சுருண்டது.
நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து, டிம் சவுத்தி, மேட் ஹென்ரி, கைல் ஜாமிசன், நீல் வாக்னர் ஆகிய நான்கு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களுடன் பீல்டிங் செய்ய களம் இறங்கியது.
2-வது ஓவரை மேட் ஹென்ரி வீசினார். தென்ஆப்பிரிக்காவின் கேப்டன் டீன் எல்கர் 1 ரன்கள் எடுத்த நிலையில் இந்த ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் மேட் ஹென்ரி தொடர்ச்சியாக விக்கெட் எடுத்த வண்ணம் இருந்தார். மறுமுனையில் விளையாடிய சரேல் வர்வீயை 10 ரன்னில் வெளியேற்றினார் கைல் ஜாமிசன்.
எய்டன் மார்கிராமை 15 ரன்னிலும், வான் டெர் டஸ்சனை 8 ரன்னிலும் வெளியேற்றினார் மேட் ஹென்ரி. தனது பங்கிற்கு டிம் சவுத்தி 7 ரன்னில் பவுமாவை வெளியேற்றினார்.
பின்னர் ஹம்சா (25), கைல் வெரேய்ன் (18) ஆகியோரை ஹென்ரி வெளியேற்ற தென்ஆப்பிரிக்கா அணி சரண் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. ரபடா, கிளென்டன் ஸ்டர்மான் ஆகியோரை ரன்ஏதும் எடுக்கவிடாமல் ஹென்ரி வெளியேற்ற 49.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென்ஆப்பிரிகா 95 ரன்னில் சுருண்டது. நான்கு பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்னைத் தொட்டனர்.

மேட் ஹென்ரி அபாரமாக பந்து வீசி 15 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்த்தார். டிம் சவுத்தி, கைல் ஜாமிசன், நீல் வாக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 322 ஓவரில் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
ஹர்ஷல் படேலின் சிறப்பு அம்சம் ஒவ்வொரு முறையும் தன்னை புதுப்பித்து கொள்கிறார் என முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிக்கு 10 அணிகளும் சேர்த்து 204 வீரர்களை ஏலத்தில் எடுத்தது. இதில் 67 பேர் வெளிநாட்டு வீரர்கள்.
ஐ.பி.எல். ஏலத்தில் டாப்-3 பட்டியலில் இந்தியர்களே இடம்பெற்று இருந்தனர். இஷான் கிஷன் (மும்பை) ரூ.15.25 கோடிக்கும், தீபக் சாஹர் (சென்னை) ரூ.14 கோடிக்கும், ஸ்ரேயாஸ் அய்யர் (கொல்கத்தா) ரூ.12.25 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தை சேர்ந்த லிவிங்ஸ்டோன் (பஞ்சாப்) ரூ.11.5 கோடிக்கு விலை போனார். அதற்கு அடுத்த 4 பேரில் இருவர் இந்தியர்கள். ஹர்ஷல் படேல், ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா ரூ.10.75 கோடிக்கு ஏலம் போனார்கள்.
வேகப்பந்து வீரரான ஹர்ஷல் படேல் கடந்த ஐ.பி.எல். சீசனில் பெங்களூர் அணிக்காக விளையாடி 32 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். கடந்த முறை அவருக்கான ஊதியம் ரூ.20 லட்சமாக இருந்தது. தற்போது ஹர்ஷல் படேலை பெங்களூர் அணி அதிகமான தொகை கொடுத்து ஏலத்தில் தக்கவைத்துக் கொண்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய முதல் 20 ஓவர் போட்டியில் அவர் 2 விக்கெட் கைப்பற்றினார்.
இந்த நிலையில் ஐ.பி.எல். ஏலத்தில் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஹர்ஷல் படேல் தகுதியானவர் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஹர்ஷல் படேல் ஐ.பி.எல். போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஏலத்தில் சம்பாதித்த ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர் தகுதியானவர். ஹர்ஷல் படேலின் சிறப்பு அம்சம் ஒவ்வொரு முறையும் தன்னை புதுப்பித்து கொள்கிறார்.
பந்துவீச்சில் நிறைய விஷயங்களை கற்றுள்ளார். அதில் இருந்து அவர் மேம்பட்டுள்ளார். பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் விடும் வகையில் பந்து வீசுகிறார்.
அவர் யார்க்கர் பந்தை சிறப்பாக வீசுகிறார். மேலும் மெதுவாக பவுன்சர் வீசுகிறார். கடந்த ஐ.பி.எல். போட்டியில் கிடைத்த அனுபவம் அவருக்கு நன்றாக கைகொடுக்கிறது.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்க்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது - ரோகித் சர்மா கருத்து
மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
பெங்களூரு,
12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களுருவில் நடந்து வருகிறது.
நேற்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர் கொண்டது. இதில் 54- 35 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் வெற்றி பெற்றது.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இதில் 52-21 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் அணி வெற்றி பெற்றது.
தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 21 ஆட்டங்களில் 10 தோல்விகளை பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டம் ஒன்றில் உ.பி.யோத்தா, யு மும்பா அணியை எதிர் கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியும், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதுகின்றன.
பந்து வீச்சாளர்களின் பெரும் முயற்சியால் வெஸ்ட் இண்டீசை குறைந்த ரன்னில் கட்டுப்படுத்த முடிந்ததாக ரோகித் குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இந்திய அணியில் ரவி பிஷ்னோய், ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஷ் குமார், தீபக் சகார், சஹால் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதில் ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இது குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் தனியார் விளையாட்டு செய்தி நிறுவனத்திற்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
பிஷ்னோய் மிகவும் திறமையான பையன், அதனால்தான் நாங்கள் அவரை உடனடியாக அணியில் சேர்த்தோம். அவரிடம் வித்தியாசமான ஒன்றைக் காண்கிறோம். அவரிடம் நிறைய மாறுபாடுகள் மற்றும் திறமைகள் உள்ளன.
அவர் எந்த நிலையிலும் பந்துவீச முடியும், அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. போட்டியை நாங்கள் சீக்கிரம் முடித்திருக்க வேண்டும், இந்த வெற்றியால் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
இந்த ஆட்டம் அதிக நம்பிக்கையை தருகிறது. பந்து வீச்சாளர்களின் பெரும் முயற்சியால் அவர்களை(வெஸ்ட் இண்டீஸ்) குறைந்த ரன்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்
முன்னாள் விளையாட்டு வீரர்களும் இந்தப் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தி்யாவின் விளையாட்டுப் பயிற்சியை வலுப்படுத்தும் முயற்சியாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகமும், இந்திய விளையாட்டுக்கள் ஆணையமும் 398 பயிற்சியாளர்கள் பணியை நீடித்துள்ளன.
இது குறித்து மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளதாவது:
2024 மற்றும் 2028 ஒலிம்பிக் உட்பட முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்களையும், வீராங்கனைகளையும் தயார்படுத்த பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் விளையாட்டு வீரர்களும், சர்வதேச நிலையில் போட்டியிட்டவர்களும், பதக்கம் வென்றவர்களும் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பம் செய்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பலர் உலக சாம்பியன் போட்டிகள், ஒலிம்பிக்ஸ் போன்ற உயர்நிலைப் போட்டிகளில் பங்கேற்றவர்கள் மற்றும் பதக்கம் வென்றவர்கள்.
அர்ஜுனா விருதும் பெற்ற பஜ்ரங் லால் தக்கார் படகு செலுத்தும் போட்டியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2011-ல் காமன்வெல்த் விளையாட்டுக்களில் தங்கப்பதக்கம் வென்ற ஷில்பி ஷோரன் மல்யுத்தப் போட்டியின் உதவிப் பயிற்சியாளராக சேர்ந்துள்ளார்.
ஒலிம்பிக் வீராங்கனை ஜின்சி பிலிப் தடகள போட்டிகளுக்கான பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச சாம்பியன் பட்டப் போட்டிகளில் பல பதக்கங்கள் வென்ற முன்னணி வீரர் பிரணாமிகா போரா குத்துச்சண்டை பயிற்சியாளராக இணைந்துள்ளார்.
இந்திய விளையாட்டுக்கள் ஆணையத்தில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு ஒப்பந்தம் முடிந்த பல பயிற்சியாளர்கள் அவர்களின் தகுதி அடிப்படையில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...பைக்கில் செல்லும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்- மத்திய அரசு
இந்திய அணியின் துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கொல்கத்தா:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 61 ரன்கள் குவித்தார். மேயர்ஸ் 31 ரன்களும், கேப்டன் கிரன் பொல்லார்ட் 24 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா 19 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். இஷான் கிஷன் 35 ரன்கள் குவித்தார். விராட் கோலி 17 ரன்கள், ரிஷப் பண்ட் 8 ரன்களில் வெளியேறினர்.
அதன்பின்னர் இணைந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 34 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் சேர்த்தனர். 19வது ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார் வெங்கடேஷ் அய்யர்.
இந்திய அணி 7 பந்துகள் மீதமிருந்த நிலையில், 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டி கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.






