என் மலர்
விளையாட்டு
கராச்சி மைதானத்தில் இதுவரை எந்த வெற்றியும் பெறாத ஆஸ்திரேலியா இங்கு 8 டெஸ்டில் விளையாடி 5-ல் தோல்வியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது.
கராச்சி:
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று தொடங்குகிறது.
தொடக்க டெஸ்டுக்கான ஆடுகளம் பேட்டிங்கின் சொர்க்கமாக இருந்ததால் பந்து வீச்சு துளியும் எடுபடவில்லை. இரண்டு இன்னிங்சையும் சேர்த்து ஆஸ்திரேலிய பவுலர்களால் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. இதனால் கடும் விமர்சனம் எழுந்த நிலையில், சராசரிக்கும் குறைவான தரம் கொண்ட ஆடுகளம் என்று ஐ.சி.சி.யும் முத்திரை குத்தியது.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை எந்த வெற்றியும் பெறாத ஆஸ்திரேலியா இங்கு 8 டெஸ்டில் விளையாடி 5-ல் தோல்வியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது நினைவு கூரத்தக்கது.
ஆஸ்திரேலியா அணி விவரம்
1. டேவிட் வார்னர் 2. கவாஜா 3. மார்னஸ் லாபுசன் 4. ஸ்டீவ் ஸ்மித் 5. ஹெட் 6. கீரின் 7. அலெக்ஸ் ஹரி 8. பேட் கம்மின்ஸ் 9. மிட்செல் ஸ்டார்க் 10. லாதன் லயன் 11. மிட்செல் ஸ்வெப்சன்
பாகிஸ்தான் அணி விவரம்
1. அப்துல்லா ஷபீக் 2.இமாம் உல் ஹக் 3. அசார் அலி 4. பாபர் அசாம் 5.ஃபவாத் ஆலம் 6.முகமது ரிஸ்வான் 7.ஃபஹீம் அஷ்ரஃப் 8.ஹசன் அலி 9.நௌமன் அலி 10. ஷஹீன் அப்ரிடி 11. சஜித் கான்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோர் சிறப்பாக ஆடி சதமடித்தனர்.
ஹாமில்டன்:
மகளிர் உலக கோப்பையில் ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் 10வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும், வெஸ்ட்இண்டீசும் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவு ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்தனர். ஸ்மிருதி மந்தனா 123 ரன்னும், ஹர்மன்பிரீத் கவுர் 109 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கி உள்ளது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன் பிரீத் கவுர் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் சேர்த்தது.
ஹாமில்டன்:
12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் 10வது லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசுடன் விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அபாரமாக ஆடி சதமடித்தார்.
அவர் சிறப்பாக விளையாடி 119 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக நின்ற ஹர்மன்பிரீத் கவுரும் சதமடித்து அசத்தினார்.
ஏற்கனவே 6 உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாமில்டன்:
ஹாமில்டனில் இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியதன் மூலம் உலக கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் (24 போட்டிகள்) கேப்டனாக இருந்தவர் என்ற புதிய சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்...ஜெர்மனி ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய லக்சயா சென்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் இங்கிலாந்தின் ஜாக் கிராலே சதமடித்து அசத்தினார்.
ஆன்டிகுவா:
வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 311 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பேர்ஸ்டோவ் 109 ரன் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீசின் ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கீமர் ரோச் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 375 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பானர் 123 ரன்னும், பிராத்வெயிட் 55 ரன்னும், ஹோல்டர் 45 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், லீச், ஓவர்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 64 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் 6 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ஜோ ரூட், ஜாக் கிராலேவுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. பொறுப்புடன் ஆடிய கிராலே சதமடித்தார். ஜோ ரூட் அரை சதமடித்தார்.
ஆட்டத்தின் பிற்பாதியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டடது.
இறுதியில், நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து ஒரு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்துள்ளது. கிராலே 117 ரன்னுடனும், ஜோ ரூட் 84 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீசை விட இங்கிலாந்து இதுவரை 153 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
ஹாமில்டன்:
12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிகளுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் ஹாமில்டனில் இன்று காலை தொடங்கிய லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீசி வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷாமிலியா கானல், யாஷிகா, பாட்டியவும் களம் இறங்கி உள்ளனர்.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெறுகிறது.
பெங்களூரு:
இந்தியா-இலங்கை அணிகள் இடையே மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
2வது டெஸ்ட், பகல்-இரவு போட்டியாக நடைபெறுவதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய இந்திய துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, பிங்க் பந்து டெஸ்ட் கிரிக்கெட் (பகல்-இரவு) போட்டியில் எத்தகைய அணுகுமுறை தேவை என்பது குறித்து இன்னும் நாங்கள் கற்றுக்கொண்டு தான் இருக்கிறோம் என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:
பீல்டிங்கின் போது பிங்க் பந்து வித்தியாசமாக தோன்றும், நீங்கள் நினைத்ததை விட பந்து வேகமாக கைக்கு வந்து விடும்.
வழக்கமான டெஸ்ட் போட்டியில் காலையில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும். ஆனால் பகல்-இரவு டெஸ்ட் பிற்பகலில் தொடங்குவதால் அந்த சமயத்தில் பந்து பெரிய அளவில் ஸ்விங் ஆகாது. ஆனால் மாலைப்பொழுதில் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்ய முடியும்.
இது போன்ற விஷயங்கள் குறித்து நாங்கள் ஆலோசித்து இருக்கிறோம். நாங்கள் அதிகமான பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. இதுவரை கிடைத்துள்ள அனுபவங்களை பகிர்ந்து அதற்கு ஏற்ப திட்டங்களை வகுக்க முயற்சிக்கிறோம். ஆடுகளத்தன்மையை முழுமையாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப களம் இறங்கும் அணியை முடிவு செய்வோம். இவ்வாறு பும்ரா கூறினார்.
இந்தியாவில் நடைபெறும் 3-வது பகல்-இரவு டெஸ்ட் இது. இதற்கு முன்பு நடந்துள்ள இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால், இந்த டெஸ்ட்டிலும் நமது வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஹைதரபாத், ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.
கோவா:
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர் கோவாவில் நடந்து வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்களுக்கு ஜாம்ஷெட்பூர், கேரளா , ஐதராபாத், ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் தகுதி பெற்று இருந்தன.
நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஜாம்ஷெட்பூர் - கேரளா அணிகள் மோதின.
38வது நிமிடத்தில் கேரளா வீரர் சாஹல் அப்துல் சமது ஒரு கோல் அடித்தார். ஆட்டம் முடியும் வரை ஜாம்ஷெட்பூர் வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணி வெற்றி பெற்றது.
இன்று நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.அணி ஏ.டி.கே.மோகன் பகான் அணியை எதிர்கொள்கிறது.
லக்சயா சென் காலிறுதி ஆட்டத்தில் சக வீரரான எச்.எஸ்.பிரனோயை 21-15, 21-16 என்ற நேர்செட்களில் எளிதாக வென்றார்.
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென் (வயது 20) அரையிறுதிக்கு முன்னேறினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற லக்சயா சென், இன்றைய காலிறுதி ஆட்டத்தில் சக வீரரான எச்.எஸ்.பிரனோயை 21-15, 21-16 என்ற நேர்செட்களில் எளிதாக வென்றார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சன்னை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-10, 23-21 என்ற செட்கணக்கில் விக்டர் வெற்றி பெற்றார்.
நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் லக்சயா சென், முன்னாள் உலக சாம்பியனான விக்டருடன் மோத உள்ளார்.
சேலத்தில் காந்தி விளையாட்டு மைதானத்திற்கு மாற்றாக ரூ.20 கோடியில் புதிய விளையாட்டு மைதானம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சேலம்:
சேலம் காந்தி விளையாட்டு மைதானம் கடந்த 1972-ம் ஆண்டு பொதுப்பணித்துறையால் அமைக்கப்பட்டது. இந்த மைதானம் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு தடகளம், கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், வில்வித்தை போன்ற விளையாட்டு வசதிகள் உள்ளன. நீச்சல் குளம், உள் விளையாட்டு அரங்கம் ஆகிய வசதிகளும் உள்ளன.
ஆனால் மைதானத்தில் ஆக்கி, கால்பந்து மற்றும் தடகளம் விளையாட்டிற்கு ஏற்ப செயற்கை விளையாட்டு தளம் அமைக்க வேண்டும், மேலும் உள் விளையாட்டு அரங்கத்தின் தரைதளத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்துவதன் மூலம் கைப்பந்து, இறகுபந்து கூடைப்பந்து உள்பட போட்டிகளுக்கு மாணவர்களை தயார் செய்ய முடியும்.
இதனால் காந்தி வி¬ளாயட்டு மைதானத்தை மாற்று இடத்தில் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானமாக அமைக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டு விளையாட்டு ஆணைத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.20 கோடி மதிப்பில் புதிதாக விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி மாவட்டத்தில் மைதானம் அமைக்க நிலங்கள் தேர்வு செய்யும் பணி நடந்தது.
இதில் சேலம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்திலும், இரும்பாலை மற்றும் ஏற்காடு அடிவாரத்திலும் என 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,
இதில் ஒரு இடத்தை தேர்வு செய்து ஒப்புதல் அளித்த பிறகு மைதானம் அமைக்கும் பணிகள் தொடங்கும். மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கவும் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் அந்த பணிகளும் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில அளவிலான பென்சாக் சிலாட் தற்காப்பு கலை போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட அணி முதலிடம் பெற்றது.
பரமத்தி வேலூர்:
தமிழ்நாடு பென்சாக் சிலாட் அசோசியேஷன் நடத்திய மாவட்டங்களுக்கு இடையே மாநில அளவிலான தமிழ்நாடு பென்சாக் சிலாட் தற்காப்பு கலை போட்டிகள் புன்னம் சத்திரத்தில் நடைபெற்றது. பாண்டியன் தலைமை ஏற்று போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பென்சாக் சிலாட் அசோசியேஷன் மாநில செயலாளர் மகேஷ் பாபு முன்னிலை வகித்தார் .
இதில் 22 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. முதல் முறையாக தமிழ்நாடு காவல்துறை அணி உட்பட 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் இறுதி நாளான நேற்று புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட அணி வென்றது.
இரண்டாவது இடத்தை தர்மபுரி மாவட்ட அணியும், முன்றாவது இடத்தை தமிழ்நாடு காவல்துறை அணியும் வென்றது. வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் அடுத்து நடக்கவிருக்கும் தென்னிந்திய அளவிலான போட்டிக்கும், தேசிய அளவிலான போட்டிக்கும் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
மவுண்ட் மவுங்கானு:
12-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக்கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் “ரவுண்டு ராபின்” முறையில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப் படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.
நேற்றுடன் 8 ஆட்டங்கள் முடிந்தன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 4 புள்ளிகளும், இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் தலா 2 புள்ளிகளும் பெற்றுள்ளன.இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் புள்ளி எதுவும் பெறவில்லை.
9-வது லீக் ஆட்டம் மவுண்ட் மவுங்கானுவில் இன்று நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன் எடுத்தது. தொடக்க வீராங்கனை லவ்ரா 75 ரன்னும், கேப்டன் சுனேலுஸ் 62 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் பாத்திமா சனா, குலாம் பாத்திமா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், டயானா பெய்க், நஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
224 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. முதல் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தாலும் சொஹைல்-நிதா தர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. இருவரும் அரை சதத்தை கடந்து வெளியேறினார்.
இதனையடுத்து அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் இஸ்மாயில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.






