என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கேரளா அணி வீரர்கள்
    X
    கேரளா அணி வீரர்கள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து:அரையிறுதியில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி கேரளா வெற்றி

    இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஹைதரபாத், ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.
    கோவா:
     
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர் கோவாவில் நடந்து வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்களுக்கு ஜாம்ஷெட்பூர், கேரளா , ஐதராபாத், ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் தகுதி பெற்று இருந்தன.

    நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில்  ஜாம்ஷெட்பூர் - கேரளா அணிகள் மோதின. 

    38வது நிமிடத்தில் கேரளா வீரர் சாஹல் அப்துல் சமது ஒரு கோல் அடித்தார். ஆட்டம் முடியும் வரை ஜாம்ஷெட்பூர் வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணி வெற்றி பெற்றது. 

    இன்று நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.அணி ஏ.டி.கே.மோகன் பகான் அணியை எதிர்கொள்கிறது.

    Next Story
    ×