என் மலர்
விளையாட்டு
உஸ்மான் கவாஜாவின் சதத்தால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
கராச்சி:
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கராச்சியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய உஸ்மான் கவாஜா அபாரமாக ஆடி சதமடித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 36 ரன்கள் குவித்தார். மார்னஸ் லபுஸ்ஷேன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். ஸ்டீவ் ஸ்மித் 72 ரன்கள் குவித்தார்.
ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, அஸ்ரப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். உஸ்மான் கவாஜாவும்(127), நாதன் லியோனும்(0) களத்தில் உள்ளனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இலங்கை அணி, 50 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
பெங்களூரு:
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணியை, 252 ரன்களில் சுருட்டியது இலங்கை. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் குவித்தார். விராட் கோலி 23 ரன்கள், ரிஷப் பண்ட் 39 ரன்கள், விஹாரி 31 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் சவால் அளித்தனர். 50 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் விக்கெட்டை காப்பாற்ற போராடிய மேத்யூஸ் 43 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.

இதனால் இன்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. நிரோஷன் டிக்வெல்லா 13 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட, இலங்கை அணி 166 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை இரண்டாவது நாள் ஆட்டம் நடபெறுகிறது.
நெருக்கடிக்கு மத்தியிலும் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து நம்பிக்கை அளித்த ஸ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பெங்களூரு:
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முக்கிய விக்கெட்டுகளை விரைவில் இழந்ததால் ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது.
கேப்டன் ரோகித் சர்மா (15), விராட் கோலி (23), மயங்க் அகர்வால் (4) ஆகியோர் ஏமாற்றம் அளித்த நிலையில், ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். விஹாரி 31 ரன்கள் சேர்த்தார். ஜடேஜா 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நெருக்கடிக்கு மத்தியிலும் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து நம்பிக்கை அளித்தார் ஸ்ரேயாஸ் அய்யர். அவர் 98 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 92 ரன்கள் குவித்து, கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இலங்கை தரப்பில் லசித் எம்புல்தெனிய, பிரவீன் ஜெயவிக்ரம தலா 3 விக்கெட் எடுத்தனர். தனஞ்செய டி சில்வா 2 விக்கெட், சுரங்கா லக்மல் ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான டூபிளசிஸ் ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளில் விளையாடி 2935 ரன்கள் எடுத்துள்ளார்.
புதுடெல்லி:
இந்த ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக டூபிளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான டூபிளசிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடி உள்ளார். அவரை இந்த சீசனில் பெங்களூரு அணி ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. தற்போது அவர் பெங்களூரு அணியின் 7வது கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். டி20 போட்டியில் டூபிளசிஸ் கேப்டனாக அணியை வழிநடத்துவது இதுவே முதல் முறை ஆகும்.

37 வயதான டூபிளசிஸ் ஐபிஎல் தொடரில் இதுவரை 100 போட்டிகளில் விளையாடி 2935 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த சீசனில் சென்னை அணிக்காக 633 ரன்கள் குவித்தார்.
புதிய கேப்டன் டூபிளசிசை முன்னாள் கேப்டன் விராட் கோலி வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘ஆர்சிபி அணியை டூபிளசிஸ் வழிநடத்திச் செல்வதற்கும் அவருக்குக் கீழ் விளையாடுவதற்கும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேக்ஸ்வெல் மற்றும் நாங்கள் தக்கவைத்துள்ள முக்கிய வீரர்களுடன், டூபிளசிஸ் தலைமை ஏற்பது ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும்’ என்று கோலி தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசன் முடிந்ததும் ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலம் சர்வதேச அளவில் 400 போட்டிகளில் ரோகித் சர்மா விளையாடி சாதனை படைத்துள்ளார்.
இந்தியா-இலங்கை அணிக்களுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடுகிறார். இதன் மூலம் ரோகித் சர்மா சர்வதேச அளவில் 400 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச அளவில் 400 போட்டிகளுக்கு மேல் விளையாடிய இந்திய அணி வீரர்கள் விவரம்:
664 - சச்சின் தெண்டுல்கர்
538 - எம்எஸ் டோனி
509 - ராகுல் டிராவிட்
458 - விராட் கோலி
433 - அசாருதீன்
424 - கங்குலி
403 - அனில் கும்ப்ளே
402 - யுவராஜ் சிங்
400 - ரோகித் சர்மா
இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் ரன் அவுட் முறையில் வெளியேறினார்.
பெங்களூர்:
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் களமிறங்கி விளையாடினர். 2-வது ஓவர் பெர்னாண்டோ வீசினார். அந்த ஓவரில் 4-வது பந்தில் மயங்க் அகர்வாலுக்கு எல்பிடபிள்யூ அப்பீல் கேட்க்கப்பட்டது. அதற்கு அம்பயர் அவுட் இல்லை என தெரிவித்தார். அதற்குள் மயங்க் அகர்வால் 1 ரன்னுக்கு முயற்சிக்கும் போது ரன் அவுட் ஆனார். கடைசியில் அந்த பந்து நடுவரால் நோ பால் என அறிவிக்கப்பட்டது. 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை இழந்து அகர்வால் வெளியேறினார்.
இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் விஹாரி ஜோடி சேர்ந்து ஆடினார். பொறுமையுடன் இருவரும் ஆடி ரன்களை சேர்த்தனர். இலங்கை அணியின் இடது கை பந்து வீச்சாளர் எம்புல்தெனிய பந்து வீச அழைக்கப்பட்டார். அவரது 2-வது ஓவரிலேயே இந்திய கேப்டன் ரோகித் சர்மா விக்கெட்டை அவர் கைப்பற்றினார். இதனால் இந்திய அணி 29 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்ததாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். ரசிகர்களின் ஆரவாரத்தோடு அவர் ஆடுகளத்திற்க்குள் அடியெடுத்து வைத்தார்.
A special bond with the crowd at the M Chinnaswamy Stadium  The King  in all his glory Follow the match  https://t.co/E9xO6hYigy#TeamIndia | #INDvSL | @imVkohli
— UKSUPPORT.RCB (@Uksuportrcb) March 12, 2022
| @Paytmpic.twitter.com/RltPhzuUi9
2 வருங்களாக சதம் அடிக்கவில்லை என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.
விராட் கோலியும் விஹாரியும் இலங்கை அணியின் பந்து வீச்சை சிறப்பாக சமாளித்து ஆடினர். குறிப்பாக விஹாரி சுழற்பந்து வீச்சாளரின் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். இந்நிலையில் 26 ஓவரில் விஹாரி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 81 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரிலேயே விராட் கோலியும் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். பந்து மிகவும் தாழ்ந்து வந்ததால் அவரால் சரியாக கணித்து ஆடமுடியாமல் அவுட் ஆனார். இதனால் விராட் கோலி சிறிது நேரம் களத்தில் சோகமாக காணப்பட்டார். அவர் 48 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார்.

அதன் பின்னர் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவர் 26 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து போல்ட் முறையில் வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜா 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இந்திய அணி தற்போது வரை 37 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் 21 ரன்னிலும் அஸ்வின் 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி சாதனை படைத்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் 39 வயதான கோஸ்வாமி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீராங்கனை என்ற சாதனையை கோஸ்வாமி படைத்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீராங்கனைகள் பட்டியலில் ஆஸ்திரேலியா வீராங்கனை புல்ஸ்டனை (39 விக்கெட்) பின்னுக்கு தள்ளி கோஸ்வாமி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் கைபற்றிய டாப் 5 வீராங்கனைகள் விவரம்:-
முதல் இடத்தில் இந்தியாவை சேர்ந்த கோஸ்வாமி (40 விக்கெட்), இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஃபுல்ஸ்டன் (39 விக்கெட்), மூன்றாம் இடத்தில் இங்கிலாந்து அணியை சேர்ந்த ஹோட்ஜ் (37 விக்கெட்), 4-வது இடத்தில் இங்கிலாந்து அணியை சேர்ந்த டெய்லர் (36 விக்கெட்), 5-வது இடத்தில் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் (33 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.
இந்தியா-இலங்கை அணிகள் இடையே மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு:
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜெயந்த் யாதவுக்கு பதிலாக அக்சர் படேல் இணைந்துள்ளார்.
இந்திய அணியின் விவரம்:
மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா
மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தது.
ஹேமில்டன்:
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் 62 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது.
இந்திய அணி 3-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை இன்று எதிர்கொண்டது. மிதாலி ராஜ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஸ்மிரிதி மந்தானாவும், யாஷிகா பாட்டியாவும் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். யாஷிகா 31 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் 21 பந்துகளில் 6 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.
அடுத்து களம் வந்த கேப்டன் மிதாலி ராஜ் 5 ரன்னிலும், தீப்தி ஷர்மா 15 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் இந்திய அணி 13.5 ஓவர்களில் 78 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது.
4-வது விக்கெட்டான மந்தனா-ஹர்மன்பிரீத் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு அபாரமாக விளையாடினர். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்தை விளாசி தள்ளினர்.
இருவரும் சதம் அடித்தனர். மந்தனா முதலில் 108 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 100 ரன்னைத் தொட்டார். 25 வயதான அவர் 5-வது முறையாக (67-வது போட்டி) சதம் அடித்தார்.
அதைத் தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர் 100 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் செஞ்சுரி அடித்தார். 114-வது போட்டியில் விளையாடும் அவருக்கு இது 4-வது சதமாகும்.
மந்தனா 123 ரன் எடுத்திருந்த போது ஆட்டம் இழந்தார். 119 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 262 ஆக (42.3 ஓவர்) இருந்தது. மந்தனாவும், ஹர்மன்பிரீத் கவுரும் 4-வது விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது முக்கிய அம்சமாகும்.
அதைத் தொடர்ந்து இந்திய விக்கெட்டுகள் சரிந்தது. ரிச்சாகோஷ் 5 ரன்னிலும், பூஜா 10 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஹர்மன்பிரீத் கவுர் 109 ரன்னில் 7-வதாக அவுட் ஆனார். அவர் 107 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். ஜூலன் கோஸ்வாமி 2 ரன்னில் அவுட் ஆனார்.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 317 ரன் குவித்தது. சினேகா ரானா 2 ரன்னும், மேக்னா சிங் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இதனையடுத்து 318 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு டியான்ட்ரா டாட்டின்- ஹெய்லி மேத்யூஸ் ஜோடி 100 ரன்களை எடுத்து அசத்தலான அடித்தளம் கொடுத்தது. டியான்ட்ரா டாட்டின் 62 ரன்கள் எடுத்தும் ஹெய்லி மேத்யூஸ் 43 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ரானா3 விக்கெட்டுகளையும் மேக்னா சிங் 2 விக்கெட்டுகளையும் கோ ஸ்வாமி, ராஜேஸ்வரி, பூஜா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஒரு கட்டத்தில் 100 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த 62 ரன்கள் எடுப்பதற்குள் 10 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...மகளிர் உலகக்கோப்பையில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா-ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி
சர்வதேச அளவில் பெண்கள் உலகக்கோப்பை போட்டிகளில் 4-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்து ஸ்மிருதி மந்தனா-ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சாதனை படைத்துள்ளது.
மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதி வருகிறது. இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்தனர். ஸ்மிருதி மந்தனா 123 ரன்னிலும் ஹர்மன்பிரீத் கவுர் 109 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இந்த ஜோடி 4 விக்கெட்டுக்கு 184 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் உலக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனைகள் என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா-ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி பிடித்தது. இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக திருஷ் காமினி-புனம் ரவுத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்ததே அதிகப்பட்சமாக இருந்தது. இந்த சாதனையை ஸ்மிருதி மந்தனா-ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி முறியடித்தது.
பெண்கள் ஒருநாள் போட்டியில் 4-வது விக்கெட்டுக்கு இந்திய அளவில் அதிக ரன்கள் எடுத்த ஜோடி இதுவாகும். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்மன்பிரீத் கவுர்-தீப்தி சர்மா ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்ததே சிறந்தது.
மேலும் சர்வதேச அளவில் பெண்கள் உலகக்கோப்பை போட்டிகளில் 4-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற சாதனையையும் ஸ்மிருதி மந்தனா-ஹர்மன்பிரீத் கவுர் படைத்துள்ளது.
இதையும் படியுங்கள்...இலங்கை அணிக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: அணுகுமுறையில் மாற்றம் அவசியம்- பும்ரா
ஆடுகளத்தன்மையை முழுமையாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை முடிவு செய்வோம் என இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா தெர்வித்துள்ளார்.
இந்திய அணியின் துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிங்க் பந்து டெஸ்ட் கிரிக்கெட் (பகல்-இரவு) போட்டியில் எத்தகைய அணுகுமுறை தேவை என்பதில் இன்னும் நாங்கள் கற்றுக்கொண்டு தான் இருக்கிறோம். தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் என்ற முறையில் முடிந்த வரை சூழலுக்கு தக்கபடி நம்மை சீக்கிரம் தகவமைத்து கொள்ள வேண்டியது முக்கியமாகும்.
பீல்டிங்கின் போது பிங்க் பந்து வித்தியாசமாக தோன்றும். நீங்கள் நினைத்ததை விட பந்து வேகமாக கைக்கு வந்து விடும். வழக்கமான டெஸ்ட் போட்டியில் காலையில் பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆகும். ஆனால் பகல்-இரவு டெஸ்ட் பிற்பகலில் தொடங்குவதால் அந்த சமயத்தில் பந்து பெரிய அளவில் ‘ஸ்விங்’ ஆகாது. ஆனால் மாலைப்பொழுதில் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்ய முடியும். இது போன்ற விஷயங்கள் குறித்து நாங்கள் ஆலோசித்து இருக்கிறோம்.
நாங்கள் அதிகமான பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. இதுவரை எதிர்கொண்ட 3 போட்டிகளையும் வெவ்வேறு விதமான சீதோஷ்ண நிலையில் விளையாடி இருக்கிறோம். எனவே இத்தகைய போட்டிக்கு, இந்த மாதிரி தான் நம்மை மாற்றிக்கொண்டு தயாராக வேண்டும் என்று குறிப்பிட்ட எந்த அளவுகோலும் வைக்க முடியாது.
இதுவரை கிடைத்துள்ள அனுபவங்களை பகிர்ந்து அதற்கு ஏற்ப திட்டங்களை வகுக்க முயற்சிக்கிறோம். ஆடுகளத்தன்மையை முழுமையாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை முடிவு செய்வோம்.
இவ்வாறு பும்ரா கூறினார்.
வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது ஆட்ட திட்டத்தை அமல்படுத்துவதற்கும், அவர்களது ஒட்டுமொத்த திறன் மேம்பாட்டுக்கும் உதவுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என மலிங்கா கூறியுள்ளார்.
மும்பை:
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். 38 வயதான மலிங்கா ஐ.பி.எல். போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலிங்கா கூறுகையில், ‘ஐ.பி.எல். போட்டிக்கு மீண்டும் திரும்புவது அற்புதமான உணர்வை தருகிறது. ராஜஸ்தான் அணியிருடன் இணைவது எனக்கு கிடைத்த கவுரவமாகும். எங்களிடம் இருக்கும் வேகப்பந்து வீச்சு குழுவை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது ஆட்ட திட்டத்தை அமல்படுத்துவதற்கும், அவர்களது ஒட்டுமொத்த திறன் மேம்பாட்டுக்கும் உதவுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்றார். ராஜஸ்தான் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளராக இருந்த பேடி அப்டன் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.






