என் மலர்tooltip icon

    விளையாட்டு

    குறைந்த ரன்னில் அவுட் ஆனதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சராசரி 5 ஆண்டுகளுக்கு பிறகு 50 ரன்களுக்கு கீழ் சென்றது.
    இந்திய வீரர் விராட் கோலி இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 23 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 2-வது இன்னிங்சிலும் விராட் கோலி (13 ரன், 16 பந்து) அதே போன்று எல்.பி.டபிள்யூ., முறையில் விக்கெட்டை தாரை வார்த்தார். அதாவது சுழற்பந்து வீச்சாளர் ஜெயவிக்ரமா வீசிய பந்து ஓரளவு எழும்பி வரும் என்று நினைத்தார். ஆனால் கால்முட்டிக்கும் கீழ் தாழ்வாக ஓடிய அந்த பந்து காலில் பட்டு எல்.பி.டபிள்யூ.க்கு வித்திட்டது.

    குறைந்த ரன்னில் வீழ்ந்ததால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சராசரி 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 50 ரன்களுக்கு கீழ் சென்றது. இதுவரை 101 டெஸ்டில் ஆடியுள்ள கோலி 27 சதம் உள்பட 8,043 ரன்கள் (சராசரி ரன் 49.95 ) எடுத்துள்ளார். ஒருவேளை இந்த இன்னிங்சில் அவர் 20 ரன்னுக்கு மேல் எடுத்திருந்தால் 50 ரன் சராசரியை தக்க வைத்திருப்பார்.

    மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் கண்டு 28 மாதங்கள் உருண்டோடி விட்டது. இனி ஐ.பி.எல். போட்டி வரப்போவதால் அடுத்த சர்வதேச சதத்திற்கான வாய்ப்பை பெற ஜூன் மாதம் வரை காத்திருக்க வேண்டியது தான்.

    ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென்னை வீழ்த்தி தாய்லாந்து வீரர் விடிட்சர்ன் தங்கம் வென்றார்.
    ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், தாய்லாந்து வீரர் விடிட்சர்னை எதிர்கொண்டார். 

    இதில், லக்சயா சென் 18-21, 15-21 என்ற நேர் செட்களில் தோற்றார். இதன்மூலம் ஜெர்மன் ஓபனில் லக்சயா சென் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
    தங்களுக்கு பிடித்த நட்சத்திர வீரரை அருகில் பார்க்கும் வாய்ப்பை உணர்ந்த மூன்று ரசிகர்கள், தடுப்பு வேலியை உடைத்து வீரர்களை நோக்கி ஓடினர்.
    பெங்களூரு:

    இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, மூன்று ரசிகர்கள் பாதுகாப்பை மீறி விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்தனர்.

    இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய போது ஆறாவது ஓவரில் முகமது ஷமியின் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். 

    அப்போது ஸ்லிப் பகுதியில் கோலி  நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த மூன்று ரசிகர்கள், தங்களது நட்சத்திர வீரரை அருகில் பார்க்கும் வாய்ப்பை உணர்ந்து, பாதுகாப்பு வேலியை உடைத்து மைதானத்திற்குள் நுழைந்தனர்.

    அவர்களில் ஒரு ரசிகர் தனது மொபைல் போன் மூலம் கோலி அனுமதியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.இதனால் அந்த பகுதியில் சிறிய சலசலப்பு காணப்பட்டது.இதையடுத்து விரைந்து சென்ற பாதுகாப்புப் பணியாளர்கள் ரசிகர்களை வெளியேற்றினர்.

    முன்னதாக மொஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டின் போது ஒரு பார்வையாளர் விளையாடும் பகுதிக்குள் நுழைந்தார், ஆனால் பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
    இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.
    இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி இரண்டாம் இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி இலங்கை அணிக்கு 447 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி  இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. 

    இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக ஆடிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், 28 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் அடித்து சாதனை படைத்தார். இதன்மூலம் கபில் தேவின் 40 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். 

    இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய அணியின் துணை கேப்டனும், வேக பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா,
    பேசியதாவது: 

    ரிஷப்பண்ட் தனது வழக்கமான பாணிக்கு திரும்பியுள்ளார்.  இயற்கையாகவே அவர் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்யக் கூடியவர். அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் ஒரே மாதிரியான டெம்போவுடன் விளையாட மாட்டார்கள், அதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். 

    அவர் (ரிஷப்) இன்னும் இந்த விளையாட்டைப் பற்றி மேலும் மேலும் அனுபவத்தையும் கற்றுக்கொள்கிறார். அவரது திட்டம் (தாக்குதல்) முன்னோக்கி செல்வது, அது எங்களுக்கு சாதகமான அறிகுறியாகும்.  இவ்வாறு பும்ரா தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது சொந்த மண்ணில் முதல் முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது குறித்து பேசிய பும்ரா, அது நன்றாக இருந்தது என்றும், சில சமயங்களில் நீங்கள் சொந்த மண்ணில் விளையாடுவதைத் தவற விடுவீர்கள் எனவும் தெரிவித்தார். 

    இந்த நேரத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அணியின் வெற்றிக்கு எனது பங்களிப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
    தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 160 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
    கராச்சி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா முதல் நாள் ஆட்டத்தில் சதமடித்து அசத்தினார். நேற்று இரண்டாம் ஆட்டத்தில் அவர் 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 36 ரன்கள் அடித்தார். ஸ்டீவ் ஸ்மித் 72 ரன்களும், அலெக்ஸ் கேரி 93 ரன்களும் குவித்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 505 ரன்கள் குவித்துள்ளது. 

    அந்த அணியின் மிட்சேல் ஸ்டார்க்கும்(28), பாட் கம்மின்ஸ்சும்(0) களத்தில் உள்ளனர். இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 
    அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்ததுடன், கபில் தேவின் 40 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.
    பெங்களூரு:

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 252 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களில் சுருண்டது.

    இதையடுத்து 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி,  9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்தார். அத்துடன் கபில் தேவின் 40 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். இதேபோல் நீண்ட நேரம் களத்தில் நின்ற ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் பிரவீன் ஜெயவிக்ரம 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லசித் எம்புல்தெனிய 3 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மீதமுள்ளது. எனினும் விக்கெட்டுகளை காப்பாற்ற இலங்கை அணி கடுமையாக போராடவேண்டியிருக்கும். 
    ஐந்தாவது வீரராக களமிறங்கிய ரிஷப் பண்ட், 28 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் அடித்து சாதனை படைத்தார்.
    பெங்களூரு:

    இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 252 ரன்களும், இலங்கை 109 ரன்களும் எடுத்திருந்தன. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை ஆடி வரும் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. 

    அதிரடியாக ஆடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிவேகமாக அரைசதம் கடந்தார். 28 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் அடித்து சாதனை படைத்தார். இதன்மூலம் கபில் தேவின் 40 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். 

    ரிஷப் பண்ட்

    டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக அரை சதம் கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை கபில் தேவ் பெற்றிருந்தார். 1982ம் ஆண்டு டிசம்பர் மாதம் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, கபில் தேவ் 30 பந்துகளில் அரை சதம் கடந்தார். தற்போது அதைவிட குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்து, கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார் ரிஷப் பண்ட்.
    உள்ளூர் போட்டிகளில் இதுபோன்ற ஆடுகளத்தில் விளையாடிய அனுபவம் இருந்ததால் தன்னால் திட்டமிட்டு நேர்மறையுடன் விளையாட முடிந்ததாக ஸ்ரேயாஸ் அய்யர் கூறினார்.
    பெங்களூரு:

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்- இரவு ஆட்டமாக பெங்களூரில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி 59.1 ஓவர்களில் 252 ரன் எடுத்து ஆல்அவுட் ஆனது. பந்துவீச்சுக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் ஒருவர் மட்டுமே தாக்குப்பிடித்து சிறப்பாக ஆடினார். அவர் 98 பந்துகளில் 92 ரன் எடுத்தார். இதில் 10 பவுண்டரியும், 4 சிக்சரும் அடங்கும். அவருக்கு அடுத்தபடியாக ரி‌ஷப்பண்ட் 39 ரன் எடுத்தார். 

    இந்த நிலையில் சதம் அடிக்காதது தனக்கு ஏமாற்றத்தை அளித்ததாக ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த ஆடுகளம் முதல் நாளிலேயே 5-வது நாளில் இருப்பது போன்று கடினமான நிலையில் இருந்தது. உள்ளூர் போட்டிகளில் இது மாதிரியான ஆடுகளத்தில் விளையாடிய அனுபவம் இருந்தது. இதனால் என்னால் திட்டமிட்டு நேர்மறையுடன் விளையாட முடிந்தது.

    சதத்தை தவறவிட்டது ஏமாற்றம் அளித்தது. ஆனால் அணி போராடும் வகையில் ஸ்கோரை தொட் டுள்ளது. இதனால் வருத்தம் அடையவில்லை.

    உண்மையிலேயே இந்த ஆடுகளத்தில் 50 ரன் எடுப்பது சதத்தை போன்றது. இதனால் தான் நான் அவ்வாறு எனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினேன்.

    இவ்வாறு ஸ்ரேயாஸ் அய்யர் கூறினார். 
    பெங்களூருவில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    பெங்களூரு:

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 252 ரன்களில் ஆல் அவுட்டானது. ஸ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் குவித்தார். விராட் கோலி 23 ரன்கள், ரிஷப் பண்ட் 39 ரன்கள், விஹாரி 31 ரன்கள் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டும், தனஞ்செய டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்களின் அசத்தலான பந்து வீச்சால் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் மேத்யூஸ் ஓரளவு தாக்குப்பிடித்து 43 ரன்கள் எடுத்தார். 
     
    முதல் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. டிக்வெலா 13 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மீதமுள்ள விக்கெட்களை பும்ராவும் அஸ்வினும் கைப்பற்றினர்.
    இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட, இலங்கை அணி 143 ரன்கள் பின்தங்கி உள்ளது.
    நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெரி 68 ரன்னும், ஒரு விக்கெட்டும் வீழ்த்தி ஆட்டநாயகி விருது பெற்றார்.
    வெல்லிங்டன்:

    வெல்லிங்டனின் நடந்த மகளிர் உலக கோப்பையின் 11வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக எல்லிஸ் பெரி 68 ரன்னும், டஹிலா மெக்ராத் 57 ரன்னும், கார்ட்னர் 48 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் டஹுஹு 3 விக்கெட் வீழ்த்தினார்.  

    இதையடுத்து, 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் சிக்கி விரைவில் ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து 30.2 ஓவரில் 128 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. எமி சாட்டர்வெயிட் 44 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியா 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட்டும், அமெண்டா வெல்லிங்டன், ஆஷ்லெக் கார்ட்னர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென் (20), இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென் உலக சாம்பியன் விக்டரை எதிர்கொண்டார். 

    இதில், லக்சயா சென் 21-13, 12-21, 22-20 என்ற செட்களில் வென்றார்.

    சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தப் போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் லக்சயா சென், தாய்லாந்து வீரரை சந்திக்க உள்ளார்.
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் இங்கிலாந்தின் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.
    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 311 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பேர்ஸ்டோவ் 109 ரன் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீசின் ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கீமர் ரோச் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 375 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பானர் 123 ரன்னும், பிராத்வெயிட் 55 ரன்னும், ஹோல்டர் 45 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், லீச், ஓவர்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 64 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை ஆடியது. ஆட்டத்தின் பிற்பாதியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டடது. 4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து ஒரு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தது. கிராலே 117 ரன்னுடனும், ஜோ ரூட் 84 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதம் விளாசினார். கிராலே 121 ரன்னிலும், ரூட் 109 ரன்னிலும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    இதனால் இங்கிலந்து இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 349 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    இதைத்தொடர்ந்து, 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்களான பிராத்வெயிட் 33 ரன்னிலும், காம்பெல் 22 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்துவந்த புரூக்ஸ் 5 ரன்னில் வெளியேறினார். 

    இறுதியில் 5-ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் பானர் 38 ரன்னிலும், ஹோல்டர் 37 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இதனால் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

    ஆட்ட நாயகன் விருது வெஸ்ட் இண்டீஸ் வீரர் பானருக்கு வழங்கப்பட்டது. இரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பார்படாசில் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது.
    ×