என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி
    X
    ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி

    கராச்சி டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிராக 505 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா

    தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 160 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
    கராச்சி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா முதல் நாள் ஆட்டத்தில் சதமடித்து அசத்தினார். நேற்று இரண்டாம் ஆட்டத்தில் அவர் 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 36 ரன்கள் அடித்தார். ஸ்டீவ் ஸ்மித் 72 ரன்களும், அலெக்ஸ் கேரி 93 ரன்களும் குவித்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 505 ரன்கள் குவித்துள்ளது. 

    அந்த அணியின் மிட்சேல் ஸ்டார்க்கும்(28), பாட் கம்மின்ஸ்சும்(0) களத்தில் உள்ளனர். இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 
    Next Story
    ×