என் மலர்
விளையாட்டு

விக்கெட் வீழ்த்திய எல்லிஸ் பெரியை பாராட்டும் சக வீராங்கனைகள்
மகளிர் உலக கோப்பை - நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெரி 68 ரன்னும், ஒரு விக்கெட்டும் வீழ்த்தி ஆட்டநாயகி விருது பெற்றார்.
வெல்லிங்டன்:
வெல்லிங்டனின் நடந்த மகளிர் உலக கோப்பையின் 11வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக எல்லிஸ் பெரி 68 ரன்னும், டஹிலா மெக்ராத் 57 ரன்னும், கார்ட்னர் 48 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் டஹுஹு 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் சிக்கி விரைவில் ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து 30.2 ஓவரில் 128 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. எமி சாட்டர்வெயிட் 44 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியா 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட்டும், அமெண்டா வெல்லிங்டன், ஆஷ்லெக் கார்ட்னர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Next Story






