என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியதன் மூலம் உலகக்கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் சாதனையை மிதாலி ராஜ் சமன் செய்தார்.

    ஹாமில்டனில் நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது. 

    261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 46.4 ஓவர்களில் 198 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

    இந்த ஆட்டத்தின் மூலம் 6 உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் மேலும் ஒரு சாதனையை தன்வசப்படுத்தினார். நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியதன் மூலம் உலக கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்க்கின் (23 ஆட்டங்கள்) சாதனையை மிதாலி ராஜ் சமன் செய்தார்.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பானர் சதமடித்து அசத்தினார்.
    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 311 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பேர்ஸ்டோவ் 109 ரன் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீசின் ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கீமர் ரோச் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ்  இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. பானர் 34 ரன்னும், ஹோல்டர் 43 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

    இந்நிலையில், சிறப்பாக ஆடிய பானர் சதமடித்தார். அவர் 121 ரன்னில் ஆட்டமிழந்தார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 373 ரன்கள் எடுத்துள்ளது. 

    தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணி 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
    நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
    ஹாமில்டன்:

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 260 ரன்களை எடுத்தது. அமெலியா கெர் 50 ரன்னும், எமி சாட்டர்வெய்ட் 75 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா 198 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 62 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்திய வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி நேற்று ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் உலக கோப்பையில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை இவர் சமன் செய்தார்.

    ஆஸ்திரேலியாவின் வின் புல்ஸ்டன் ஏற்கனவே உலக கோப்பையில் 39 விக்கெட் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    முன்னாள் உலக சாம்பியனான பி.வி.சிந்து, தன்னை விட தரநிலையில் பின்தங்கி உள்ள சீன வீராங்கனை ஜாங் யி மேனை எதிர்கொண்டார்.

    ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற சிந்து, இரண்டாம் சுற்று ஆட்டத்தில் தன்னை விட தரநிலையில் பின்தங்கி உள்ள சீன வீராங்கனை ஜாங் யி மேனை எதிர்கொண்டார்.

    முதல் செட் ஆட்டத்தில் இருவரும் 5-5 என சமநிலையில் இருந்தபோது பிரேக் செய்த ஜாங், அதன்பின்னர் தொடர்ந்து 6 புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்றார். சிந்துவால் அதை முறியடிக்க முடியவில்லை. இறுதியில் அந்த செட்டை 14-21 என இழந்தார். ஆனால் அடுத்த செட்டை கடுமையாக போராடி 21-15 என கைப்பற்றினார் சிந்து. ஆனால், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தில் மீண்டும் சிந்துவுக்கு கடும் சவால் அளித்த ஜாங் அந்த செட்டை எளிதாக கைப்பற்றினார்.

    இதனால் 14-21 21-15 14-21 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்த சிந்து, போட்டியில் இருந்து வெளியேறினார்.  அடுத்த வாரம் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் பி.வி.சிந்துவுக்கு இந்த தொடர் ஏமாற்றமான தொடக்கமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    மாநில கைப்பந்து போட்டியில் 3-வது இடம் பிடித்த ஆத்தூர் அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    சேலம்:

    மாநில அளவில் பெண்களுக்கான கைப்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது. 

    இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மகளிர் கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இப்போட்டியில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மகளிர் கைப்பந்து அணியினர் கலந்துகொண்டு 3-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். 

    இதனையடுத்து சேலத்தில் நடந்த பாராட்டு விழாவில் தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக புரவலர் ராஜ்குமாரை சந்தித்து மாணவிகள் வாழ்த்து பெற்றனர். 

    அப்போது கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கும், சிறந்த வீராங்கனையாக தேர்வான நிதிஷா என்ற மாணவிக்கும் மாற்ற மாணவிகளுக்கும் புரவலர் ராஜ்குமார் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக அசோசியேட் செயலாளர் சண்முகவேல், சாய் விளையாட்டு விடுதி முன்னாள் உதவி இயக்குனர் ராஜாராம், பயிற்சியாளர் பரமசிவன், நந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் ஹர்மன்பிரீத் கவுர் அதிகப்பட்சமாக 71 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
    ஹாமில்டன்:

    மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில், இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு பதிலாக யாஸ்திகா பாட்டியா அணியில் சேர்க்கப்பட்டார்.

    நியூசிலாந்து அணி தொடக்கத்தில் சற்று சரிவை சந்தித்தது.  தொடக்க ஆட்ட வீராங்கனையான சுசீ பேட்ஸ் (5) ரன் அவுட் முறையில் வெளியேறினார்.  மற்றொரு வீராங்கனையான சோபி (35 ரன்கள்), கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  எனினும், அமெலியா கெர் மற்றும் எமி சாட்டர்வெய்ட் அரை சதம் விளாசினர்.  அவர்கள் முறையே 50 மற்றும் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கிரீன் (27), கேத்தி (41), ஹெய்லி (1), லீ தகுகு (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து உள்ளனர்.  ஜெஸ் கெர் ரன் எதுவும் எடுக்கவில்லை.  மெக்கே (13), ஹன்னா (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இந்நிலையில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்களை எடுத்தது.  

    261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்ட வீராங்கனைகள் யாஸ்திகா (28) ஸ்மிரிதி மந்தனா (6) ரன்களில் ஆட்டமிழந்தனர்.  தீப்தி, எல்.பி.டபிள்யூ முறையிலும் (5), மிதாலி ராஜ் ஸ்டம்பிங் செய்யப்பட்டும் (31) ஆட்டமிழந்து உள்ளனர்.  எனினும், ஹர்மன்பிரீத் கவுர் 71 (63 பந்துகள் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அரை சதம் விளாசினார்.  ரிச்சா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.  ஸ்னேஹ் ராணா (18), பூஜா (6), ஜுலன் கோஸ்வாமி (15), ராஜேஷ்வரி (0) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  இந்திய அணி 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் எடுத்து உள்ளது.  இதனால், நியூசிலாந்து 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.
    இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் போட்டியை நடத்த ஆஸ்திரேலியா விருப்பமாக உள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் ஹாக்லி தெரிவித்துள்ளார்.
    ராவல்பின்டி:

    இந்தியாவும், பாகிஸ்தானும் 2012-13-க்கு பிறகு நேரடி கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. அரசியல் சூழல் காரணமாக இருநாடுகள் இடையேயான நேரடி போட்டி நடைபெறவில்லை.

    ஐ.சி.சி. போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் மோதுகின்றன.

    இந்த நிலையை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான ரமிஸ் ராஜா முயற்சி எடுத்து வருகிறார்.

    இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் போட்டியை ஆண்டுதோறும் நடத்தலாம் என்று பரிந்துரை செய்தார். ஐ.சி.சி. கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த போட்டி மூலம் கிடைக்கும் வருவாயை 4 நாடுகளும் சரி சமமாக பிரித்து கொள்ளலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

    இந்தநிலையில் ரமீஸ் ராஜாவின் பரிந்துரை குறித்து ஆலோசித்து வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் ஹாக்லி தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் போட்டியை நடத்த ஆஸ்திரேலியா விருப்பமாக உள்ளது என்று அவர் கூறி உள்ளார்.

    பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியை பார்க்க அவர் ராவல்பின்டி சென்றார். அப்போது ஹாக்லே கூறியதாவது:-

    3 நாடுகள் போட்டி எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு போட்டியை நடத்த ஆர்வமாக உள்ளோம். ஆஸ்திரேலியாவில் ஏராளமான இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் வசிக்கிறார்கள்.

    இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியை காண அவர்கள் ஆவலாக உள்ளனர். இதை நாங்கள் நடத்த தயாராக உள்ளோம்.

    அக்டோபர் 23-ந் தேதி மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கபில்தேவின் சாதனையை முறியடித்தது கனவு போல் உள்ளது எனவும் இவ்வளவு விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்று நான் எண்ணியதே இல்லை எனவும் தமிழக வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
    பெங்களூர்:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். இலங்கைக்கு எதிராக மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதோடு பேட்டிங்கில் அரை சதம் அடித்தார்.

    6 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் சென்னையை சேர்ந்த அஸ்வின் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த கபில்தேவின் சாதனையை முறியடித்தார்.

    கபில்தேவ் 434 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அஸ்வின் 436 விக்கெட்டுகளை எடுத்து அவரை தாண்டி இந்திய வீரர்களில் தற்போது 2-வது இடத்தில் உள்ளார்.

    இந்தநிலையில் தன்னுடைய சாதனையை முறியடித்த அஸ்வினை பாராட்டும் விதமாக அவரது வீட்டுக்கு கபில்தேவ் பூங்கொத்து ஒன்றை அனுப்பி உள்ளார்.

    இதுதொடர்பாக அஸ்வின் அளித்த வீடியோ பேட்டியில் கூறியதாவது:-

    கபில்தேவின் சாதனையை முறியடித்தது கனவு போல் உள்ளது. இவ்வளவு விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்று நான் எண்ணியதே இல்லை.

    கபில்தேவ் என் வீட்டுக்கு பூங்கொத்து அனுப்பி, கைப்பட வாழ்த்து கடிதத்தையும் அனுப்பி இருந்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    நிருபர்கள் சந்திப்பின் போது கேப்டன் ரோகித் சர்மா என்னை மிகவும் பாராட்டினார். ஒருநாள் அவர் என்னை அழைத்து பேசினார். அப்போது, “அணியின் கூட்டங்களில் நீ நன்கு பேசுவதற்காக பாராட்டுகிறேன்” என்றார்.

    மேலும் அணிக்கு தேர்வாகி விட்டால் ஆடுகளத்தில் அடிப்படை விசயங்களை ஒழுங்காக செய்ய சிரமப்படக்கூடாது என்றும் சொன்னார். இது எனக்கான பாதையை திறந்து விட்டது.

    இவ்வாறு அஸ்வின் கூறி உள்ளார். 

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் பூஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    ஹேமில்டன்:

    12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் “ரவுண்டு ராபின்” முறையில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் 7 ஆட்டங்கள் முடிந்துள்ளன. ஆஸ்திரேலியா , வெஸ்ட் இண்டீஸ் 2 வெற்றியுடன் தலா 4 புள்ளிகளும், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றியுடன் தலா 2 புள்ளிகளும் பெற்றுள்ளன.

    நியூசிலாந்து ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளி பெற்றுள்ளது. இங்கிலாந்து , வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 2 தோல்வியுடன் புள்ளி எதுவும் பெறவில்லை.

    8-வது லீக் ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடந்தது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின.

    இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். 9 ரன்னில் நியூசிலாந்தின் முதல் விக்கெட் விழுந்தது. பேட்ஸ் 5 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

    கேப்டன் சோபிடேவின் 35 ரன்னில் வெளியேறினார். அவரது விக்கெட்டை பூஜா கைப்பற்றினார். அப்போது நியூசிலாந்து ஸ்கோர் 54ஆக இருந்தது.

    3-வது வரிசையில் களம் இறங்கிய அமேலியா கெர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். அவர் 63 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 50 ரன்னை தொட்டார். அவர் 50 ரன்னில் ராஜேஸ்வரி கெய்க்வாட் பந்தில் ஆட்டம் இழந்தார். எமி சாட்டர்த்வைட் 75 ரன்கள் எடுத்து பூஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பூஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 10 ஓவர் வீசி 34 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முன்னதாக ஒரு ரன் அவுட் முறையில் ஒருவரை வீழ்த்தினார்.
    சிறந்த வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் அமெலி கெர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதத்துக்கான (பிப்ரவரி) சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், ஐக்கிய அரபு அமீரக பேட்ஸ்மேன் விருத்தியா அரவிந்த், நேபாள அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திபேந்திர சிங் ஐரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

    இதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் அமெலி கெர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து தலா ஒருவர் சிறந்த வீரர், வீராங்கனை விருதுக்கு ஐ.சி.சி. யின் அங்கீகாரம் பெற்ற வாக்கு கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
    நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய 53 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்தியா 20-ல் வெற்றி பெற்றுள்ளது.
    ஹாமில்டன்:

    நியூசிலாந்தில் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை விழ்த்தியது.

    இந்நிலையில், இந்திய அணி முன்னாள் சாம்பியனான நியூசிலாந்து அணியுடன் இன்று மோதுகிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாட உள்ளது. 

    வலுவான நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது 
    நினைவிருக்கலாம்.
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீசின் பிராத்வெயிட், கேம்ப்பெல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தது.
    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். 48 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பேர்ஸ்டோவ் சிறப்பாக ஆடி சதமடித்தார். பென் ஸ்டோக்ஸ் 36 ரன்னும், பென் போக்ஸ் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.    

    முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 86 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 268 ரன் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவ் 109 ரன்னுடனும், கிறிஸ் வோக்ஸ் 24 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், 2ம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பேர்ஸ்டோவ் 140 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 311 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 

    வெஸ்ட் இண்டீசின் ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கீமர் ரோச் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 55 ரன்னில் ஆட்டமிழந்தார். கேம்ப்பெல் 35 ரன்னும், புரூக்ஸ் 18 ரன்னும், பிளாக்வுட் 11 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. 

    இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ்  அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. பானர் 34 ரன்னும், ஹோல்டர் 43 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
    ×