என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மிதாலி ராஜ்
    X
    மிதாலி ராஜ்

    மகளிர் உலக கோப்பை - நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு

    நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய 53 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்தியா 20-ல் வெற்றி பெற்றுள்ளது.
    ஹாமில்டன்:

    நியூசிலாந்தில் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை விழ்த்தியது.

    இந்நிலையில், இந்திய அணி முன்னாள் சாம்பியனான நியூசிலாந்து அணியுடன் இன்று மோதுகிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாட உள்ளது. 

    வலுவான நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது 
    நினைவிருக்கலாம்.
    Next Story
    ×