search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    லக்சயா சென்
    X
    லக்சயா சென்

    ஜெர்மனி ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய லக்சயா சென்

    லக்சயா சென் காலிறுதி ஆட்டத்தில் சக வீரரான எச்.எஸ்.பிரனோயை 21-15, 21-16 என்ற நேர்செட்களில் எளிதாக வென்றார்.

    ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென் (வயது 20) அரையிறுதிக்கு முன்னேறினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற லக்சயா சென், இன்றைய காலிறுதி ஆட்டத்தில் சக வீரரான எச்.எஸ்.பிரனோயை 21-15, 21-16 என்ற நேர்செட்களில் எளிதாக வென்றார். 

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சன்னை எதிர்கொண்டார். இப்போட்டியில்  21-10, 23-21 என்ற செட்கணக்கில் விக்டர் வெற்றி பெற்றார்.

    நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் லக்சயா சென், முன்னாள் உலக சாம்பியனான விக்டருடன் மோத உள்ளார்.
    Next Story
    ×